Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜுவை பார்த்து வயிறு எரிந்த அபிஷேக்...கலாய்த்து தள்ளிய பிரியங்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுநாள் வரையிலும் இல்லாமல் முதல்முறையாக அபிஷேக் அமைதியாக இருந்திருக்கிறார்.

அடாவடியாக தான் செய்யும் செயல்கள் எல்லாமே கடைசியில் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது என்பதை லேட்டா தான் புரிந்து இருக்கிறார் போல.

ராஜூ சக போட்டியாளர்களிடம் மிமிக்கிரி செய்து அசத்தியதை பார்த்து பொறுத்துக் கொள்ளாமல் பொங்கி எழுந்திருக்கிறார் அபிஷேக்.

நினைப்பது ஒன்று நடப்பது வேறு

நினைப்பது ஒன்று நடப்பது வேறு

எந்த இடத்தில் தான் இருந்தாலும் அந்த இடத்தில் அனைவரின் கவனமும் தன் மீது மட்டும் தான் இருக்கவேண்டும் என்று ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருப்பார்கள். தற்போது அதுதான் அபிஷேக்கும் நிரூபித்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் இவர் செய்யும் செயல்கள் எல்லாமே அடாவடியாகவும், அறுவையாகவும் இருக்கிறது என்று, சக போட்டியாளர்கள் இவரைப் பார்த்தாலே தெறித்து ஓடி விடுகிறார்கள். இவரும் எவ்வளவோ மெனக்கெட்டு ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டிருந்தாலும் அது கடைசியில் ஒன்றுமில்லாமல் மாறிவிடுகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கூட்டணி விளையாட்டு

கூட்டணி விளையாட்டு

பிக்பாஸ் இரண்டாவது சீசன் தொடங்கி நேற்றோடு 19 நாட்கள் முடிவடைந்த நிலையில் நேற்றைய ஒரு நாள்தான் அபிஷேக்கின் ஆட்டம் குறைவாக இருந்தது என்றும் அதனால்தான் மிக சுவாரஸ்யமாக இருந்தது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர் அமைதியாக இருந்தாலே நிகழ்ச்சி களை கட்டிவிடுகிறது என்று பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவர் எப்போதும் பிரியங்கா, நிரூப்புடன் ஒன்று சேர்ந்து கொண்டு தாங்கள் மட்டும் தான் முன்னேற வேண்டும் என்று ஒவ்வொரு செயல்களையும் செய்து கொண்டிருப்பதால் தான் வெறுப்பையும் சம்பாதித்து இருக்கிறார்.

Recommended Video

    Bigg Boss 5 ல Priyanka தான் Fun | Sunitha Gogoi Excluisive | Filmibeat Tamil
    ராஜூ மீது வெறுப்பா??

    ராஜூ மீது வெறுப்பா??

    தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிகமாக நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்றுக் கொண்டு இருப்பதில் அபிஷேக் முதலிடத்தில் இருந்து வருகிறார். இவர் என்ன செய்தாலும் கலாய்க்கும் ரசிகர்கள் தற்போது நேற்று செய்த செயல்களை வைத்து மீம்ஸ்களில் கலாய்த்து வருகின்றனர். இவருக்கு எப்போதுமே ராஜீவ் மீது ஒரு வெறுப்பு இருந்து வருகிறது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் அது அவரை தாண்டி வெளிப்பட்டு விடுகிறது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால் அதுபோலத்தான் நேற்றைய எபிசோட்டில் இவர் வெளி விட்டிருக்கிறார்கள்.

     பொறாமை பொங்குது

    பொறாமை பொங்குது

    கார்டன் ஏரியாவில் அமர்ந்துகொண்டு சக போட்டியாளர்களை தன்னுடைய மிமிக்கிரியால் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இவருடைய இந்த திறமையை பார்த்து போட்டியாளர்கள் பலர் வயிறு வலிக்க சிரித்து கொண்டிருக்கின்றனர். தங்களுடைய சோகங்களையும், பொழுதையும் போக்கிக் கொள்வதற்காக இவருடைய காமெடி போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறது. இவர் பல திறமைகளை வைத்துக்கொண்டு இருப்பதை தற்போது நிரூபித்திருக்கிறார். இவர் பல குரலில் பேசி அசத்தி கொண்டிருந்ததைப் வீட்டிற்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அபிஷேக்கால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான் ராஜூவை உசுப்பேத்தி வைத்திருக்கிறேன். அதனால்தான் அவன் அப்படி செய்து கொண்டிருக்கிறான் என்று
    இவர் கூறியிருக்கிறார்.

     கலாய்க்கும் ப்ரியங்கா

    கலாய்க்கும் ப்ரியங்கா

    இதைக் கேட்டதும் பிரியங்கா அபிஷேகை கலாய்த்திருக்கிறார். உன் மனசில் என்ன கலா மாஸ்டர் என்று நினைப்பா...கிழி, கிழி என்று கிழித்து விட்டாய் என்று கூறுவதற்கு.., இல்ல உன்ன நீயே சிம்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?? என்று தன்னுடைய மனதில் இருப்பதையெல்லாம் வெளிப்படையாக அபிஷேக்கை பார்த்து பேசி விட்டார். இதை கேட்டதும் அப்படியே அமைதியாக மாறி விட்டார். அதனால் தான் இந்த எபிசோடு கலகலப்பாக இருந்தது என்று ரசிகர்களும் தங்கள் பங்குக்கு அபிஷேக்கை கலாய்த்து வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+