பூவாலே ஆடையணிந்து பூத்துக் குலுங்கும் சன்டிவி ரோஜா... பட்டாம்பூச்சியாய் பறக்குது ரசிகர்களின் மனது
சென்னை: மஞ்சள் வண்ண பூக்களால் உடையணிந்திருக்கும் பிரியங்கா நல்கரியை பார்த்தும் ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள்.
இப்படி எல்லாம் கூட ஆடை இருக்கிறதா என்று ரசிகர்கள் பலர் நச்சரித்து வருகின்றனர்.
தளதளவென விதவிதமாக இவர் வெளியிட்டிருக்கும் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமை பரபரக்க வைத்திருக்கிறது.

அழகு பதுமை
சீரியலில் இழுத்துப் போர்த்தி நடித்துக் கொண்டிருக்கும் பல நடிகைகள் சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் போதும் போதும் என்று சொல்கிற வரைக்கும் தங்களுடைய அழகை காட்டி ரசிகர்களின் மனதை பறித்து விடுகின்றனர். ஆனால், நான் அப்படியெல்லாம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் பிரியங்கா நல்கரி. நாம் எதிர்பார்ப்பது ஒன்று ஆனால் அங்கு கிடைப்பது இன்னொன்றாக இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் பிரியங்கா நல்கரியை பார்த்து பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

பார்த்ததும் எனர்ஜி கூடுகிறதாம்
சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் ரோஜா சீரியலின் கதாநாயகி சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் டாப்பில் தான் இருந்து கொண்டிருக்கிறார். இளம் ரசிகர்களையும் சீரியல் பார்க்க தூண்டும் இவருடைய க்யூட்டான நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தாலும் இவருடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களின் மனதை ஆட்டிப் படைத்து வருகிறதாம். ஒரு முறை பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் இவருடைய அழகு ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டி வருகிறது.

முதல் தமிழ் சீரியல்
இவர் முதல் முதலாக தமிழில் ரோஜா சீரியலில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டார். சின்னத்திரை ரசிகர்கள்களின் பேவரைட் ஹீரோயினியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இளைஞர்கள் பலருக்கும் பரிச்சயமான முகமாகத்தான் இருந்துவருகிறார். சின்னத்திரை நடிகையாக இருந்தாலும் சரி வெள்ளித்திரை நடிகையாக இருந்தாலும் சரி அவர்கள் சமூக வலைத்தளத்தில் எவ்வளவு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார்களோ அந்தப்படியே அவர்களுடைய ரசிகர்களின் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

மஞ்சள் வண்ண பூ
அதில் பிரியங்கா நல்கரி தான் யாருக்கும் சளைத்தவரல்ல என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். மாடல் அழகியான இவர் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், ஒரு பக்கமாக மாடலிங்கிலும் கலக்கிக் கொண்டுதான் இருக்கிறார். எவ்வளவோ போராட்டங்களுக்கு பிறகு சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் இவர் தான் எடுக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த போட்டோஸ்கள் செம வைரலாக பரவி விடும். அந்த மாதிரிதான் தற்போதும் கூட மஞ்சள் வண்ண சூரியகாந்தி பூக்களை உடையாக அணிந்து இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்களின் மனது பட்டாம்பூச்சியாக இவரை சுற்றி வருகிறதாம்.












Click it and Unblock the Notifications