மொதராத்திரி படத்தின் நிறை, குறைகள் இத்தனை இருக்கு..! இதை ஏன் கவனிக்கல? ரசிகர்களின் குமுறல்கள்
சென்னை: அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கிய முதல் ராத்திரி படம் தியேட்டரை விட்டு ஓடிடுக்கு வந்த பிறகும் படத்தைப் பற்றிய பேச்சு மட்டும் குறையவில்லை இந்த படத்தை பார்த்துவிட்டு பலரும் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரிஷிகாந்துக்கு இப்போ பெண் ரசிகைகள் மத்தியில் அதிக சப்போர்ட் கிடைத்த வருகிறது இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த பாரதி படத்தில் கேரக்டர் விமர்சனங்களை பெற்றாலும் மொதராத்திரி மருதுவாக பலரும் கொண்டாடுகிறார்கள்.
அதே நேரத்தில் இந்த படத்தை பார்த்த ஒருவர் வெளியிட்ட பதிவில், நிறைய நல்ல விஷயங்களை மிக அழகாகக் convey செய்திருக்கிறார்கள். அதுவும் வாழ்க்கையின் நுட்பமான பல விஷயங்களை ரொம்ப casual-ஆக, போகிற போக்கில் சொல்லிப் போகிற விதம் ரசிக்க வைக்கிறது.
ஆனால் 2nd half கொஞ்சம் dragging-ஆக இருந்தது. குறிப்பாக, உறவினர் ஆண்களின் கதாபாத்திரங்களை இன்னும் இயல்பாகக் காட்டியிருக்கலாம். ஏதோ கொஞ்சம் ஒட்டாத மாதிரி இருந்தது. நிறைய loop holes இருக்கிறது. சில விஷயங்கள் இன்னும் logical-ஆக இருந்திருக்கலாம்.
மருதுவும் முத்துவும் night walk போயிட்டு வந்தோம் என்று திரும்பி வந்திருக்கலாம்! ரொம்ப இழுவையாக இருந்தது... என நித்யா இறையன்பு என்ற facebook பக்கத்தில் கூறி இருக்கிறார்.

ரசிகர்கள் கருத்து
அதுபோல வெங்கடேஷ் குமார் என்பவர், ஒரு வசனம்... ஒட்டுமொத்த சாதிய மனநிலையையும் கேள்வி கேட்கும். மழை கொட்டிக்கிட்டிருக்குற நேரம். காணாமல் போன பெண்ணை தேடி ஒரு தந்தை புறப்படுகிறார். பைக் ஓட்டத் தெரியாத அவருக்கு உதவியாக ஒரு இளைஞன் கூட வருகிறான். பயணத்துல அந்த இளைஞன் கேட்குற அந்த ஒரு கேள்வி...
"சார்... நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல யாராவது வந்து உட்காரப் போறாங்களா?" அதற்கு முன்னாடி அந்த தந்தை ஏன் தள்ளி உட்கார்ந்திருந்தார் என்பதையும், அந்த கேள்வி எதை குத்திக்காட்டுது என்பதையும் புரிஞ்சுக்கிட்டா... அந்த scene இன்னும் வலிக்கும்.

தீண்டாமை கொடுமை
சாதியைப் பற்றி நீண்ட வசனம் பேசாமலேயே, ஒரு சாதாரண பயணத்தை வைத்து ஒரு பெரிய சமூக உண்மையை முகத்துக்கு நேராக காட்டியிருப்பாங்க. அந்த கேள்வி வர்ற இடம்... உண்மையிலேயே செருப்பால அடிச்ச மாதிரி என்று தன்னுடைய மனக்குமுறலை கொட்டி இருக்கிறார்.
மொத ராத்திரி இயக்குனருக்கு என்ன ஆச்சு? எல்லா மீம்ஸ்களிலும் செய்த செயல்.. இப்போ ட்ரெண்டே அவர் தான்!
அதுபோல இந்த படத்தில் அம்மா மகளாக நடித்து இருந்த நடிகை கேரக்டரையும் சிலர் பாராட்டி இருக்கிறார்கள். ஆனால் facebook பக்கத்தில் இன்னொரு ரசிகர் வெளியிட்ட பதிவு, எதிர்பார்த்த எதுவுமே நடக்காமல் போய், யாரிடமும் பகிர்ந்துகொள்ளாது மனதினுள்ளேயே அழுத்திக்கிடக்கும் துயரங்கள் ஒரு கட்டத்தில் வெடித்துவிடும்.

கிளைமேக்ஸ் காட்சி
இரண்டாம் பாதியில் இறுதிக்காட்சி தவிர்த்து நாயகிக்கு எந்த வசனமும் கிடையாது. பொங்கிவரும் அழுகையை தனக்குள்ளே அடக்கி அடக்கி இறுதியில் கதறிக் கொட்டுகிறாள். அது ஒட்டுமொத்த வாழ்வின் கோபமாக ஆங்காரமாக, திசையெங்கும் ஒலிக்கிறது.
பிறகு அமைதியானவளாய் கூட்டத்தைக் கடந்து தனியே நடந்துபோனவள், யாருமற்றவளாக சோர்ந்து அவனைத் திரும்பிப் பார்க்கிறாள். அந்த ஒற்றைப் பார்வையில் அவனுக்கு எல்லாம் புரிகிறது. கண்களைத் துடைத்தபடி அவளை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான். அதற்கு அன்பின் மொழியில் "இனி உனக்கு நான் இருக்கேன்" என்று பொருள் என படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பாராட்டி இருக்கிறார்.
இந்த படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஓடிடியில் வந்து அங்கேயும் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. ஆனாலும் தியேட்டரில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருப்பது பட கதைக்கு ரசிகர்கள் கொடுக்கும் சப்போர்ட் தான். அதற்கு சோசியல் மீடியாவும் காரணம். சமூக வலைத்தளத்தில் படத்தைப் பற்றி ஒரு சிலர் விமர்சித்தாலும் அதிகமானோர் பாராட்டி வருகிறார்கள். இந்த படத்தை நீங்க பாத்துட்டீங்களா? உங்களுடைய கருத்து என்ன பாஸ்!?



Click it and Unblock the Notifications
