• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடையைக் குறைத்து அழகை கூட்டிய மகேஸ்வரி ஓடோடி வந்து ரசிக்கும் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ஜிகுஜிகு வென ஜொலிக்கும் உடையில் தரிசனத்தை கொடுத்த விஜே மகேஸ்வரியை பார்த்த ரசிகர்கள் சூடாகிப் போய் இருக்கிறார்களாம்.

பள பளக்கும் வைரத்தைப் போல வெயிலில் ஜொலித்துக் கொண்டிருக்கும் மகேஸ்வரியை பார்த்ததும் பலருக்கு கண்ணே கூசுகிறதாம்.

பாஜகவில் தேடி வந்த முக்கியப்பதவி... தொடர்ந்து அமைதி காக்கும் குஷ்பு... காரணம் என்ன..? பாஜகவில் தேடி வந்த முக்கியப்பதவி... தொடர்ந்து அமைதி காக்கும் குஷ்பு... காரணம் என்ன..?

உடையை குறைத்ததும் லைக் பட்டன் தெறித்துக் கொண்டிருக்கிறது என்று நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கலாய்க்க ரெடியாகி விட்டனர்.

பொசு பொசு அழகு

பொசு பொசு அழகு

VJ மகேஸ்வரி 90'ஸ் இளைஞர்களின் அபிமான VJ களில் முக்கியமானவர். திரிஷா மாதிரி ஒல்லியா இருந்தாத்தான் அழகுன்னு எல்லாரும் நினைச்சிட்டு இருந்தப்ப, கொஞ்சம் பொசு..பொசு...ன்னு இருந்தாலும் அழகு தான், என்று நிரூபிப்பதை போன்று தன் அழகால் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மனதை கொள்ளையடித்திருந்தவர் விஜே மகேஸ்வரி.

90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த விஜே

90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த விஜே

பாட்டு கேட்க வேண்டும் என்றால் சன் மியூசிக், இசை அருவி, சேனல்கள் தான் ஒரே சாய்ஸ் ஆக இருந்த காலகட்டத்தில்,விஜே களுக்கு மன்றம் அமைக்கும் அளவிற்கு இரு சேனல்களும் போட்டிப் போட்டு அழகான தரமானவிஜே களை மாற்றி மாற்றி களமிறக்கியது. தனியாக யூனியன் அமைக்கும் அளவிற்கு விஜே க்கள் பெரும் கூட்டமாக இருந்தனர். திரை நட்சத்திரங்களுக்கு அடுத்த பிரபலமானவர்களாக விஜே க்கள் பார்க்கப்பட்டனர்.ஆனால் அவ்வளவு விஜே கள் இருந்தாலும், ஒரு சில விஜே களால் மட்டுமே இன்றுவரை மக்கள் நினைவில் நிற்க முடிகிறது. அப்படி 90'ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை நினைவில் வைத்திருக்கக் கூடிய விஜே களுள் ஒருவர்தான் விஜே மகேஸ்வரி.

டக்கென்று நினைவுக்கு வருதே

டக்கென்று நினைவுக்கு வருதே

விஜே அர்ச்சனா, விஜே மணிமேகலை, விஜே அஞ்சனா, விஜே மகேஸ்வரி, போன்றவர்களெல்லாம் சமகால விஜே கள் ஆவார்கள். சன் மியூசிக், இசையருவி,போன்ற சேனல்களில் விஜே வாக களமிறங்கிய மகேஸ்வரி, தன் எத்துப்பல் சிரிப்பாலும், க்யூட்டான பேச்சாலும், அதிகமான இளைஞர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருந்தார். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது இவருக்காகவே நிறைய போன் காலர்கள் லைனில் முட்டி மோதுவார்கள். வீஜே கேரியரை தொடர்ந்து விஜய் டிவியின் புது கவிதை மற்றும் சில சீரியல்கள் சில படங்களில் நடித்து வந்த மகேஸ்வரி திடீரென்று சாணக்கியன் அவர்களை திருமணம் செய்து கொண்டு அனைத்திற்கும் கொஞ்சம் இடைவெளிவிட்டு விட்டார்.

கதாநாயகியாக மாறியாச்சு

கதாநாயகியாக மாறியாச்சு

சிறிது இடைவெளிக்குப் பின்பு களத்திற்கு திரும்பிய மகேஸ்வரி சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சென்னை 28 ன் 2பார்ட், மற்றும் சில படங்களில் சின்ன கேரக்டரில் நடித்தார்.ஆனால் ரசிகர்களிடம் பெரிய அளவில் ரீச் ஆக முடியவில்லை. தற்பொழுது பப்ளிசிட்டியை உருவாக்க ஒரே ஆயுதமாக அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களை கொஞ்சம் சரியாக பயன்படுத்த தொடங்கிவிட்டார். மற்ற செலிபிரிட்டி களை பின்பற்றி இவரும் அவ்வப்போது தனது போட்டோக்களை போஸ்ட் செய்து வருகிறார். திடீரென்று ஒருநாள் ரம்யா பாண்டியனுக்கு போட்டி என்பதுபோல் சேலையில் இடுப்பு தெரிய எடுத்து இவர் போஸ்ட் செய்த போட்டோக்கள் செம வைரலானது.... முழுசா மூடிகிட்டே வந்த மகேஸ்வரியை மட்டுமே பார்த்து பழகிய நம்ம பசங்க மகேஸ்வரியின் அந்த போட்டோவை பார்த்ததும் அதிர்ச்சியானதோட மட்டுமின்றி நிறைய ஜொல்லு விட தான் செஞ்சாங்க!!!

போட்டோஷூட்டில் கலக்கல்

போட்டோஷூட்டில் கலக்கல்

அதைத்தொடர்ந்து அவ்வப்போது இலை மறை காயாக...கவர்ச்சி போட்டோக்களை எடுத்து இணையத்தில் இரைக்க தொடங்கிவிட்டார்... 90'ஸ்இளைஞர்கள் எல்லாம் தங்கள் கனவு நாயகியாக இருந்த விஜே மகேஸ்வரி போட்டோக்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து ஷேர் செய்ய தொடங்கிவிட்டனர். மகேஸ்வரி விஜே வாக இருந்த காலகட்டத்தில் இந்த மாதிரியான போட்டோ ஷூட் மூலம் எளிதில் ரீச் ஆகும் வாய்ப்புகள் இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான கதாநாயகியாக இருந்திருப்பார்.

English summary
Maheshwari, who was working as VJ, is currently acting in films but is busy with photoshoots. His photos have been well received by fans on the social media. Fans are wishing him a happy return as VJ.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X