இனி இவர்தான் எல்லாம்..எல்லா பெருமையும் இவருக்கு தான்... ரச்சிதா அறிமுகப்படுத்திய நபர்! அப்போ கணவர்?
சென்னை: தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரச்சிதா முதல் முறையாக தற்போதைய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு இவர்தான் முக்கியம் என்று ரச்சிதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எடுத்து வருகின்றனர்.
ரச்சிதா அவருடைய அம்மாவை முதல் முறையாக சமூக வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

புது கொண்டாட்டம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா எப்போதும் போல சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக தொடங்கி விட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த அனுபவம், பிடித்தது, பிடிக்காதது என்பவற்றை எல்லாம் தொடர்ந்து செய்தி சேனல்களில் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இன்று இவர் குடும்பத்தோடு கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார் இது சமூக வலைத்தளத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

கணவரின் சப்போர்ட்
ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது அவருடைய கணவர் அவருக்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்து கொண்டு இருந்தார். ஏற்கனவே ரச்சிதாவும் அவருடைய கணவரும் பிரிந்து இருந்த நிலையிலும் ரச்சிதாவின் கணவர் ஒவ்வொரு வாரமும் ரச்சிதாவிற்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்து கொண்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் ரச்சிதாவிற்கு அவர் எலிமினேஷன் லிஸ்டில் இருக்கும் போது அவரும் வாக்கு செலுத்தி ரசிகர்களிடம் வாக்கு செலுத்த வேண்டி கேட்டு கொண்டு இருந்தார்.

ரசிகர்களின் கேள்வி
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா அவருடைய கணவரை பற்றி எதுவும் பேசாமல் இருந்து வருகிறார். தொடர்ந்து இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் ரச்சிதா அதை பற்றி எந்த இடத்திலும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ரச்சிதா வெளியே வந்த பிறகு கூட ரச்சிதாவிற்கு ஆறுதல் கூறும் விதமாக அவருடைய கணவர் தினேஷ் சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய பாசிட்டிவ் பதிவுகளை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த ரச்சிதாவை சின்னத்திரை நடிகர்களும் அவருடைய உறவினர்களும் ரசிகர்களும் பார்க்க வந்த வண்ணமாகவே இருக்கின்றனர்.

மோட்டிவேஷன் ரீல்ஸ்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா அவருடைய ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தன்னுடைய வெற்றியை கொண்டாடி இருக்கிறார். அப்போது ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் "நம்ம நல்லா வாழ்ந்து நல்ல இடத்தில் இருக்கிறது தான் நம்மள அவமானப்படுத்தினவங்களுக்கு நாம கொடுக்கிற பதிலடி" என்கிற மோட்டிவேஷன் ஸ்பீச் இடம் பெற்று இருக்கிறது அதில் இரண்டு கைகளும் கன்னத்தில் வைத்து படி சோகமாக இருக்கும் ரச்சிதா, உண்மை தான் கடைசி வரை இருக்க முடியலையே!? என்று பிக் பாஸை எவ்வளவு மிஸ் பண்ணுகிறேன் என்பதை கண்களாலே காட்டி இருக்கிறார்கள்.

அந்த நபர் இவர்தான்
இந்த நிலையில் அதற்கு அடுத்த பதிவில் தன்னுடைய அம்மாவோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் வரவேற்கிறேன் என்னுடைய பெருமைமிக்க அம்மா, பிக் பாஸ் வின் பண்ணலன்னா என்ன? எங்கள பெருமைப்படுத்திட்டியே என்றாள், இதைவிட எதுவும் பெரியதாய் தெரியவில்லையே! உனக்காக எதையும் செய்வேன் என்னுடைய குழந்தை என்று பதிவிட்டு இருக்கிறார் .
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications