மூக்குத்தி அம்மன் 2 டிரைலரில் முதல்வர் விஜய்? முகத்தை காட்டாமல் வந்த 3 அம்மன் கேரக்டர் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரம்மாண்டமான காட்சிகள், அம்மன் அவதாரம், வில்லன்களின் அறிமுகம் என டிரைலர் முழுக்க பல விஷயங்கள் இருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி ரசிகர்கள் மத்தியில் இப்போது இரண்டு கேள்விகள் அதிகமாக எழுந்துள்ளன. ஒன்று, டிரைலரில் முகத்தைக் காட்டாமல் வரும் அந்த முதல்வர் யார்? இன்னொன்று, கடைசியில் காட்டப்படும் மூன்று அம்மன்கள் யார் யார் என்பதுதான்.

முதல்வர் விஜய் ரெஃபரன்ஸ்

டிரைலரில் ஒரு காட்சியில் முதல்வர் விஜய் போன்ற தோற்றத்தில் ஒருவர் வருகிறார். அவருடைய முகம் தெளிவாகக் காட்டப்படவில்லை. ஆனால், அவர் அணிந்திருக்கும் உடைதான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. வெள்ளை நிற சட்டை, லைட் காக்கி நிற பேண்ட், கழுத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத் துண்டு என அந்த தோற்றம் நடிகர் விஜய்யின் அரசியல் அடையாளங்களை நினைவுபடுத்தும் வகையில் இருக்கிறது.

Mookuthi Amman Nayanthara Vijay Sundar C

இதனால், இது விஜய்யை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட காட்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, தமிழக அரசியலில் விஜய்யின் வருகைக்கு பிறகு அவரை சுற்றி சினிமாவிலும் பல விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், மூக்குத்தி அம்மன் 2 டிரைலரில் இப்படியொரு காட்சி இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே TN 2026 படத்தில் விஜய் போல நட்டி நடராஜன் கேரக்டரை சில இடங்களில் காட்டப்பட்டாலும் அது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த படத்தை சுந்தர் சி இயக்குவதால் விஜயை அவர் தவறாக காட்டவே மாட்டார் என்று ரசிகர்கள் இப்போதே சொல்லி வருகிறார்கள்.

மூன்று அம்மன்கள்

டிரைலரில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது. 3 அம்மன்கள் வருவது போன்ற காட்சி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே நயன்தாரா அம்மன் கேரக்டரில் நடிப்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், அவருடன் காட்சியளிக்கும் மற்ற இரண்டு அம்மன்கள் யார் என்பதுதான் இப்போது எழுந்துள்ள அடுத்த கேள்வி. நடிகைகள் ரம்யா கிருஷ்ணனும், குஷ்புவும் அம்மன் வேடத்தில் வருகிறார்களா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. சும்மாவே குஷ்பூ தன்னுடைய கணவர் சுந்தர் சி இயக்கும் படங்களில் சில காட்சிகளில் வந்து விடுவார். அதுபோல இப்போதும் தன்னுடைய ஃப்ரெண்ட் ரம்யா கிருஷ்ணனையும் கூட்டிக்கொண்டு வருகிறாரா என்ற கேள்விகளும் வருகிறது.

Mookuthi Amman Nayanthara Vijay Sundar C

மூக்குத்தி அம்மன் 2 ட்ரெய்லர்

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா அம்மனாக மட்டுமின்றி, காவல்துறை அதிகாரியாகவும் வருவது டிரைலரில் தெரியவந்துள்ளது. மறுபக்கம், ரெஜினா கசாண்ட்ரா நெகட்டிவான கதாபாத்திரத்தில் வருகிறார். தெய்வீக சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து படம் உருவாகியிருப்பது போல காட்சிகள் அமைந்துள்ளன. பிரம்மாண்டமான காட்சிகளும், கிராபிக்ஸ் காட்சிகளும் டிரைலரில் இருக்கிறது.

2020-ல் வெளியான முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்தார். இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்போதைக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது அந்த முகம் காட்டப்படாத முதல்வர் கதாபாத்திரமும், 3 அம்மன்கள் யார் என்ற கேள்வியும்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+