நடிகை சுதா வாழ்க்கையில் ஏற்பட்ட துயரம்! ஒரு கையெழுத்தால் பறிபோன கோடி சொத்து.. பரிதாப நிலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித், விஜய், தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமான நடிகை ஹேமா சுதா வாழ்க்கையில் பெரிய வேதனை நடந்திருக்கிறது. அவர் போட்ட ஒரே ஒரு கையெழுத்தால் அவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறி இருக்கிறது. சொத்துக்கள் இல்லை என்றதால் சொந்த குடும்பத்தினர் செய்த செயல் குறித்து அவர் கண்ணீருடன் பேசி இருக்கிறார்.

ஹேமா சுதாவை திரைப்படங்களில் காமெடியான கேரக்டரிலும், சென்டிமென்ட் ஆன கேரக்டரிலும் பார்த்திருப்போம். ஆனால் அவருடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பமாம். சின்ன வயதில் அவர் வீட்டில் பல உதவியாளர்கள் வேலை பார்த்திருக்கிறார்கள். இவர் குழந்தையாக இருந்த சமயத்திலேயே இவருடைய வீட்டில் மூன்று கார் இருந்ததாம். அதற்கு தனி டிரைவர்களும் இருந்தார்களாம்.

Hema Sudha Kollywood Actress Life Story Tamil Cinema Emotional Interview Celebrity News

குழந்தை பருவம்

பான்வித் சில்வர் ஸ்பூன் என்று சொல்வார்களே அதே போலத்தான் இவருடைய குழந்தை பருவ வாழ்க்கை இருந்திருக்கிறது. 4 சகோதரர்களுக்கு ஒரே தங்கச்சி என்பதால் வீட்டில் ரொம்ப செல்லமா இருந்தாராம். அந்த சமயத்தில் தான் அவருடைய அப்பாவிற்கு புற்றுநோய் இருந்தது தெரிய வந்திருக்கிறது. அந்த நேரத்தில் சுதாவிற்கு எட்டு வயது தானாம். அப்போ அப்பாவின் சிகிச்சைக்காக சொத்துக்களை எல்லாம் விற்க வேண்டிய நிலைமை வந்திருக்கிறது.

தன்னுடைய படிப்பை தொடர்வதற்கு கூட அவருடைய அம்மாவின் தாலி செயினை அடகுமானம் வைத்துதான் படிப்பையே தொடர்ந்தாராம். அதற்குப் பிறகு இவர் சினிமாவில் அடி எடுத்து வைத்த பிறகு புகழும் பணமும் கிடைத்திருக்கிறது. ஆனாலும் அதிலும் சில கசப்பான சம்பவங்கள் நடந்ததாக கூறி இருக்கிறார்.

கையெழுத்தால் பறிபோன சொத்து

இது குறித்து சுதா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, நான் ஒரு காலத்தில் டெல்லியில் ஒரு ஹோட்டலை தொடங்கினேன். அந்த ஹோட்டலுக்காக என்னுடைய கையிருப்பு மொத்த பணத்தையும் போட்டுவிட்டேன். ஆனால் அப்போ நான் போட்ட ஒரே ஒரு கையெழுத்தால் என்னுடைய மொத்த சொத்தும் காணாமல் போய்விட்டது. எல்லா சொத்துக்களையும் இழந்து விட்டேன். கோடி ரூபாய்க்கு மேலே என்னுடைய உழைப்பு எல்லாம் போய்விட்டது.

விலகிய மகன் கணவர்

எனக்கு ஒரு மகன் இருக்கிறார் ஆனால் அவருடன் ஒரு சின்ன தகராறு ஏற்பட்டதால் அவர் வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் போய்விட்டார். அதற்கு பிறகு என்னுடன் பேசுவதே இல்லை. என்னுடைய கணவரும் என்னை விட்டு விட்டுப் போய்விட்டார். இப்ப நான் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். சுதா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.

நடிகை ஹேமா சுதா நடித்த படங்கள்

சமீபத்தில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக வண்ணக் கனவுகள், எங்கள் ராசா, குரு சிஷ்யன், கொடி பறக்குது, கேப்டன், அரசு, வேதாளம், 7 ஜி ரெயின்போ காலனி, இந்தியன், தீராத விளையாட்டுப் பிள்ளை, வெடி, தனி ஒருவன், ரோமியோ, மதகஜ ராஜா, பொல்லாதவன் உட்பட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+