Pandian Stores - Barathi Kannamma Serial: பாண்டியன் ஸ்டோர்ஸ்- பாரதி கண்ணம்மா சீரியல்கள் மெகா சங்கமம்
Recommended Video
சென்னை: இந்த வாரம் சங்கமம் வாரம் போலும்... சன் டிவியில் இன்று முதல் வெள்ளி வரை இரு சீரியல்களின் சங்கமம் என்று ப்ரோமோ வெளியாகி வரும் நிலையில், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களின் சங்கமம் ஒளிபரப்பாக உள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கண்ணம்மா, பாரதி, அகிலன் மூவரும் காரைக்குடி போவதாக கூறினார்கள்.
பார்த்தால், காரைக்குடியில் ஷூட்டிங் நடைப்பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுடன் மெகா சங்கமம் என்று ப்ரோமோ போடுகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் காரைக்குடியில்தான் எப்போதும் நடைப்பெறும். ஒலிப்பதிவு போன்ற எல்லாப் பணிகளும் அங்கேயே முடிவடைந்துவிடும். வரும் வெள்ளி வரை பாரதி கண்ணம்மா சீரியலும் அப்படித்தான் ஷூட்டிங் நடைப்பெறப் போகிறது.

மீனாவின் குழந்தை
பாண்டியன் ஸ்டோஸ் சீரியலில் மீனாவின் வயிற்றில் உருவாகி இருந்த குழந்தைக்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று அனைவரும் பதறிக்கொண்டு இருந்த நிலையில், டாக்டர் ஒன்றுமில்லை குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்று சொல்லிவிட்டார்.குடும்பமே மகிழ்வில் உள்ளது.

இந்த நேரத்தில்
குழந்தை இல்லை என்று வெண்பா தந்த பொய்யான சான்றிதழ்... அதை உண்மை என்று நம்பி பாரதி குடும்பத்தில் பெரும் பிரச்சனையே உருவான நிலையில், பாரதி கண்ணம்மா குடும்பம் அங்கு சென்றுள்ளது. குழந்தை பிறக்கும் என்கிற உண்மையான தகவலுடன் பாரதி கண்ணம்மா குடும்பம் ஊர் திரும்புமா?

கருப்பு கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் கருப்பு கண்ணம்மா என்று சவுந்தர்யா அம்மா கண்ணம்மாவை ஒதுக்கி வைக்கும் நிலையில் இருந்து விளக்கு அளிக்கும் அளவுக்கு இந்த காரைக்குடி பயணம் கை கொடுக்குமா என்று வரும் வெள்ளி வரையான சீரியல் கதையின் போக்கை பார்த்து அறியலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications