• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டியை பிடித்து நெட்டி முறித்த பவித்ரா...தொப்புன்னு விழுந்த ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை : ஒரே உடையில் பல நாட்கள் வலம் வந்தாலும் சலிக்காத அழகில் ஜொலிக்கும் பவித்ராவை பார்த்ததும் ரசிகர்களின் மனது பரிதவிக்கிறதாம்.

அம்சமாக அமர்ந்திருக்கும் அழகை பார்த்து கமெண்டுகளில் அர்ச்சனையை ரசிகர்கள் தொடங்கிவிட்டார்கள்.

 5 முறை லோக்சபா எம்.பி... உடுப்பி சிங்கம்... காங். மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்! 5 முறை லோக்சபா எம்.பி... உடுப்பி சிங்கம்... காங். மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்!

முட்டியை பிடித்து தலையை சாய்த்து இவர் பார்க்கும் பார்வையை பார்த்து பலபேர் கண்ணிமைக்கவே மறந்து விட்டார்களாம்.

சிம்பிளா கவுன் மட்டும்தான்

சிம்பிளா கவுன் மட்டும்தான்

தெளிந்த பால்போன்ற பளீர் முகத்துடன்... பொசு பொசு டோரா... (பவித்ரா நாய்குட்டி பெயர்) வுடன் பவ்வியமாக அமர்ந்து இருக்கும் பவித்ராவை பார்த்து, இன்ஸ்டாகிராமில் அவருடைய பார்வையாளர்கள் பரவசம் அடைந்து வருகின்றனர். ஜஸ்ட்! ஒரு கவுன்.. மட்டும் தான், வேற எந்த மேக்கப்பும் இல்லாமல்..சிம்பிளா, பவித்ரா போட்டிருக்க போஸ்ட்க்கு எகிறி இருக்கிற லைக்குகளையும், வரவேற்பையும்,பார்க்கும் பொழுது பவித்ராவிடம் பாலோயர்கள் அவர் முகத்தை மட்டுமே எந்த அளவுக்கு!! லைக் பண்ணி இருக்காங்க என்பது தெரிகிறது!

தமிழ் பொண்ணுதாங்க

தமிழ் பொண்ணுதாங்க

பவித்ரா லட்சுமி பெயரில் மட்டுமல்ல ஆளும் ஒரிஜினல் தமிழ் பொண்ணுதான்,கோயம்புத்தூர்ல பிறந்து சென்னையில் வளர்ந்த பவித்ரா லட்சுமி, சென்னைல தான் தன்னோட படிப்ப முடிச்சிருக்குறாரு, அப்பவே மாடலிங் துறையில் நுழைந்தத பவித்ரா,2015 ல் "மிஸ் மெட்ராஸ்" 2017 ல் "குயின் ஆஃப் மெட்ராஸ்" பட்டங்களை ஜெயிச்சிருக்காரு. பேசிக்காவே டான்ஸரான பவித்ரா உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஷோவ்லயும் பார்டிசிபேட் பண்ணி இருக்காரு, அதே ஃபேம் ல ஒரு மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.ஆனால் அப்பொழுதெல்லாம் பவித்ராவை அவரது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூட சரியாக தெரிந்திருக்கவில்லை.ஆனால் விஜய் டிவியின் "குக் வித் கோமாளி 2" நிகழ்ச்சில வந்தாலும்..தான் ...வந்தாரு, "ஓவர் நைட்ல ஒபாமா மாதிரி" ஃபேமஸ் ஆயிட்டாரு.

புகழுக்கே புகழா

புகழுக்கே புகழா

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இவர் கேரியர் கட்டத்தில ஒரே ஏற்றம் தான். நிகழ்ச்சியிலேயே சிவாங்கி,அஸ்வின்,தான் தன்னுடைய சிறந்த நண்பர்கள் என்று இவர் கூறியிருக்கிறார். ஒருவேளை 'புகழ்' அதற்கும் மேலே இருப்பாரோ!! என்னவோ!!! தனக்கு கிடைக்கும் புகளுக்கெல்லாம் காரணம் 'புகழ்' தான் என்றும் நிறைய நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற பல காரணங்கள் இருந்தாலும்,வழக்கம்போல் விஜய் டிவி குழு தந்திரமாக, பவித்ரா விற்கும் புகழுக்கும் இடையே ஒரு கிசுகிசு என்று கிளப்பி விட்ட புகைச்சலே.. அந்த நிகழ்ச்சி மட்டுமல்ல பவித்ரா மற்றும் புகழின் பப்ளிக் ரீச் கும் முக்கிய காரணமாக அமைந்தது.

வெள்ளித்திரையிலும் கலக்கல்தான்

வெள்ளித்திரையிலும் கலக்கல்தான்

அந்த சீசன்ல கலந்து கொண்ட அத்தனை போட்டியாளர்களும் சோடை போகவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு முன்பு பவித்ரா லட்சுமி நடித்திருந்த சில படங்கள் மற்றும் ஆல்பம் சடங்குகள், என்னவென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் நடிக்கும் படங்களை இவரை வைத்து பிரமோட் செய்து வருகின்றனர்..அந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களின் விருப்பமான செலிபிரிட்டி ஆகி விட்டார். காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து இவர் நடிக்க இருக்கும் புதிய படத்தின் பூஜை போட்டோக்களை கூட, பவித்ராவின் ஆர்மிகள்தான் ட்ரெண்ட் செய்து வைரலாக்கி வந்தார்கள். ரீசன்ட் ஆக "பரியேறும் பெருமாள்" கதிர் உடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமின்றி தற்போது வரும் விளம்பரங்களில் பெரும்பாலான விளம்பரங்களில் பவித்ராவே ஆக்கிரமித்து இருக்கிறார்!! சில நாட்களுக்கு முன்பு கூட இவர் கதிர் உடன் நடிக்கும் "யூகி"படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எடக்கு மடக்கான கேள்வி

எடக்கு மடக்கான கேள்வி

எங்கிருந்து போட்டோ எடுத்து போட்டாலும் அழகாகத் தான் தெரிவோம்...என்பதாலோ!! என்னவோ!!? வீட்டிலிருந்தே போட்டோ எடுத்து போஸ்ட் செய்துள்ளார். அதுவும் தன் செல்ல டோரா உடன், போட்டோ எடுத்தது எல்லாம் என்னமோ சூப்பர் தான்.. ஆனால் அந்தக் கால் கொஞ்சம் மடக்காமல் இருந்திருக்கலாம்!! போஸ்ட் பார்க்கிறவங்க ,ஒரு செகண்டு பவித்ரா கர்ப்பமா இருக்காங்களா!! அப்படின்னு அதிர்ச்சியாகி, அப்புறம் ஜூம் பண்ணி பார்த்த பிறகுதான் அது வயிறு இல்லை.. அது கால்னு கிளியர் பண்ணிக்கிற மாதிரி இருக்கு என்று ஒரு நெட்டிசன் குறும்பாய் கமெண்ட் செய்துள்ளார்.

English summary
Her fans are congratulating Pavitra Lakshmi for proving her talent on the small screen and going around the big screen. Apart from that, fans are also wishing him all the best for the release of his films soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X