கம்பேக்னா இப்படி இருக்கணும்! ஒதுக்கிய இடத்திலும் சிரித்தபடியே நின்று.. இன்று சாதித்து காட்டிய நெல்சன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் ஒருத்தர் ஜெயிக்கும் போது அவரை சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதையும், அதே நபர் தோற்றுவிட்டால் அவரை எத்தனை பேர் மதிக்கிறார்கள் என்பதை சில சம்பவங்கள் காட்டிவிடும். அப்படி தான் நெல்சன் பற்றிய ஒரு பழைய நினைவு இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு நெல்சன் இயக்கிய பீட்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. விஜய் நடித்த அந்த படத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்கள் வந்தது. அந்த காலகட்டத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் தமிழ் சினிமாவில் லோகேஷ் பெயர் பெரிய அளவில் பேசப்பட்டது.

Nelson

நெல்சனுக்கு நடந்த அலட்சியம்

அந்த சமயத்தில் ஒரு விருது விழாவில் நெல்சனும் நடிகர் கிங்ஸ்லியும் கலந்து கொள்ள வந்திருக்கிறார்கள். அப்போது பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜ் அங்கு வருகிறார் அவரை சுற்றி பவுன்சர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் நெல்சனிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தவர்கள் லோகேஷை பார்த்ததும் அப்படியே போய்விட்டார்களாம். அதனால் அங்கு நின்று கொண்டிருந்த நெல்சனும், ரெடின் கிங்ஸ்ளையும் தனியாக நின்றிருககிறார்கள். எங்கே போக வேண்டும்? எப்படி போக வேண்டும்? என்று கூட அவர்களுக்கு யாருமே வழிகாட்டவில்லை.

மாறாத சிரிப்பு

ஆனால் அந்த சமயத்தில் கூட நெல்சன் சிரித்தபடியே அங்கிருந்து கிளம்பி போயிருக்கிறார். அந்த சமயத்தில் அவர் வெற்றி கொடுக்கவில்லை என்றதால் அவரை எல்லாரும் எளிதாக கடந்து போய்விட்டார்கள். ஆனால் இன்று அவர் ஜெயிலர் மற்றும் ஜெயிலர் 2 என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்ததும் சோசியல் மீடியா முழுக்க அவரை பற்றியே பேசி வருகிறது. அதனால் பழைய விஷயங்களையும் இப்போ எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவர் வெற்றி கொடுக்கவில்லை என்றதும் அவரை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திவிட்டு எல்லோரும் போய்விட்டார்கள், ஆனால் இப்போ அவர் வெற்றி கொடுத்து விட்டதும் ஊரே கொண்டாடுகிறது. இதுதான் மனித இயல்பு என்பது தெரிகிறது. ஆனால் எல்லோராலும் ஒதுக்கப்பட்டாலும் நெல்சன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு கிளம்பி போயிருந்தார். இன்று ஜெய்லர் 2 படத்தின் முதல் நாள் வசூலை 100 கோடியை தாண்டி விட்டது. ஆனாலும் தற்போது அவர் அதே போல ஜாலியாகவே இருக்கிறார். அதனாலேயே அவரை பலரும் பல பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் செய்ய வேண்டியது

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? நம்முடைய வாழ்க்கையில் இதே மாதிரியான சூழ்நிலைகளை சந்தித்து இருப்போம். நன்றாக இருக்கும்போது நம்மை தேடி வருபவர்கள் ஒரு பிரச்சனை வந்துவிட்டால் நம்மை கண்டுகொள்ளாமல் போகலாம். நம்முடைய உழைப்பை மதிக்காமல் இருக்கலாம், இன்னொருவர் முன்னேறும் போது அவருக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து நமக்கான வாய்ப்பு எப்போது வரும் என்று ஏங்கவும் செய்யலாம். ஆனால் அந்த நேரத்தில் நம்மை யார் எப்படி நடத்துகிறார்கள் என்பதை நினைத்துக் கொண்டே இருந்தால் நம்முடைய பயணம் தான் பாதிக்கப்படும்.

ரஜினிகாந்த் வசனம்

அதனால் நம்மால் முடிந்த வேலையை நேர்மையாக தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். நம்மை யாராவது குறைத்து மதிப்பீட்டால் அவர்களிடம் நம்மை நிரூபிக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் போராட வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய வேலைதான் நமக்கான பதிலை சொல்லும். ரஜினிகாந்த் சொல்வது போல "கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது.. கிடைக்காமல் இருக்கிறது கிடைக்காது" நம்முடைய வேலையை சரியாக செய்து கொண்டே இருப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+