பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' எப்படி இருக்கு? ரோம்-காம் ஓகேவா? இன்டெர்வெல் ட்விஸ்ட் வேற லெவல்! ட்விட்டர் ரிவ்யூ
சென்னை: 'லவ் டுடே'க்கு, பிறகு பிளாக்பஸ்டர் 'டிராகன்'னு ரெண்டு ஹிட் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதனோட மூணாவது படம் தான் 'டியூட்' (Dude)! அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் (இவர் சுதா கொங்கரா கிட்ட அசோசியேட்டா இருந்தவர்!) இயக்கத்துல, மமிதா பைஜு ஜோடியா நடிச்சிருக்கிற இந்தப் படம், தீபாவளி விருந்தா இன்னைக்குத் திரைக்கு வந்திருக்கு. ஏஜிஎஸ் நிறுவனம் ரிலீஸ் செஞ்சிருக்கிற இந்த 'ரொமாண்டிக்-காமெடி' படம், பிரதீப்புக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததா இல்லையான்னு இப்போ ட்விட்டர்ல ரசிகர்கள் என்ன பேசியிருக்காங்கன்னு பார்க்கலாம் வாங்க!

டியூட் ட்விட்டர் விமர்சனம்
'டியூட்' படத்துல சரத்குமார், டிராவிட் செல்வம், ரோகிணின்னு ஒரு பெரிய பட்டாளமே நடிச்சிருக்காங்க. படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டர்ல கலவையான விமர்சனங்களைத் தான் கொடுத்திருக்காங்க. பிரதீப் ரங்கநாதனின் ஸ்டைலும், மமிதா பைஜுவோட காம்போவும் செம க்யூட்டா இருக்குன்னு நிறைய பேர் சொல்லியிருக்காங்க. சரத்குமாருக்குக் கொடுத்த வேடமும், அவரோட நடிப்பும் நேர்த்தியா இருக்குதாம்.
இசை ஓகே ரகம்
சாய் அபயங்கரோட இசை ஒரு அற்புதமான அறிமுகப் படமா இருக்குன்னு சில பேர் சொல்ல, இன்னும் சிலரோ 'ஓகே ரகம் தான்'ன்னு சொல்லியிருக்காங்க. ஆனா, தேவைப்படும்போதெல்லாம் அவரோட இசை படத்தைத் தூக்கி நிறுத்துதுன்னு பாராட்டியிருக்காங்க.
எமோஷனல் கனெக்ட்
படம் ரோம்-காம் ஜானர்ல இருந்தாலும், எதிர்பார்த்த அளவு எமோஷனல் கனெக்ட் (Emotional Connect) ஆகலன்னு பலரும் ஃபீல் பண்ணிருக்காங்க.
படம் கொஞ்சம் ஸ்லோவா தான் ஸ்டார்ட் ஆகுதாம். முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே போகுதுன்னு சொல்லி இருக்காங்க. "ஆனா, இன்டர்வெலுக்கு முந்தைய 20 நிமிஷம் விழ விழ சிரிக்கும் அளவுக்கு இருக்கு!", "இன்டெர்வெல் பிளாக் எதிர்பாரா ட்விஸ்ட் உடன் இருக்கு. வேற லெவல்!"ன்னு சொல்லி ஃபயர் எமோஜி பறக்க விட்டிருக்காங்க. இடைவேளைக் காட்சியும் ரொம்ப அருமையா வந்திருக்குதாம்!
இரண்டாம் பாதி படுத்துருச்சாம்
இரண்டாம் பாதிதான் கொஞ்சம் மைனஸ் ஆகப் பேசப்படுது: இரண்டாம் பாதி அதகளமா ஆரம்பமாகி, கிளைமாக்ஸ்ல ட்விஸ்டுகளோட நிறைவடைந்தாலும், இன்னொரு விமர்சனம், "இரண்டாம் பாதி நன்றாகத் தொடங்கினாலும், திரைக்கதை உடனடியாகப் படுத்துவிட்டது, அதன்பின் எழவே இல்லை"ன்னு கடுமையா விமர்சிச்சிருக்காங்க. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் நல்ல ஆற்றலோட படத்தை எடுத்திருந்தாலும், திரைக்கதை எதிர்பார்த்த அளவு இல்லைன்னு பலரும் சொல்லியிருக்காங்க.
டியூட் படம் பற்றிய கருத்து
மொத்தமா பார்க்கும்போது, 'டியூட்' ஒரு நடுத்தரமான (Average) ரோம்-காம் படமா இருக்கிறதாத் தான் ட்விட்டர் விமர்சனங்கள் சொல்லுது. "எமோஷனல் கனெக்ட் கம்மியாக இருந்தாலும், காமெடியால் படம் நகருது. ஒருமுறை பார்க்கலாம்"னு ஒரு ரசிகர் சொல்லி இருக்காரு. இன்னொரு ரசிகர், "மொத்தத்தில் 'டியூட்' தீபாவளி வின்னர்!"னு சொல்லி ஃபயர் விட்டிருக்காரு.
ஆக, லவ் டுடே, டிராகன் மாதிரி பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் ஹிட் அடிச்சாரான்னு கேட்டா, ரசிகர்களோட விமர்சனம் கலவையாத்தான் இருக்கு. ஆனா, ஒருமுறை பார்க்கலாம்னு சொல்ற அளவுக்குப் படம் ஓகேவா இருக்குதுன்னு ட்விட்டர் சொல்லுது!












Click it and Unblock the Notifications