காவிரி பாசனத்துக்காக மேட்டூர் அணை நாளை திறப்பு- 300 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு மேல் நீர்மட்டம்
மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ல் (நாளை) மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. கடந்த 300 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்து வருகிறது.
காவிரி டெல்டாவின் 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்கு மேட்டூர் அணையையே நம்பி உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால் மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பது இல்லை. இதனால் ஜூன் 12-ந் தேதி நீர் திறப்பது என்பது பல ஆண்டுகளில் சாத்தியமற்றதாகிவிடுகிறது. தற்போது 300 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்து வருகிறது.
இதனால் தற்போது ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி மேட்டூர் அணை பாசனத்துக்காக நாளை திறக்கப்பட இருக்கிறது.
மேட்டூர் அணை கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 12-ல் திறக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது 8 ஆண்டுகளுக்குப் பின் ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. ஜனவரி மாதம் இறுதி வரை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது.
முதல்வர் திறந்து வைக்கிறார்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக திறந்து வைக்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து சேலத்துக்கு புறப்பட்டு சென்றார் முதல்வர் எடப்பாடி.
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையில் இன்று நீர்மட்டம் 101.720 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பானது 67.089 டி.எம்.சி யாகவும் உள்ளது.
அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1439 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் பயன்பாட்டிற்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications