பாண்டியன் ஸ்டோர்ஸ் டிசம்பர் 13: மயிலை வீட்டை விட்டு துரத்திய பாண்டியன்.. கடைசி நேரத்தில் குழலி செய்த செயல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் 2025 டிசம்பர் 13ஆம் தேதிக்கான எபிசோடில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே மயில் பற்றிய உண்மைகள் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்து இருக்கிறது. இதனால் பாண்டியன் மயிலை வீட்டை விட்டு வெளியே துரத்தி இருக்கிறார். அப்போது குடும்பத்தினர் என்ன செய்தார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மயில் பற்றிய உண்மைகள் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. ஆனாலும் மயில் உடைய அப்பாவும் அம்மாவும் உண்மையை ஒத்துக்கொள்ளாமல் நியாயப்படுத்தி பேசுகின்றனர். அதற்குப் பிறகு பாண்டியன் பேசுகிறார். அப்போது இன்னைக்கு செந்தில் என்னை பார்த்து என்னப்பா பொண்ணு வீட்டை பத்தி எதுவுமே விசாரிக்காமல் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க என்று கேட்கிறான். அவன் கேட்கிறது நியாயம் தான்.

Pandian Stores serial vijay tv

நான் மனுஷங்களை நம்புறதுனால தான் உங்க வீட்டை பற்றி விசாரிக்கல. நான் என் கடையில் கூட எந்த பொருளையும் ஏமாற்றி விற்றது கிடையாது என்று பேசுகிறார் . அதைத்தொடர்ந்து மயில் உடைய அப்பா எங்க பொண்ணு வாழ்க்கைக்காக இதையெல்லாம் பண்ணிட்டோம் சம்மந்தி மன்னிச்சிடுங்க என்று மன்னிப்பு கேட்கிறார். அதற்கு பாண்டியன் எங்க குடும்பத்தை பற்றி தெரியாத சமயத்தில் பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க சரிதான். ஆனா அதுக்கு அப்புறம் எங்களை பத்தி தெரிஞ்சதும் உண்மையை சொல்லி இருக்கலாமே?

எங்கள விடுங்க அப்போ சரவணன் அவளுடைய புருஷன்தானே அவகிட்டயாவது இதையெல்லாம் மயில் சொல்லி இருக்கலாம் இல்ல. படிக்கல உங்களை விட ரெண்டு வயசு பெரிய பொண்ணுன்னு சொல்லாம மறைச்சு பொய் மேல பொய் சொன்ன விஷயம் எங்க கொண்டுவந்து நிற்கிறது பார்த்தீங்களா என்று கேட்கிறார். கடைசியாக பாண்டியன் மயிலை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்.

இதுக்கு மேல பேசுறதுக்கு எதுவும் இல்லம்மா நீ வீட்டை விட்டு கிளம்பு என்று சொல்ல, அதற்கு மயில் அம்மா அப்படியெல்லாம் வீட்டை விட்டு போக முடியாது... மயில் இங்கதான் வாழுவா. நீ என்ன அழுதுட்டே இருக்க, நான் செஞ்சது தப்புதான் மன்னிச்சிடுங்கன்னு சொல்லிட்டு உள்ள போ என்று சொல்கிறார். இதனால் கோபமான கோமதி இந்த வீட்ல யாரு இருக்கனும் இருக்கக் கூடாதுன்னு நீங்க முடிவு பண்ண வேண்டாம் நாங்க தான் முடிவு பண்ணுவோம், அதான் என் புருஷனே சொல்லிட்டாரே கிளம்புங்க என்று சொல்கிறார்.

அப்போது குழலி வந்து என் தம்பி வாழ்க்கையே கெடுத்துட்டு இங்கதான் இருப்பீங்களா? போங்க என்று கத்துகிறார். அப்போது மயிலின் அப்பா நாங்க தான் தப்பு பண்ணனுனோம் மயிலுக்கு இதற்கான தண்டனை எதுக்கு? இனிமேல் எந்த தப்பும் பண்ண மாட்டாள் என்று சொல்கிறார். அதற்கு சரவணன் இந்த குடும்பம் சொல்றது எதையும் நம்பாதீங்க அப்பா, வேலை விஷயம் தெரிஞ்சதும் அது மட்டும் பொய் என்ற சொன்னா.. அப்புறம் படிப்பு விஷயம் தெரிஞ்சதும் ரெண்டு பொய்ன்னு சொன்னா. இப்ப வயசு விஷயம்.. இன்னும் எத்தனை பொய் சொல்லி இருக்கான்னு தெரியல என்று சொன்னதும் மயிலின் அப்பா அப்படியெல்லாம் பேசாதீங்க மாப்பிள்ளை என்று சரவணன் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.

ஆனாலும் குடும்பத்தினர் யாரும் சமாதானம் ஆனது போல தெரியல. மயில் இந்த வீட்டிலிருந்தா நான் வீட்டை விட்டு வெளியே போயிருவேன் என்று சரவணன் சொல்கிறார். ஒரு கட்டத்தில் கோபமான குழலி இப்படி எல்லாம் சொன்னா இவ கேட்க மாட்டார் என்று ரூமுக்குள் சென்று மயில் பேக்கை எடுத்துக்கொண்டு வந்து மயிலை இழுத்து தெருவில் தள்ளுகிறார். இனிமேல் இந்த வீட்டு பக்கமே நீ வரக்கூடாது உனக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று வீட்டை பூட்டி கொள்கிறார். வாசலில் நின்று மயில் கதறி அழுது கொண்டிருக்கிறார். அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+