பா ரஞ்சித் சொன்ன ஒரு வார்த்தை! சப்போர்ட்டுக்கு வந்த இயக்குனர் மோகன் ஜி.. ஓபனா பேசிட்டாரே
சென்னை: தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், இயக்குநர்கள் பா. ரஞ்சித் மற்றும் மோகன் ஜி ஆகியோரின் பெயர்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்தே பா. ரஞ்சித் கருத்துகளுக்கு எதிராகவே தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்த மோகன் ஜி, இப்போது பா ரஞ்சித் கருத்துக்கு ஆதரவாக பதில் அளித்திருப்பது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது.

பா ரஞ்சித் பதிவு
சமீபத்தில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவாக பா. ரஞ்சித் தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காக போராடிய ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த தேர்தல் முக்கியமானது என்றும், அவரின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த பதிவை தொடர்ந்து, ஒரு நெட்டிசன் விமர்சனமாக கருத்து பதிவு செய்தார். அதில், சமூக நீதி குறித்து பேசும் பா. ரஞ்சித், தற்போது வேறு கூட்டணியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவு தருவது எப்படி என்று மோகன் ஜி யை டேக் செய்து கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலாக மோகன் ஜி போட்ட கமெண்ட் தான் தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் மோகன் ஜி பதிவு
அவர் தனது ஸ்டைலில், "நாங்கள் இருவரும் பரம்பரை எதிரிகளா? சிந்தனை ஒரே இடத்தில் சேர்ந்தால் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில் என்ன தவறு?" என்று கேள்வி எழுப்பியதுடன், "அந்த அம்மையார் வெல்லட்டும்... உங்களை வெல்வதே எங்கள் நோக்கம்" என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
இதுவரை பா. ரஞ்சித் கருத்துகளை எதிர்த்து வந்த மோகன் ஜி, இப்போது ஒரே கோணத்தில் பேசுவது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. "இவர்கள் இருவருக்கும் உள்ள சிந்தனை வேறுபாடு என்ன ஆனது?", "இது அரசியல் சூழ்நிலை காரணமா?" என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
மாற்றம் ஏன்
மேலும், இந்த விவகாரம் சாதாரண கருத்து மோதலாக இல்லாமல், தேர்தல் அரசியலுடன் இணைந்து பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இயக்குநர்கள் போன்ற பிரபலங்கள் அரசியல் கருத்து தெரிவிக்கும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த விவாதம் இன்னும் தீவிரமாகியுள்ளது.
மொத்தத்தில், பா. ரஞ்சித் மற்றும் மோகன் ஜி இடையே உருவான இந்த எதிர்பாராத ஒற்றுமை போன்ற நிலை, தேர்தல் கால அரசியல் பேசுபொருளாக மாறி, சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications