வேல்டு ரெக்கார்ட்: மம்முட்டி,மோகன்லால் படத்திற்கு கிடைக்காத பெருமை..இளம் நடிகருக்கு குவியும் வாழ்த்து
சென்னை:நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான மின்னல் முரளி படம் மலையாளத் திரையுலகில் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
மலையாளத் திரையுலகின் மன்னர்களான மம்முட்டி, மோகன்லால் படத்திற்கு கிடைக்காத இந்த பெருமை இளம் நடிகர் டொவினோ தாமஸின் திரைப்படத்திற்கு கிடைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாசிட்டிவான விமர்சனங்கள்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல மலையாள இளம் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த மின்னல் முரளி திரைப்படம், வெளி வந்ததிலிருந்து பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்று வந்தது. பல செலிபிரிட்டிகளும் படத்தையும் படத்தின் ஹீரோவையும் புகழ்ந்து தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை ஷேர் செய்திருந்தனர்.

அனைவரையும் கவரும் படம்
சூப்பர் ஹீரோ கதையில் டொவினோ தாமஸ் சிறப்பாக நடித்து இருப்பதாகவும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் விதத்தில் படம் இருப்பதாக பல தனியார் யூடியூப் சானல்களும் படம் குறித்து ரிவ்யூவ் கொடுத்திருந்தனர்.உலக சினிமாக்களுக்கு ரேட்டிங் அளிப்பதில் புகழ் பெற்ற பிரபல தனியார் இணைய தளமான ஐ..எம் .டி.பியில் 8.3 அளவிற்கு ரேட்டிங் பெற்றுள்ள இந்தப் படம் மலையாள சினிமாவில் இருந்து முதன்முதலாக ஓடிடியில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

புது உத்வேகம்
மின்னல் முரளிபடம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக நெட்பிளிக்ஸ் இல் உலக அளவில் மூன்றாவது இடத்தையும் இந்திய அளவில் முதலிடத்தையும் ரசிகர்களின் பேராதரவுடன் பெற்றுள்ளது.சுமார் 30 நாடுகளின் சினிமாக்களுக்கு இடையில் மலையாள சினிமா பெற்றுள்ள இந்த கொளரவம் மலையாள ஓடிடி சினிமா தளத்திற்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது.

புது சாதனை
கதையை மட்டுமே நம்பி அதை மட்டுமே மையமாக வைத்து பெரும்பாலும் குறைந்த அளவு பட்ஜெட் படங்களே தயாரிக்கப்பட்டு வரும் மலையாள சினிமா, உலக அளவில் இந்த இடத்தைப் பெற்றுள்ளதற்கு படக்குழுவினருக்கு பல்வேறு செலிபிரிடிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மிகப்பெரிய பட்ஜெட் படங்களே உலக அளவில் பேசப்படும் என்ற நிலைமாறி சிறிய பட்ஜெட் படங்களும் நன்றாக இருந்தால் அந்த லெவலை எட்டமுடியும் என்று மின்னல் முரளி படக்குழுவினர் நிரூபித்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications