வாயில் மத்தாப்பூ..கையில் சரவெடி..மிரள வைக்கும் பாலா...அறிவுரை கூறும் ரசிகர்கள்
சென்னை: தீபாவளி அதுவுமாக பிக்பாஸ் பாலா செய்த செயல் தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
தீபாவளியை கொண்டாட சொன்னால் இப்படியா அடுத்தவர்களுக்கு பயத்தை காட்டுவது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
வம்பை விலை கொடுத்து வாங்குகிறது என்றால் இதுதானா என்று ரசிகர்களும் புலம்பி வருகின்றனர்.

மனம் கவர்ந்த போட்டியாளர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் தான். இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களும் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விடுகின்றனர். அதுவும் நான்காவது சீசனில் கலந்துகொண்ட பாலாவிற்க்கு ரசிகர்கள் அதிகமாகத்தான் இருந்து வருகின்றனர். இவர் ஒரு ஆணழகனாக இருந்தாலும், மாடலாக இருந்தாலும் பலருக்கும் பரிச்சயம் இல்லாமல் தான் இருந்திருக்கிறார்.

அதிகரித்த ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ஒரு போட்டியாளராக இவர் அறிமுகமானதும் இவர் பலருக்கும் பிடித்த ஒரு போட்டியாளராக மாறிவிட்டார். ஒரு சில ரசிகர்கள் இவரை திட்டி கொண்டிருந்தாலும் நாளுக்கு நாள் சிகர்கள் அதிகரித்துக் கொண்டு இருந்தனர். அதனால் சமூக வலைத்தளத்தில் இவருக்கு அதிகமான பேன்ஸ் பேஜ்களும் தொடங்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் இவர் பல ரசிகர்களுக்கு ரோல்மடலாக மாறிவிட்டார்.

ரசிகர்களின் ஆசை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தது இவருடைய ரசிகர்கள் பலருக்கும் வேதனையை கொடுத்திருந்தது. இவர்தான் டைட்டில் வின்னர் ஆக வரவேண்டும் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். இவருடைய எதற்கும் துணிந்த குணம் பலருக்கும் பிடித்து போய்விட்டது. இந்த நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு கடை திறப்பு விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வந்தாலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மிரட்டும் போஸ்
தீபாவளி பண்டிகைக்கு அதிகமாக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றனர். இதில் பாலாவும் ஒருவர். தன்னுடைய ரசிகர்களுக்கு வித்தியாசமான முறையில் தீபாவளி வாழ்த்து கூறியிருக்கிறார். இதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இவர் கருப்பு கலர் சட்டையில் வெள்ளை கலர் வேஷ்டியும் அணிந்து கொண்டு அட்டகாசமான காஸ்ட்யூமில் இருந்தாலும், வாயில் எரிந்துகொண்டிருக்கும் மத்தாப்பூ, வைத்துக்கொண்டு கையில் சரவெடி தூக்கிப் பிடித்து இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் அதிர்ந்து போய் விட்டனர் .

அனிதாவின் அறிவுரை
பிக் பாஸ் போட்டியாளராக இவருடன் இருந்த சக போட்டியாளரான அனிதா சம்பத் இவருக்கு 'தம்பி இதெல்லாம் பண்ணாத டா..ரொம்ப டேஞ்சர்' என்று அறிவுரையும் கூறியிருக்கிறார். பலருக்கு ரோல் மாடலாக இருக்கும் இவர் இந்த மாதிரி செய்தால் இவரை பாலோ பண்ணும் ரசிகர்களும் இதே தானே செய்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் வழக்கம்போல இவருடைய தீவிரமான ரசிகர்கள் இவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். எந்த ஒரு முன்னெச்சரிக்கை இல்லாமல் இப்படி எல்லாம் செய்யமாட்டார் எல்லாம் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு தான் செய்வார் என்று இவருக்கு சப்போர்ட் கொடுத்து வருகிறார்கள். என்ன இருந்தாலும் இந்த மாதிரி செய்தால் இவரை பார்த்து பலரும் இதே போல செய்யத் துணிந்து விடுவார்கள் என்று பலர் புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications