
கலக்கும் அன்னநடை...எட்டிப்பார்க்கும் சின்ன இடை..கலக்கும் தர்ஷா ...கதிகலங்கும் ரசிகர்கள்
சென்னை: இடை தெரியும் உடையில் கலக்கும் தர்ஷாவை பார்த்ததும் கதிகலங்கிப் போய் விட்டதாம் ரசிகர்களின் மனது.
Recommended Video
விதவிதமாக போஸ் கொடுத்து விழிகளை அசைக்க மறக்க வைக்கும் தர்ஷாவை பார்த்ததும் இன்ஸ்டாகிராமே கதிகலங்கி போய்விட்டதாம்.
ஆர்சிபி திருந்தவேயில்லை.. முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 111, மொத்தம் அடிச்சதோ 156, கலாய்க்கும் மீம்ஸ்
வெள்ளித்திரை கதாநாயகியாக கால் தடம் பதித்து இருக்கும் தர்ஷாவுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ரசிகர்களின் ஆதரவு பெருகிப் போச்சு
தர்ஷா எந்த போஸ்ட் போட்டாலும்.. சோசியல் மீடியாவே ரஷ்ஷா ஆகிவிடுகிறது... அந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வளைத்து வைத்திருக்கிறார். அவரும் போகிற..போக்கில்.. செல்கின்ற இடத்திற்கெல்லாம்..நான்கைந்து போட்டோக்களை எடுத்து.. சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து... அந்த கிரேஸ்' குறையாமல் பார்த்துக் கொள்கிறார். அப்படி தான் தற்பொழுது 'ருத்ர தாண்டவம்' படத்தின் பிரஸ் மீட்டிற்கு செல்லும்பொழுது வீடியோவும், போட்டோக்களையும், கேப்ஷர்' செய்து அப்லோட் செய்துள்ளார்.

இன்ஸ்டா இளவரசி
இன்ஸ்டாகிராம் இளைஞர்களை தன் வசம் இழுத்து வைத்திருக்கும் இன்ஸ்டா இளவரசி தர்ஷா குப்தாவின்.. ரசிகர்களின் பலமும், பாலோயர்களின் எண்ணிக்கையும், பார்ப்பவர்களை மலைக்க வைத்து வருகிறது...! இந்த அளவிற்கு 'ஃபேன் பேஸ்' இருக்கும் செலிபிரிட்டிகளை நம் இயக்குனர்கள் சும்மா விடுவார்களா..!?? புதிதாக ஹீரோயின்களை அறிமுகப்படுத்தி பிரபல படுத்துவதை விட... ஏற்கனவே பிரபலமாக இருக்கும் செலிபிரிட்டிகளை தங்கள் படங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம் படத்திற்கும் சேர்த்து நல்ல விளம்பரம் என்று நினைத்த இயக்குனர்கள் சோஷியல் மீடியா செலிபிரிட்டிகளை தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

போட்டோ புரட்சி
போட்டோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தின தர்ஷாவும்.. அப்படித்தான் சில இயக்குனர்களின் சாய்ஸ் ஆகிவிட்டார். தன் முதல் படமாக 'திரௌபதி' இயக்குனர் 'மோகன் ஜி'இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'ருத்ரதண்டவம்'படத்தில் ரிச்சர்ட் ஜோடியாக நடிக்கும் தர்ஷா முதல் படத்திலேயே பெரிய கேரக்டராக கிடைத்திருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இந்தப் படம் தனது கேரியரை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தி செல்லும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.

அப்போ சின்னத்திரை இப்ப வெள்ளித்திரை
'ருத்ர தாண்டவம்' படம் டீசர் வெளியானதில் இருந்து தற்பொழுது பிரஸ் மீட் வரை பல விமர்சனங்களையும்.. நெகட்டிவ் கமெண்ட்களையும் சந்தித்து வருகிறது. இப்படம் குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புவதாக கூறப்படுகிறது. இவ்வாறு விமர்சனங்களை சந்தித்து வரும் ருத்ர தாண்டவம் படத்தில், எல்லாத் தரப்பு ரசிகர்களால் விரும்பப்படும் நாயகியான தர்ஷா எப்படி..? எந்த..!? ரோலில் நடித்து இருப்பார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படம் வெளிவந்த பின்னரே 'ருத்ர தாண்டவம்' படம் இவரது சினிமா இன்னிங்சில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியும்.