என்னாது இதை மசாஜ் செய்தால் முகம் பொலிவாகுமா? என்ன இப்படி சொல்கிறார் மைனா நந்தினி.. ஸ்மெல்லு வராதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை மைனா நந்தினி முகம் பொலிவாக இருக்க ஒரு எண்ணெய்யை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தொலைகாட்சியில் சரவணன மீனாட்சி என்ற தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தினி. இதன் மூலம் இவர் பிரபலமடைந்தார். அதிலிருந்து இவர் மைனா நந்தினி என அழைக்கப்படுகிறார். இவருக்கு ஏற்கெனவே 2017 இல் திருமணமாகி அதே ஆண்டிலேயே இவரது கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

Myna Nandhini is drinking and applying castor oil for her face

இந்த நிலையில் பல்வேறு சீரியல்களில் நடித்த இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 படத்தில் நடிகர் விவேக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம்தான் விவேக்கின கடைசி படமாகும்.

இந்த நிலையில் மைனா நந்தினி தன்னுடன் நடித்த யோகேஸ்வரன் என்ற சீரியல் நடிகரை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது துருவன் என்ற மகன் உள்ளார். மைனா நந்தினி ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என பிசியாக நடித்து வருகிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்தி வழங்கி வந்த பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற நேரத்தில் அந்த நிகழ்ச்சியை மைனாவே தொகுத்து வழங்கினார்.

இவர் கலக்க போவது யார் நிகழ்ச்சியிலும் ஜட்ஜாக இருந்தார். இவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். இப்படி சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ என பிசியாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். இவர் தனது கணவர் யோகேஸ்வரனுடன் இணைந்து மைனா விங்க்ஸ் என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். இவர் தற்போது அழகு குறிப்பு டிப்ஸ்களை குறிப்பிட்டுள்ளார்.

Myna Nandhini is drinking and applying castor oil for her face

அதில் பாதாம் எண்ணெய் முகப் பொலிவுக்கு மிக மிக முக்கியம் என்கிறார். இந்த எண்ணெய்யை வாரத்திற்கு ஒருமுறை முகத்திற்கு பூசி 10 நிமிடம் மசாஜ் செய்வாராம் மைனா. அது போல் வாரத்திற்கு 3 முறை முகத்திற்கு விளக்கெண்ணெய் தடவி நன்கு மசாஜ் செய்வாராம், பின்பு 15 நிமிடம் அப்படியே ஊறவிட்டு முகத்தை வாஷ் செய்வதாக கூறுகிறார். இப்படி செய்வது முக சுருக்களை தடுக்குமாம்.

முகத்திற்கு இயற்கையாகவே பொலிவை தருமாம். முகத்தை பொலிவாக்க மைனா நந்தினி முக்கியமாக எடுத்துக் கொள்ளும் விஷயம் பாதாம் மற்றும் கருப்பு திராட்சையாம். இதை காலை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிடுவாராம். இதனால் தான் அவருடைய முகம் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+