கர்ப்பமாக இருக்கும் போது இது தேவையா? மகாநதி சீரியல் சூட்டிங்காக நடிகை செய்த “விபரீத” செயல்
சென்னை: விஜய் டிவியில் மகாநதி சீரியலில் வெண்ணிலா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வைஷாலி சில மாதங்களுக்கு முன்புதான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடித்த ரிஸ்க்கான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இதுபோன்று ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என்று பலரும் அவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் மகாநதி சீரியலுக்கு என்று அதிகமாக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் விஜய் மற்றும் காவேரி இருவருக்கும் சோசியல் மீடியாவில் அதிகமான பேன்ஸ் பேஜ் இருக்கிறது. அதுபோல இவர்களின் காதலை பிரிப்பதற்காக வந்த வெண்ணிலாவை பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள். அந்த வெண்ணிலா கேரக்டரில் நடிகை வைஷாலி நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

விஷால் பட நடிகை
அதிலும் விஷால் நடிப்பில் வெளியான கதகளி திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து காதல் கசக்குதையா, கடுகு, சர்க்கார், பைரவா, சீமராஜா போன்ற படங்களில் நடித்திருந்தார். அதற்கு பிறகு சீரியல் பக்கமும் திரும்பி இருந்தார். ஆரம்பத்தில் ராஜா ராணி சீரியலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் முதலில் இவர் தான் நடித்து வந்தார். ஆனால் அந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகிவிட்டார்.
முத்தழகு சீரியல் வில்லி
அதற்கு பிறகு சினிமாவை விட சீரியலில் கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார். விஜய் டிவியில் சீரியல் முத்தழகு சீரியலில் வில்லியாக நடித்து வந்தார். அதுபோல சன் டிவியில் ஆனந்த ராகம் சீரியல் நடித்திருந்தார். இப்படி சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மகாநதி சீரியலில் சில மாதங்களுக்கு முன்புதான் இவர் நடிக்க தொடங்கி இருந்தார். இந்த நிலையில் தான் அவர் கர்ப்பமாக இருக்கிறார்.
ரிஸ்க்கான காட்சி
சில மாதங்களுக்கும் முன்பு அவர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து இருந்தார். ஆனால் தொடர்ந்து இவர் சீரியலில் நடிப்பாரா? என்ற விவாதம் எழுந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தொடர்ந்து சீரியலில் நடித்துக் கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் நேற்று இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த சீரியல் வில்லனான பசுபதி வெண்ணிலாவை போட்டு அடிப்பது போன்ற காட்சிகள் இருக்கிறது. அதற்காக ரிஸ்க்கான காட்சிகளில் வைஷாலி நடித்திருக்கிறார்.
இயக்குனர் தான் காரணம்
பசுபதி வெண்ணிலாவே மாடியில் இருந்து கீழே தள்ளுவது போன்ற காட்சியில் நடிக்கும் போது ஒரு பெட்டில் வைஷாலி தொப்பு என்று விழுகிறார். இந்த காட்சிகளை பார்த்ததும் பதறிப் போன ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இது உங்களுக்கு தேவையா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இது குறித்து வைஷாலி வெளியிட்ட பதிவில், "நான் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். முழு பாராட்டும் என்னுடைய இயக்குனரை சேரும். அவர்தான் என்னை இதை செய்ய வற்புறுத்தினார்.
சக நடிகர்களின் கவனிப்பு
இந்த காட்சிகளை சூட்டிங் செய்யும்போது நான் கவலையாகவும், பதட்டமாகவும் இருந்தேன். ஆனால் அவர் என்னை ஆறுதல் படுத்தி எதுவும் நடக்காது என்று தைரியம் சொன்னார். நாங்கள் உங்களை கவனித்துக் கொள்கிறோம் என்று சொன்னார். அதுபோல என்னுடைய சக கலைஞர்களும் இந்த காட்சியில் நான் நடிக்கும் போது என்னை பத்திரமா பாத்துக்கிட்டாங்க. அவங்களால தான் நான் கர்ப்பமாக இருந்தும் இந்த காட்சிகளை பண்ண முடிந்தது என்று இந்த காட்சிகள் உருவாகுவதற்கு காரணமாக இருந்த இயக்குனர் முதல் கேமராமேன் வரை எல்லோருக்கும் நன்றி சொல்லி இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications