பாண்டியன் ஸ்டோர்ஸ்: அண்ணன்களால் வாழ்க்கையை இழந்த கோமதி! வீட்டைவிட்டு போன பாண்டியன்.. கதிர் எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 27ஆம் தேதிக்கான எபிசோடில், தன் அண்ணன்களுக்காக தான் செய்த செயல் தனக்கே வினையாக மாறிவிட்டது என்று கோமதி அழுது கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கோமதி மறைத்த உண்மையால் பாண்டியன் வீட்டிற்கு வெளியே போயிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரைக்கும் ராஜி, கதிர் கல்யாணம் என்ன மாதிரி நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் இப்போது அந்த உண்மையால் மொத்த குடும்பமும் உடைந்து போய் இருக்கின்றது. தனக்கு உதவி செய்ததற்காக கோமதி தன்னுடைய அண்ணன்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்திருந்தார். அதுதான் இப்போ பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.

கோமதி வீட்டிற்கு வருவதற்கு விருப்பமே இல்லாமல் இருந்த சக்திவேல் எப்படியாவது பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்று கோமதியே கோபப்படுத்துற மாதிரியே பேசிக்கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கோமதி இனி மறைப்பதில் பயனில்லை என்று ராஜிக்கும் கதிருக்கும் நான் தான் கல்யாணம் பண்ணி வச்சேன் என்று சொல்கிறார். அதைக் கேட்டு அனைவருக்குமே அதிர்ச்சி தான்.
அப்போது திருச்செந்தூர் ஹோட்டலில் நடந்த சம்பவங்களை பற்றி கோமதி சொல்கிறார். ராஜி தன்னுடைய காதலனுடன் சென்ற போது அவரிடம் இருந்த நகை பணத்தை ஏமாற்றிவிட்டு அந்த நபர் ஓடிபோனபோது குடும்ப மானத்தை காப்பாத்த வேறு வழி இல்லாமல் என்னுடைய மகன் கதிரை நான் தான் கல்யாணம் பண்ண சொன்னேன், அப்போ மீனாவுக்கும் தெரியும் என்று கோமதி எல்லா உண்மைகளையும் உணர்கறார் .
சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு சப்போர்ட்டுக்கு வந்த பழைய குடும்பம்! விஜயாக்கு பிரச்சனை! ஸ்ருதி அம்மா போட்ட போடு
இதைக் கேட்டு கடுப்பான முத்துவேல் எங்க வீட்டு பொண்ணு ரோட்டில் நின்றால் நீ எங்க கிட்ட தானே ஒப்படைச்சிருக்கணும்? அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீ யாரு என்று கோபப்பட, சக்திவேல் தான் சாப்பிட்ட இலையை தூக்கி வீசி விட்டு வீட்டை விட்டு கிளம்பி போகிறார். மொத்த குடும்பமும் வெளியே போனதும் இந்த உண்மையை கேட்டு பாண்டியன் அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்கிறார்.
அவரிடம் போய் கோமதி மன்னிப்பு கேட்க, அதற்கு பாண்டியன் கல்யாண வாழ்க்கையில் இருந்த நம்பிக்கை உடைந்து போயிட்டா அதை ஒட்ட வைக்க முடியாது என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே போகிறார். இத்தனை பிரச்சனைக்கும் காரணம் நான் தான் என்று ராஜி வருத்தத்தில் இருக்க, அவரிடம் சரவணன் ஆதரவாக பேசுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: உண்மை முகத்தை காட்டிய சக்திவேல்! கோமதிக்கு இது தேவையா? மீண்டும் மயிலால் பிரச்சனை
மறுபக்கத்தில் கோவிலில் தனியாக அமர்ந்திருக்கும் பாண்டியனிடம் கதிர் வந்து பேசுகிறார். அம்மா அவங்க குடும்ப மானத்தை காப்பாத்த தான் அப்படி செஞ்சாங்க என்று எடுத்து சொல்கிறார். ஆனாலும் பாண்டியன் கேட்டதுபோது போல தெரியவில்லை. கடைசியாக எல்லாம் உண்மைகள் தெரிந்திருந்தும் மீனா என்கிட்ட சொல்லல என்று செந்தில் கோபப்படுகிறார். இப்படியாக ராஜியுடைய கல்யாண விஷயங்கள் தெரிந்து மொத்த குடும்பமும் உடைந்து போய் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications