ஆடை கட்டி வந்த நிலவோ.. மந்திரப் புன்னகையோடு... யாரடி நீ மோகினி வெண்ணிலா வா இது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவோ கொஞ்சம் டென்ஷனாகி ஓடித்தான் போகும் இந்த டிவி ஸ்டார்கள் போட்டு வரும் போட்டோஷூட்களைப் பார்த்தால். அப்படி போய்க் கொண்டிருக்கிறது எல்லாம்.

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை எல்லா கதாநாயகிகளும் போட்டி போட்டு போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு யாரடி நீ மோகினி வெண்ணிலா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நட்சத்திராவும் விதிவிலக்கல்ல.

கொஞ்ச நாளைக்கு முன்னே இவரும் இவருடைய பிரண்ட்ஸும் மாடல் உடையில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அப்லோட் பண்ணி இருந்தனர். அது இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இப்போ நட்சத்திதரா போட்டோஸ்கள் போட்டு குவித்து வருகிறார்.

முத்தரசு மாமா

முத்தரசு மாமா

ஜீ தமிழ் டிவியில் முன்னணி சீரியல்களில் யாரடி நீ மோகினி சீரியல். இந்த சீரியலில் கிராமத்து பெண்ணாக வெண்ணிலா கேரக்டரில் நடித்திருப்பவர் நட்சத்திரா. இவர் இந்த சீரியலில் முத்தரசு மாமா மீது உயிரையே வைத்திருக்கிறார். சின்ன வயசிலிருந்தே இவரை உருகி உருகி காதலித்து இப்ப இவரையே திருமணம் செய்து கொள்கிறார்.

சூப்பர் நடிப்பு

சூப்பர் நடிப்பு

அத்தோடு மட்டுமல்லாமல் இந்த வீட்டில் கொடுமைக்கார மாமியாரையும் முத்தரசு ஒருதலையாக காதலித்து வந்த சுவேதாவையும் ஒரே வீட்டில் சமாளித்து அந்த வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார். இதுதான் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. நடிப்பின் மூலமாக ரசிகர்களை இழுத்து வைத்துள்ள நட்சத்திராவுக்கு எபிசோடுக்கு எபிசோட் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

முக பாவனை

முக பாவனை

இந்த சீரியலில் இவருடைய அப்பாவித்தனமான பேச்சும் குழந்தைத்தனமான முகமும் ரசிகர்களுக்கு இவரை ரொம்பவும் பிடித்திருக்கிறது. முதலிலிருந்து சீரியல் பேய் நாடகம் போல ஓட ஆரம்பித்து இப்போ கமர்சியல் சீரியலாக ஆக்கிவிட்டார்கள். இருந்தாலும் ரசிகர்களுக்கு இந்த சீரியல் ரொம்பவே பிடித்திருக்கிறது. வெண்ணிலாவுக்கு கிராமத்திலிருக்கும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எல்லாரும் இந்த சீரியல் எப்போ ஒளிபரப்பாகும் என்று ஆர்வமாக இருக்கிறார்கள்.

சேச்சியானு!

சேச்சியானு!

வழக்கம் போல நட்சத்திராவும் நம்ம ஊர் கிடையாதுங்க.. நட்சத்திரா 1990 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்திருக்கிறார். இவருக்கு நிலா என்கிற ஒரு அழகான தங்கச்சியும் இருக்கிறார். இவர் தமிழில் நடிக்க வர்றதுக்கு முன்னாடியே மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் முதன்முதலில் கிடா பூசாரி மகுடி கிராமத்து கதையை மையமாகக் கொண்ட படத்தில் முதல் முதலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

படம் சரியா போகலை

படம் சரியா போகலை

இது கிராமத்து கதையை மையமாகக் கொண்டிருந்தது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் வணிகரீதியாக அவ்வளவு பெரிய இடத்தை அடைய வில்லை. இருந்தாலும் அதற்கு பிறகு இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வராததால் நான் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். சின்னத்திரையில் இவர் இப்போது சூப்பராக போய்க்கொண்டு இருக்கிறார். இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சூப்பர் போட்டோஸ்

சூப்பர் போட்டோஸ்

இந்த நிலையில் இந்த லாக்டோன் வந்ததால் சீரியல்கள் சூட்டிங் இல்லாததால் இவரும் இவருடைய தோழிகளான செம்பருத்தி சம்பா, யாரடி நீ மோகினி ஸ்வேதா, பூவே பூச்சூடவா ரேஷ்மா எல்லோரும் சேர்ந்து போட்ட ஆட்டம் பாட்டம் இணையதளத்தில் வைரலாக பரவி கொண்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு நாளா சீரியல்ல புடவையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு வந்த நடிகைகா இது என்று வாயை பிளந்தபடி காணப்படுகிந்றனர்.

 பொங்குதே அப்படியே

பொங்குதே அப்படியே

அப்படிப்பட்ட கவர்ச்சியுடன் அந்த போட்டோக்களில் ஜீன்ஸில் படு ஹாட்டாக வந்திருக்கிறார்கள் இந்த நடிகைகள். இப்ப நட்சத்திரா கண்ணாடி போன்ற சேலையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோ போட்டு இருக்கார். இதை பார்த்த ரசிகர்கள் இவரை கலாய்ச்சு தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் இருந்தாலும் இவர் கன்னத்தில் இருக்கும் அந்த ஓற்றை பரு அழகாகவே இருக்கிறதாம் என்றும் ரசிகர்கள் ஜொள்ளு விட்டு அங்கேயே குடி கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+