Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் நெப்போலியன் மகனுக்கு அமெரிக்காவில் எளிமையாக நடந்த திருமணம்.. நெகிழ்ச்சியுடன் அவரே வெளியிட்ட வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மற்றும் அரசியல்வாதியான நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் அவரது மனைவி அக்ஷயா ஆகியோரின் திருமணம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற்ற நிலையில், தற்போது அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அமெரிக்க முறைப்படி நடந்துள்ளது. இந்த வீடியோவை நெப்போலியன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள நிலையில், அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Napoleon Dhanush

நெப்போலியனின் திரைப்பயணம்

திரைப்பட அறிமுகம்: நடிகர் நெப்போலியன், 1991-ல் இயக்குநர் பாரதிராஜாவின் 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தின் மூலம் வில்லனாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்துப் பிரபலமானார்.

அரசியல் வாழ்க்கை

திரையுலகில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்த நெப்போலியன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். திமுக கட்சியில் இணைந்து, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால் இப்போது அரசியல் மற்றும் சினிமா என எல்லாத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

வெற்றிப் படங்கள்

'எஜமான்', 'மன்னன்', 'சிந்துநதிப் பூ', 'தேவர் மகன்', 'வல்லரசு', 'சேதுபதி' போன்ற திரைப்படங்கள் நெப்போலியன் நடிப்பிற்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. தற்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடிக்கிற ஆனாலும் சமீபமாக அவர் எந்த படங்களிலும் பெரிதாக வரவில்லை ஆனால் அமெரிக்காவில் ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார் அதோடு 2000 ஏக்கர் அளவிற்கு விவசாய இயற்கை விவசாயத்தையும் அங்கு செய்து வருகிறார்..

மகனின் வாழ்க்கை மற்றும் திருமணம்

நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான தனுஷ், தசை சிதைவு நோய் (Muscular Dystrophy) பாதிப்பால் சக்கர நாற்காலியில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் குடியேறிய பிறகு, தனுஷுக்கு அங்குள்ள பல்கலைகழகத்தில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவருக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வருகிறார் நெப்போலியன்.

இந்த நிலையில், தனுஷுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அக்ஷயா என்ற பெண்ணுடன் ஜப்பானில் திருமணம் நடந்தது. பின்னர், தற்போது அமெரிக்காவில் வைத்து இரண்டாவது முறையாக அமெரிக்க முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை நெப்போலியன் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ, ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

Napoleon Dhanush

திருமணத்திற்குப் பிறகு வந்த சர்ச்சைகள்

தனுஷின் திருமணம், ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சமூக வலைதளங்களில் சில சர்ச்சைகளும் எழுந்தது. சிலர், "முதல் திருமணத்தில் மகனின் மனைவி அக்ஷயா, முகம் சுளித்து சோர்வாக இருந்தார்," என்று கருத்து தெரிவித்தனர். ஆனால், இதுகுறித்து நெப்போலியனோ, அவரது குடும்பமோ எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அக்ஷயா இந்த கல்யாணம் தான் விருப்பப்பட்டு செய்வதாக பேசி இருந்தார்.

தனது மகனின் திருமணத்தை அமெரிக்க முறைப்படி மீண்டும் நடத்தியுள்ள நெப்போலியனின் இந்த செயல், அவரது மகனின் மீது அவர் கொண்டுள்ள அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+