Pandian Stores Serial: அமைதியா இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்...புயல் காற்றில்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வண்டியினால ஐ மீன் ஒரு பைக்கினாலே வார்த்தைகள் தடிச்சு விழுந்துருச்சேப்பா! வண்டியில் நெல்லு வரும்னு சொல்லுவாங்க.. இங்கே வண்டியினாலே குடும்பத்தில் வேண்டாத சொல்லெல்லாம் வந்து விழுகுதே! அமைதியா இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸில் புயல் வீச ஆரம்பிச்சுருச்சே...
Recommended Video
ஜீவாவுக்கு மாமனார் பைக் வாங்கிக் குடுத்தார். அதில் ஒரு நாள் துணியை காயப்போட்டு இருந்ததை மாமனார் பார்த்து விட அப்போதே பாவம் அதை எடுத்துட்டாங்க. யாரோ செய்துட்டாங்க.. தப்புன்னு முல்லையும் வருத்தம் தெரிவிச்சுட்டா.
ஒரு நாள் கடைக்குட்டி கண்ணன் வண்டியை எடுத்துட்டு போயி மோதிட்டு வந்தான் பாருங்க...அப்போ ஆரம்பிச்சுது வண்டியினால் வேண்டாத பல சொல் மீனாவின் வாயில் இருந்து விழுது. வண்டியை மோதிட்டான்னு மீனா கத்தறா.

சுத்தம் போடாதிய
மீனா நடு ஹாலில் நின்னு சத்தம் போட்டுக்கொண்டு இருக்க. எதுக்கு சுத்தம் போடுறிய சத்தம்போட்டு பேசாதிய என்று முல்லை சமாதானம் செய்துகிட்டு இருக்கா. ஏன் பேச மாட்டீங்க.. உங்க அப்பா இப்படி ஒரு பைக் வாங்கிக் குடுத்து அதை இவன் எங்கியாவது மோதிட்டு வந்தா உங்களுக்குத் தெரியும்னு மீனா வெடுக்குன்னு பேசறா. அப்போது ஹாலில் ஜீவா, கதிர், முல்லை, கண்ணன் எல்லாரும் நிக்கறாங்க.

இந்தா ஜீவா வச்சுக்கோ
அப்போது ஹாலுக்கு வந்த தனம், இந்தா ஜீவா வச்சுக்கோன்னு பணம் கொடுக்கறாங்க. எதுக்கு அண்ணி என்று ஜீவா கேட்க, இந்த பணத்தை வச்சு பைக்கை சரி பண்ணிக்கோடா ஜீவா. எவ்வளவு ஆகும்னு எனக்குத் தெரியலை. அதிகமா ஆனா அண்ணன் கிட்டே கேட்டு வாங்கித் தரேன்னு தனம் சொல்ல ஆடிப் போயிட்டான் ஜீவா. அடுத்த கட்ட நடவடிக்கையா பைக்கை எடுத்துட்டு போறான்.

மாமனாரிடம் பைக்கை
பைக்கை மாமனாரிடம் குடுத்துட்டு, இதை நீங்களே வச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு வந்துட்டான். இங்கே வந்தா பொண்டாட்டி மீனா, உனக்குன்னு கொடுத்த பைக்கை ஏண்டா குடுத்துட்டு வந்தே? அந்த பைக்கை நீ மட்டும் ஓட்டி இருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காதுல்லன்னு சொல்றா.

நான் உனக்கா
இந்த வீட்டில் எதுவும் யாருக்கும் சொந்தமில்லை மீனா. பைக்கை நான் மட்டும் ஓட்டிக்கிட்டு இருக்க முடியாது.. அதனாலதான் குடுத்துட்டு வந்துட்டேன்னு சொல்றான் ஜீவா. ஓ.. அப்படியா? நான் உனக்கு மட்டும் சொந்தமானவளா இல்லை நானும் பாஞ்சாலி மாதிரி எல்லாருக்கும் சொந்தமானவளா என்று கேட்க... அடடா அமைதியா இருந்த குடும்பத்தில் புயல் வீச ஆரம்பிச்சுருச்சு!
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications