கெத்தா..மாஸா...கலக்கும் பாவனா...மிரண்டு போன ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கண்ணாடி முன்னாடி கலக்கல் போஸ் கொடுத்து மிரரை மிரள வைத்து விட்டாரே என ரசிகர்கள் உருகி போயிருக்கிறார்கள்.

வளைந்து நெளிந்து இவர் உட்கார்ந்து இருக்கும் அழகை பார்த்து அந்த கண்ணாடிக்கும் போதை ஏறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அம்சமாக பொருந்தியிருக்கும் இவருடைய லேட்டஸ்ட் கெட்டப் தான் தற்போது சமூகவலைத்தள ரசிகர்களின் கண்களில் சிக்கியிருக்கிறது.

காற்றோட்டமான உடை

காற்றோட்டமான உடை

பஞ்சு மிட்டாய் கலரில் மாடர்ன் உடையில் மாடலாக கண்ணாடி முன்பு அமர்ந்து இருக்கும் பாவனா பாலச்சந்திரனின் அழகை பார்த்ததும் ரசிகர்கள் ரசித்து கமெண்டுகள் ஒருபுறம் கொட்டிக் கொண்டிருக்க நெட்டிசன்கள் வழக்கம் போல தங்களுடைய சேட்டைகளை ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி காற்றோட்டமாக கண்ணாடி முன்பு உட்கார்ந்திருந்தால் கண்ணாடி வெடித்து விடப்போகிறது என்றும், என்ன பார்வை ஒரே இடத்தில் இருக்கிறது என்றும் பலர் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இத்தனை வருடமாக ஒரே மாதிரியே இருக்கிறாரே இவருடைய அழகுக்குக் காரணம் என்ன என்று பலர் கேட்டு வருகின்றனர்.

கண்ணாடி முன்னாடி கலக்கல்

கண்ணாடி முன்னாடி கலக்கல்

தற்போது இவர் அதிகமாக டிவி நிகழ்ச்சிகளில் காணவில்லை என்றாலும் மாடலிங்கில் செம பிஸியாக மாறிவிட்டார். அடிக்கடி இவர் எடுக்கும் போட்டோசூட்கள் இன்ஸ்டாகிராமில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அந்த மாதிரிதான் தற்போது இவர் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோஸ் வேற லெவல் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கன்னாபின்னாவென கமெண்டுகளை கொட்டுகிறார்கள். முழு முதுகு தெரிய கண்ணாடியின் முன்பு இவர் அமர்ந்திருக்கும் அழகைப் பார்த்து பல பேருக்கு தூக்கமே வரவில்லையாம் கண் மூடினாலே உந்தன் முகம் தான் தெரிகிறதே என்று பலர் கவிதை பாடி வருகின்றனர்.

சகலகலா வல்லவர் தான்

சகலகலா வல்லவர் தான்

என்னதான் பாவனா ராஜ் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய திறமையின் காரணமாக ஒவ்வொரு துறையிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகவும், வீடியோ தொகுப்பாளராகவும் பின்னணிப் பாடகராகவும் நடன கலைஞராகவும் ஒவ்வொரு துறையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். இவருடைய வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் ரசிகர்களின் மனதில் நன்றாக பதிந்து விட்டார். தொகுப்பாளர்கள் என்று சொன்னாலே ஒரு சிலரின் பெயர்கள் தான் அனைவருக்கும் மனதில் இருக்கும் அந்த வகையில் இவரும் ஒருவர்.

காந்தக் குரல்

காந்தக் குரல்

இவருடைய வசீகரிக்கும் குரலால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர், ஏர்டெல் சூப்பர் சிங்கரை தொகுத்து வழங்கியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சொந்த குரலால் அடிக்கடி பாட்டு பாடியும் அனைவரையும் அசத்தியிருக்கிறார். அதனாலேயே இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் போரடிக்காமல் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் வண்ணம் இருக்கும். இவருடைய நடிப்பை பார்த்து தான் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்துவருகிறார். அதனாலும் சமூக வலைத்தளத்திலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+