லேட்டஸ்ட் துள்ளுவதோ இளமை..இயக்குனர் இவரா..இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
சென்னை: முதல்முறையாக Zee 5 ஓடிடியில் முதல் நீ முடிவும் நீ திரைப்படம் வெளியாக இருக்கின்றது.
இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

'Zee5' ஓடிடியில் வெளியிடப்படுகிறது
ராஜதந்திரம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி ... இசையமைப்பாளராக "என்னை நோக்கி பாயும் தோட்டா",கிடாரி, படங்கள் மூலம் கவனிக்கப்பட்டு... தற்பொழுது இயக்குனராகவும் களம் கண்டிருக்கும் தர்புகா சிவா இயக்கத்தில் அவரது முதல் படமான "முதல் நீ.. முடிவும் நீ" திரைப்படம் 'Zee5' ஓடிடி யில் இன்று நேரடியாக வெளியிடப்படுகிறது.

இசையமைப்பாளர் பெயர் ரகசியம்
என்னை நோக்கி பாயும் தோட்டா படம் பாடல் மட்டும் வெளிவந்த சமயத்தில் இசையமைப்பாளர் பெயரை ரகசியமாக வைத்திருந்தார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.படத்தின் பாடல்கள் அதிரி புதிரி ஹிட் ஆனதால் அனைவராலும்... முகம், பெயர் தெரியாமல் தேடப் படக்கூடிய இசையமைப்பாளராக இருந்தார் தர்புகா சிவா.வெகு நாட்களுக்கு பிறகு ராஜதந்திரம் படத்தில் திருடர்கள் கூட்டத்தில் ஒருவராக துருதுருவென 'தீபன்' ரோலில் நடித்திருக்கும் நபர்தான் என்னை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் என்றதும் பலருக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

இயக்குனராக களம் கண்டிருக்கும் தர்புகா சிவா
இசையமைப்பாளராக ஒரு ரவுண்டு வந்த தர்புகா சிவா அடுத்ததாக இயக்குனராக களம் கண்டிருக்கும் படம் தான் 'முதலும் நீ..முடிவும் நீ'.சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் இளைஞர்களிடையே கொஞ்சம் கவனம் பெற்றது. பள்ளி பருவத்தில் மாணவ மாணவிகளிடையே நடைபெறும் நிகழ்வுகள் வைத்து நடைபெறுவதாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தை ஞாபகப் படுத்துவதாக இருப்பதாக பலர் அந்த நேரத்தில் கருத்து கூறினார்.தனுஷின் துள்ளுவதோ இளமை செல்போன் யூஸ் பண்ணாத மாணவர்களின் வாழ்க்கை படம் என்றும்,முதலும் நீ.. முடிவும் நீ...படம் செல்போன் யூஸ் பண்ணுகிற மாணவர்கள் வாழ்க்கை சம்பவங்கள் பற்றிய படம் என்று இரண்டு படங்களுக்கும் வித்தியாசங்கள் கூறி கிண்டலும் செய்தனர்.

முதலும் நீ முடிவும் நீ
இசையமைப்பாளராக தான் இசையமைத்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் வெற்றி பற்ற பாடலான மறுவார்த்தை பேசாதே படத்தின் முதலும் நீ முடிவும் நீ பாடல் வரிகளை செண்டிமெண்டாக தன் படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளார் தர்புகா சிவா. ட்ரைலரில் இப்படத்தின் கதாநாயகன் கதாபாத்திரம் ராஜதந்திரம் படத்தின் தர்புகா சிவாவின் மேனரிசத்தை போன்றே வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், இசையிலும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் சாயல் இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேரடியாக ஜி5 ஓடிடி இன்று ரிலீசாகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications