சரத்குமார் நடித்த "அந்த” திரைப்படத்தை காப்பி அடிக்கும் பாரதி கண்ணம்மா.. இதை கவனிச்சிங்களா?
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த கதை டிராக் சரத்குமார் நடித்து வெற்றி பெற்ற பிரபலமான திரைப்படத்தை காப்பி அடிப்பதாக ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
கடந்த வாரம் ஒரு சீரியலை காப்பி அடித்ததாக பாரதி கண்ணம்மாவை கலாய்த்து வந்த ரசிகர்கள் இப்போது திரைப்படத்தை காப்பி அடிப்பதாக ஆதாரத்தோடு நிரூபித்து வருகிறார்கள்.

கெஞ்சும் நெட்டிசன்கள்
பாரதி கண்ணம்மா சீரியலை தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தான் இந்த சீரியல் பிரபலம் அடைந்திருக்கிறது. சீரியல் ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் நெட்டிசன்கள் மத்தியிலும் நன்கு பிரபலம் அடைந்திருக்கிறது. ஆரம்பம் முதலில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் இந்த சீரியலுக்கு வந்தாலும், இப்போது ரசிகர்கள் எப்பப்பா முடிப்பீங்க என்று கெஞ்சி கொண்டிருக்கின்றனர். ஆனாலும் நீங்கள் சொன்னால் நாங்கள் செய்யணுமா? என்று கேட்கும் விதமாக இந்த சீரியல் ஒவ்வொரு வாரமும் புது திருப்பத்தோடு நகர்ந்து கொண்டே வருகிறது.

மீண்டும் நடை பயணம்
நான்கு வருடமாக இந்த சீரியலில் dna டெஸ்ட் எடுத்தால் முடிந்துவிடும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர். ஆனாலும் தற்போது தான் இந்த சீரியலில் dna டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் பாரதி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வார் குடும்பத்தோடு அனைவரும் சேர்ந்ததும் மொத்தமாக சீரியலை முடித்து விடுவார்கள் என்று நினைத்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். கடைசியில் கிடைத்திருக்கிறது பாரதி மனம் இறங்கி வந்ததும் கண்ணம்மா பழையபடி வீட்டை விட்டு கிளம்பி குழந்தைகளோடு கிராமத்துக்கு சென்று இருக்கிறார்.

முடியாத தொடர்கதை
கண்ணம்மாவை தேடி பாரதியும் இப்போது ஒவ்வொரு ஊராக அலைந்து கடைசியில் கண்ணம்மா இருக்கும் ஊருக்கே வந்து சேர்ந்திருக்கிறார். இந்த நிலையில் கண்ணம்மாவுக்கு ஆதரவாக மொத்த ஊரும் இருக்க பாரதியை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க இனி எப்படி பாரதி கண்ணம்மாவை சமரசம் செய்து மீண்டும் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு செல்வார் என்பது கதையாக இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஒரு விதத்தில் வெண்பாவின் சூழ்ச்சிகள் எல்லாம் தெரிந்ததும் இனி வெண்பாவின் கதை அவ்வளவுதான் முடிந்து விடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது. வெண்பா மீண்டும் ஜெயிலில் கண்ணம்மாவை கொல்லாமல் விடமாட்டேன் என்று கொலை வெறியோடு புலம்பி கொண்டிருக்கிறார்.

ஆமா இது வேற இருக்கு
இந்த நிலையில் இந்த சீரியலின் கதை சரத்குமார் நடித்து பல வருடங்களுக்கு முன்பு வெளியான மூவேந்தர் திரைப்படத்தை காப்பி அடிப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு கதையை காப்பி அடிக்கும் நிலையில் இந்த வாரத்தில் மூவேந்தர் படம் கண்ணில் பட்டு இருக்கிறது என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. மூவேந்தர் திரைப்படத்தில் சரத்குமாரிடம் தேவயானி கோபித்துக் கொண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு சொந்த ஊருக்கு சென்ற பிறகு அந்த ஊரில் சரத்குமார் குடும்பத்தோடு சென்று தேவயானி மனதை மாற்றி வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வருவது போல, இப்போது பாரதியும் செய்வாரா என்று பலர் கேள்வி கேட்க இங்கே கண்ணம்மா மட்டுமல்ல ஹேமா, லட்சுமியும் பக்கம் பக்கமாக வசனம் பேசுவாங்களே? அதனால் இன்னும் இது பல வருடம் இழுத்து கொண்டே போய்விடும் போல என்று பலர் நொந்துபோய் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications