ஏங்க வைக்கும் அழகை எளிமையாய் காட்டிய ரச்சிதா...சொக்கி போன ரசிகர்கள்
சென்னை: மாடர்ன் உடையில் வந்தால் தான் ஹீரோயினி அழகு இல்லை எளிமையாக வந்தாலே பேரழகு தான் என்பதை ரச்சிதா நிரூபித்திருக்கிறார்.
சிம்பிளாக சுடிதாரில் அப்படி இப்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை ஆட்டிப் படைத்து விட்டாராம்.
சின்னத்திரை கதாநாயகியாக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருக்கும் ரச்சிதாவை பார்த்ததும் கமெண்ட்கள் மழைபோல பொழிகிறது.

அழகால் அசத்தல்
பளபளக்கும் அழகை பவ்வியமான உடையில் எளிமையான மேக்கப்பில் காட்டியிருக்கும் ரச்சிதாவை பார்த்ததும் "யாரையும் இவ்வளோ அழகா பார்க்கல" என்று ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் காதல் கவிதைகளை நிரப்பி வருகின்றனர். இந்த மாதிரி ஒரு பேரழகியை சின்னத்திரை இவ்வளவு நாளாக பார்க்கவில்லையே இப்போதுதான் பார்த்திருக்கிறது என்று ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் பலர் இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஃபேன்ஸ் பேஜ்களை அமைத்து ஆதரவுகளை தொடங்கிவிட்டார்கள். சின்னத்திரையிலும் வெள்ளித்திரை கதாநாயகிக்கு இணையாக ரசிகர்களை பெற்றிருப்பது ஒரு சில நடிகைகள் தான் அதில் இவரும் ஒருவர்.

பிரபலமான மீனாட்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பான 90ஸ் கிட்ஸ்களில் பேவரைட் சீரியல் பிரிவோம் சந்திப்போமில் அறிமுகமாகி தற்போது
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கலக்கி கொண்டிருக்கும் ரச்சிதா அனைவருக்கும் பரிச்சயமான முகம் தான். இவர் மீனாட்சி என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவருடைய பெயரையே பலருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு மீனாட்சி என்னும் பெயருக்கு இவருடைய முகம் தான் பிரபலமாகிவிட்டது. மதுரை மீனாட்சி உலகம் எல்லாம் பேமஸ் சரவணன் மீனாட்சி சின்னத்திரை ரசிகர்களின் ஃபேமஸ் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கலக்கல் கதாநாயகி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலில் பல சீசன்களில் தொடர்ந்து இவரே மீனாட்சி கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்ததால் ரசிகர்களின் மனதில் நன்றாகவே பதிந்து விட்டார். பொதுவாக சீரியலில் ஹீரோயினியை தான் ஒவ்வொரு சீசனுக்கும் மாற்றுவார்கள். ஆனால், இவருடைய கதையில் அப்படியல்ல ஒவ்வொரு சீசனிலும் ஒரு ஹீரோ வந்தாலும் இவர்தான் தொடர்ந்து மீனாட்சியாக நடித்துக்கொண்டிருந்தார். எந்த ஹீரோ வந்தாலும் பரவாயில்லை என்னுடைய கேரக்டரில் நான் பட்டையை கிளப்பி விடுவேன் என்று இவர் ஒவ்வொரு சீசனுக்கும் வித்தியாசத்தை கொடுத்து கலக்கிவிட்டார். அதனாலேயே இவரை இப்ப வரைக்கும் பல ரசிகர்கள் மீனாட்சி என்று அழைத்து வருகின்றனர்.

எளிமையான அழகு
ரச்சிதாவும் அவருடைய கணவரும் ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் என்னும் சீரியலில் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஊரடங்கு காரணமாக இந்த சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டதும் அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஆனால் மீண்டும் விஜய் டிவியில் இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் இரண்டில் நடித்துக்கொண்டிருக்கிறார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவர் கன்னட திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற செய்தியை சொன்னதும் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருந்தாலும் தொடர்ந்து இவர் இந்த சீரியலில் நடிப்பாரா என்று தான் பலர் கேட்டுக்கொண்டிருந்தனர் சீரியலில் பிஸியாக இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவ்வபோது போட்டோக்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த மாதிரி எளிமையாக சுடிதாரில் இவர் எடுத்த போட்டோஸ்கள் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்று வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications