திரைப்படத்தை மிஞ்சும் நீதானே எந்தன் பொன்வசந்தம்...அடடா சீரியலிலும் இப்படி ஒரு காதலா
சென்னை: தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியல் காதலை பிழிந்து ரசிகர்களுக்கு கண்ணீரை வர வைத்துக்கொண்டிருக்கிறது.
திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சீரியலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் சீரியல் ஹீரோ ஜெய் ஆகாஷ்க்கு வாழ்த்துக்கள் குவிகிறது.
உனக்கும் எனக்கும் படத்தை காப்பி செய்த நீதானே என் பொன்வசந்தம் சீரியல் திரைப்படத்துக்கு டப் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சினிமாவை மிஞ்சும் சீரியல்
சினிமாவை மிஞ்சும் சீரியல் சீரியல் ஆக இருந்தாலும் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த மாதிரிதான் தற்போது கூட ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்து விட்டது. இந்த சீரியல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மனம் கவர்ந்த சீரியல் ஆக இருந்து வருகிறது .நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியல் தான் அது. இந்த சீரியல் ஜீ தமிழில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக சூரிய பிரகாஷ் கேரக்டரில் நடிக்கிறார்.

எல்லா தரப்பினரும் ஆதரவு
சீரியலின் கதை 40 வயது ஆணுக்கும் 20 வயது பெண்ணுக்கும் உள்ள உணர்வு பூர்வமான காதலை மையமாகக் கொண்டது. இவர்கள் இருவருக்குள் இருக்கும் வசதி, வாய்ப்புகள் மற்றும் வயது, வித்தியாசங்கள் போன்ற ஏற்றத்தாழ்வுகளால் இருவரும் ஆரம்பத்தில் இருந்து தங்களுடைய காதலை வெளிப்படுத்துவதில் தயங்கி பின்பு இருவரும் தங்களை புரிந்து கொண்டாலும் சமுதாயம் அவர்களை எந்த அளவிற்கு பாடாய்படுத்துகிறது என்பதை பற்றிதான் இந்த சீரியல் இருந்து வருகிறது. சீரியலில் வெள்ளித்திரையில் கதாநாயகன் சீரியலின் கதாநாயகனாக மாறி இருந்தாலும் அவருக்கு ஜோடியாக தர்ஷனா அசோகன் என்னும் பல் மருத்துவர் கதாநாயகியாக அனு கேரக்டரில் அறிமுகமாகியிருக்கிறார்.

பழகிய முகங்கள்
சீரியலில் இவர்களிருவரும் மட்டுமல்லாமல் மீராவாக நடிக்கும் நிவாஸினி திவ்யா மற்றும் அனுவின் அம்மாவாக நடிக்கும் சோனியா, அனுவின் அப்பாவாக நடிக்கும் சாய்ராம், சூரிய பிரகாஷின் அம்மாவாக நடிக்கும் சாரதா என பல நடிகர்கள் ரசிகர்களுக்கு பரிச்சயமான நபர்களாக தான் இருந்து வருகின்றனர். இவர்களின் நடிப்பை பார்த்து பல ரசிகர்கள் இந்த சீரியலை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டனர். ரசிகர்களின் பேராதரவோடு இந்த சீரியல் இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்க போகிறது. இந்த நிலையில் கதாநாயகி அனுவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அனுவும் சூரிய பிரகாஷூம் தங்களுடைய காதலை எத்தனையோ முறை அனுவின் தந்தையிடம் கூற நினைத்தாலும் அது முடியாமல் போய் விடுகிறது.

வெற்றி அடைவாரா சூர்ய பிரகாஷ்
திருமண நேரத்தில் அனு, சூரிய பிரகாஷின் காதல் அனுவின் தந்தைக்கு தெரியவே திருமணம் நின்றுவிடுகிறது. அதற்கு பிறகு குற்ற உணர்ச்சியில் இருந்த சுப்பு தற்கொலை முடிவு எடுத்து வீட்டை விட்டு காணாமல் போய் விடுகிறார். அனு சூரியபிரகாஷை சந்தேகப்பட்டு திட்டி விடுகிறார். இந்த நிலையில் வீட்டில் வந்து மன்னிப்பு கேட்க முடிவு எடுத்த சூரியபிரகாஷ் சுப்பு விடம் பேசும்போது அவர் உங்களால் எங்கள் வீட்டில் நாங்கள் வாழும் சராசரி வாழ்க்கையை வாழ முடியாது என்று கூறுகிறார். முதலில் பொறுமையாக இருந்த சூரியபிரகாஷ் பின்பு நான் அப்படி வாழ்ந்து காட்டுகிறேன் என்று போட்டியை ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஒருவழியாக சூரியபிரகாஷ் சுப்புவின் வீட்டிலேயே தங்கி அவர்களுடைய வாழ்க்கையை வாழத் தொடங்கிய ப்ரோமோ தான் ரசிகர்களின் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.ஏற்கனவே இதேபோல சீன்களை உனக்கும் எனக்கும் திரைப்படத்தில் பார்த்திருந்தாலும் இந்த கதையும் சீரியலுக்கு நன்றாகத்தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications