விஜய் டிவியில் புதிய “பஞ்சாயத்து”.. கலகம் ஏற்படுத்தும் பிரியங்கா.. புது கதையா இருக்கே!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் டிஆர்பி போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னணி பொழுதுபோக்கு சேனலான Star Vijay தொடர்ந்து புதுப்புது ரியாலிட்டி ஷோக்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள புதிய நிகழ்ச்சி ப்ரோமோ ரசிகர்களிடையே பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த புதிய ஷோவை பிரபல தொகுப்பாளரும் ரசிகர்களின் ஃபேவரிட்டுமான பிரியங்கா (Priyanka Deshpande) தொகுத்து வழங்க உள்ளார்.

பஞ்சாயத்து கான்செப்ட் - Cupid உடன் பிரியங்கா
தற்போது வெளியாகியுள்ள டீசரில் பெண்கள், ஆண்கள் மீது தங்களுக்குள்ள பல்வேறு குறைகளை "Cupid" என்கிற கேரக்டரிடம் தெரிவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த புகார்களுக்கு பிரியங்கா மற்றும் Cupid இணைந்து பஞ்சாயத்து செய்யப்போகிறார்களா? என்பது நிகழ்ச்சியின் மையக் கருத்தாக இருக்கும் என தெரிகிறது.
இந்த கான்செப்ட் காதல், உறவு, புரிதல், நகைச்சுவை - அனைத்தையும் கலந்த ஒரு ரியாலிட்டி ஃபார்மாட்டாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதே நேரத்தில் இந்த ப்ரோமோ வெளியானது இது என அடுத்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை என்ற கமெண்ட்களும் அதிகமாக வருகிறது. அதே நேரத்தில் விஜய் டிவியில் புது நிகழ்ச்சிகள் வருவதெல்லாம் சரிதான் ஆனால் தொகுப்பாளினி மட்டும் மாத்தவே மாட்டீங்களா? எல்லா நிகழ்ச்சிக்கும் பிரியங்கா தானே விஜய் டிவிக்கு புது தொகுப்பாளியே கிடையாது என்று கலாய்க்கின்றனர்.
விஜய் டிவியின் 'எனர்ஜி க்வீன்'
விஜய் டிவி என்றாலே நினைவுக்கு வரும் முக்கிய முகங்களில் ஒருவர் பிரியங்கா. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி இப்படி பல நிகழ்ச்சிகள் மூலம் தனது நகைச்சுவை டைமிங், ஸ்பாண்டானியஸ் ரியாக்ஷன், ரசிகர்களுடன் உடனடி கனெக்ஷன் ஆகியவற்றால் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
அவரது இயல்பான பேச்சு, காமெடி சென்ஸ், எமோஷனல் கனெக்ஷன் - இவை தான் விஜய் டிவி தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சிகளை அவரிடம் ஒப்படைக்கக் காரணம்.
டிஆர்பி ரேஸில் விஜய் டிவியின் ஸ்ட்ராட்டஜி, சின்னத்திரையில் புதுமையான கான்செப்ட், பிரபல முகங்கள், வைரல் ஆகும் ப்ரோமோக்கள் இவை மூன்றையும் மையமாக வைத்து Star Vijay தனது நிகழ்ச்சிகளை வடிவமைத்து வருகிறது. குக் வித் கோமாளி, பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, இளம் தலைமுறையையும் குடும்ப பார்வையாளர்களையும் ஒரே நேரத்தில் கவரும் வகையில் இந்த "பஞ்சாயத்து ஷோ" உருவாக்கப்பட்டிருக்கிறது.
ரசிகர்கள் ரியாக்ஷன்
ப்ரோமோ வெளியானவுடன் சமூக வலைதளங்களில் "இது கண்டிப்பா ஹிட்", "பிரியங்கா ஷோனா கலக்கல் தான்" "ரிலேஷன்ஷிப் பஞ்சாயத்து செம்மா இருக்கும்" என்ற கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications