வணக்கத்தை போட்டு விளம்பரப்படுத்திய கூல் சுரேஷ்...ஐசரி கணேஷ் கொடுத்த கிப்ட்.. இது என்ன புது முடிவு
சென்னை:கடந்த ஒரு வருஷமாக கூல் சுரேஷ் போட்டு வரும் வணக்கத்திற்கு நன்றி சொல்லும் விதமாக வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூல் சுரேஷுக்கு ஐபோன் பரிசளித்துள்ளார்.
ஒரே டயலாக்கை ஒரு வருஷமா ஒவ்வொரு தியேட்டர் வாசல் வாசலா போய் பேசி படத்தையும் ப்ரொமோட் பண்ணி, மீடியாக்களில் தன்னையும் ப்ரொமோட் பண்ண கூல் சுரேஷ் ஐசரி கணேசிடமிருந்து ஐபோனை வாங்கும்போதும் அந்த டயலாக்கை விடுவதாக இல்லை.

போகிற இடமெல்லாம் வணக்கத்தை போடு
சமூக வலைதளங்களில் இருப்பவர்களுக்கு கூல் சுரேஷ் பற்றி அறிமுகமே தேவையில்லை. அந்த அளவிற்கு கடந்த வருடம் முழுவதும் வாரந்தோறும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தியேட்டர் வாசலில் நின்று அங்கு ஓடும் படத்தின் பெயரை சொல்லி வணக்கத்தை போடு என்று வித்தியாசமாக கூவி கூவிய பேமஸ் ஆகிவிட்டார். படத்திற்கு மட்டுமல்ல கல்யாண வீட்டிற்கு சென்றால் கூட 'வெந்து தணிந்தது காடு.. மணமக்களுக்கு வணக்கத்தை போடு..' என்று கூச்சம் இல்லாமல் விளம்பர அட்டையுடன் தான் போவார்.

வேற லெவல் ப்ரோமோஷன்
சிம்பு நண்பரான கூல் சுரேஷ் தன்னுடைய நண்பர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துக் கொண்டிருப்பதை மறந்து விடுவார் என்று நினைத்தாரோ!? என்னவோ!? வெந்து தணிந்தது காடு.. ______வணக்கத்தை போடு..." என்று கிடைக்கிற கேப்பில் எல்லாம் சமூக வலைதளங்களில் சவுண்டு விட்டு வந்தார்.தன்னை கேலி கிண்டல் செய்வார்கள் என்று தெரிந்திருந்தும் தன்னுடைய நண்பர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்காக தனி ஆளாக வருடம் முழுவதும் ப்ரமோஷன் செய்து வந்தார்.

நண்பேண்டா கூல் சுரேஷ்
வழக்கமாக படம் முடிந்ததும் தியேட்டருக்குள் இருந்து வெளியே வந்து ஆக்ரோஷமாக பேசும் கூல் சுரேஷ், வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் அன்றைக்கு ஒரு வித்தியாசமாக உள்ளே போகும் போதே ஆக்ரோஷமாக ஆடி காரில் போய் அலப்பறை செய்ய நினைத்திருக்கிறார்.ஆனால் சிம்பு ரசிகர்கள் இவர் மீது கோபத்தில் இருந்தார்களோ!? அல்லது அளவு கடந்த பாசத்தில் இருந்தார்களோ!? என்று தெரியவில்லை, எல்லாவற்றையும் ஆடி காரின் கண்ணாடி மீது காட்டி விட்டனர். அதையும் பெருந்தன்மையாக எடுத்துக் கொண்ட கூல் சுரேஷ் தன்னுடைய நண்பர் சிம்புவின் படம் நன்றாக இருப்பதாகவும், இதற்காகத்தான் காத்திருந்ததாகவும் அதுவே தனக்கு போதும் என்று கூறியிருந்தார்.

ஐசரி கணேஷ் கொடுத்த ஐபோன்
வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ஒரு புல்லட்டும், ஹீரோ சிம்புவுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றையும் சமீபத்தில் பரிசளித்திருந்தார். தற்பொழுது எந்தவித செலவுமின்றி தான் தயாரித்த படத்திற்கு வருடம் முழுவதும் ப்ரமோஷன் செய்த கூல் சுரேஷிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு ஒரு ஐபோன் பரிசளித்துள்ளார் ஐசரி கணேஷ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications