For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொஞ்சம் கூட விவஸ்தை இல்லையா..!? புனிதமான உறவை இப்படியா..?? பிரபல சீரியலை விளாசும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

சென்னை: பிரபலமான சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியலை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். என்னதான் சீரியலாக இருந்தாலும் இப்படியா செய்வார்கள் என பலரும் பலவிதமான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

சீரியல்களில் தற்போது கணவனையும், காதலனையும் சார் என்று அழைக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

சன் டிவி முதல் பிரபலமான பல சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இது ஒரு ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இந்த ஒரு அடிப்படை அறிவு கூட இல்லையா..?? பிரபல சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் இந்த ஒரு அடிப்படை அறிவு கூட இல்லையா..?? பிரபல சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

தொந்தரவு செய்யும் ப்ரோமோ

தொந்தரவு செய்யும் ப்ரோமோ

சீரியல் என்றாலே பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் பார்த்து வந்த காலம் மாறி தற்போது அனைத்து தரப்பட்டவர்களும் பார்த்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தின் பயன்பாடு காரணமாக செல்லும் இடமெல்லாம் இணையம் நம்மோடு வருவதால் சீரியலை தொடர்ந்து பார்க்க விட்டாலும் அதற்கான ப்ரோமோ நாம் பார்க்கும் பல விஷயங்களில் எட்டி பார்க்கிறது. யூட்யூப்பாக இருந்தாலும் சரி அல்லது பேஸ்புக் ஆக இருந்தாலும் சரி சீரியலை பார்க்காதவர்களை கூட பார்க்கத் தூண்டும் வகைகளில் அங்கே அதிகமாக ப்ரோமோ வருகிறது.

தவறான வழிகாட்டுதல்

தவறான வழிகாட்டுதல்

பல நடிகர்கள் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையோடு வந்தாலும் அவர்களுக்கு அங்கே வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரையை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். சின்ன திரையில் கதை எப்படி இருக்கிறது என்று கூட சிலர் யோசிக்காமல் தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்கள். அந்த நேரங்களில் ரசிகர்களுக்கு புதுவிதமாக கருத்துள்ள சீரியல்களை கொடுக்கிறோம் என்று சிலர் சமூகத்திற்கு தவறான பாதைகளை வழிகாட்டி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புனிதமான உறவுக்குள் இப்படியா

புனிதமான உறவுக்குள் இப்படியா

திரைப்படமாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி சமூகத்திற்கு கருத்து சொல்லும் விதத்தில் இருந்தால் அதற்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் வேற லெவல் தான். ஆனால் ஒரு சில நேரங்களில் சிலர் செய்யும் தவறுகளை நெட்டிசன்கள் தற்போது சுட்டிக்காட்டி கலாய்த்து வருகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது ஒரு சீரியலை அதிகமாக கலாய்த்து வருகின்றனர். இந்த சீரியலில் கதாநாயகன் கல்லூரி ஆசிரியராக நடித்திருக்கிறார். அவரிடம் மாணவியாக இருக்கும் கதாநாயகி அவரை காதலிக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல், மோதல் பற்றி இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

நெட்டிசன்களின் கருத்தான கேள்வி

நெட்டிசன்களின் கருத்தான கேள்வி


பிரபல சேனலில் அந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் அதற்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பும் இருந்து வருகிறது. ஆனால் சில நல விரும்பிகள் இந்த மாதிரி ஆசிரியர் மாணவிகள் புனிதமான உறவுக்குள் இப்படியா ஒரு கதையை வைத்துக் கொள்வது. அதுவும் அந்த சீரியல் கதாநாயகி வெண்ணிலா ஆரம்பத்தில் வீட்டில் திருமண ஏற்பாடு செய்யும் போது தனக்கு திருமணம் வேண்டாம், தனக்கு படிப்பு மட்டும் போதும் என்று வீட்டை விட்டு வெளியே வந்து பல போராட்டங்களுக்கு பிறகு தான் அவருக்கு கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் கல்லூரியில் படிப்பை தொடராமல் கல்லூரி ஆசிரியருடன் காதல் செய்து கொண்டிருக்கிறார். இதை எல்லாம் பார்க்கும் ரசிகர்களும் இளைஞர்களும் தவறான பாதையில் போக வழிவகுக்கும் வகையில் இருக்கிறது. அதுவும் ஆசிரியர் என்பவர் அம்மா அப்பாவுக்கு அடுத்தபடியாகவும் கடவுளுக்கு மேலாகவும் இருக்கும் நிலையில், ஒரு ஆசிரியரை சார் என்று அழைத்து அவரை காதலிப்பது முறையா? ? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

English summary
When the serial heroine of the initially arranges a marriage at home, she comes out of the house saying that she does not want to get married, only studies are enough for her, and only after many struggles she gets a place in the college. But instead of continuing his studies in college, he is in love with a college teacher. All this is to lead the fans and the youth to go on the wrong path.And when the teacher is next to mom and dad and above God, is it proper to call a teacher sir and love him? ? They are raising questions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X