நான் என்ன அவர மாதிரியா..!!ஜூலியை சீண்டிய தயாரிப்பாளர் ரவீந்தர்.. குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்த தயாரிப்பாளர் ரவீந்தர், நான் என்ன ஜூலி மாதிரியா..!!?? என்று தன்னை கலாய்த்த நெகட்டிவர்களிடம் கேள்வி கேட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை எப்போதுமே கலாய்த்து வந்த ரவீந்தர் தற்போது ஜூலியை பற்றி பேசி இருப்பது பார்த்த ரசிகர்கள் பலர் இன்னும் அந்த பிக் பாஸ் விட்டு வரவில்லையா?? என்று ரவீந்தரை கலாய்த்து வருகிறார்கள்.
ரவீந்தர் தன்னை நேசிக்கும் நபர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் என்பதை தற்போது தனக்கு திருமணம் முடிந்த இந்த இரண்டு நாட்களில் புரிந்து கொண்டதாகவும் தன்னை அதிகமாக வெறுத்தவர்கள் கூட தற்போது தனக்கு வாழ்த்து கூறி வருவதையும் பற்றி பெருமையாக கூறியிருக்கிறார்.

ரசிகர்களை கவர்ந்த ரிவ்யூ
தயாரிப்பாளரான ரவீந்தர் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார். அவர் தயாரித்த திரைப்படங்கள் வெற்றியடைந்ததோ இல்லையோ அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து ரசிகர்களின் மத்தியில் நன்றாகவே பிரபலம் அடைந்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் செயல்களை பார்த்து மணி கணக்கில் இவர் ரிவ்யூ செய்வதை ரசிக்கும் ரசிகர்கள் இருந்து வர தான் செய்கிறார்கள். பல நேரங்களில் ரவீந்தரை பற்றி பலர் நெட்டிசன்கள் கலாய்த்து வந்தாலும் அதை ஒரு பொருட்டாக ரவீந்தர் எடுத்துக் கொண்டதே இல்லை.இதனாலேயே பலருக்கும் இவரை பிடித்து போய் உள்ளதாம்.

நெகட்டிவ் எல்லாம் கண்டுக்கிறதே இல்லை
தயாரிப்பாளர் ரவீந்தர் சின்னத்திரையைச் சார்ந்த மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் ஆக இருந்தாலும் பெற்றோர்களின் சம்மதத்தின் படி திருப்பதியில் எளிமையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிரபலங்கள் யாரையும் இவர்கள் அழைக்கவில்லை. அது மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்கும் இவர்கள் தங்களுடைய திருமணத்தைப் பற்றி எந்த அறிவிப்பும் விடவில்லை என்பது பலருக்கும் வியப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி பற்றி பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதைப் பார்த்த ரவீந்தர் அதையெல்லாம் பெரியதாக தான் எடுத்துக் கொண்டதே இல்லை. இப்போதும் அது போல நெகட்டிவ் கமெண்ட்களை பற்றி கண்டு கொள்வது இல்லை என்று மகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார்.

என்ன இப்படி சொல்லிவிட்டார்
தன்னுடைய திருமணத்திற்கு வாழ்த்துக்கள் பலர் தெரிவித்திருப்பதை பார்க்கும்போது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதே நேரங்களில் ஒரு சிலர் இப்பவும் இவரை திட்டி வருவதை பார்க்கும் போது நான் எப்போதும் ஒரே மாதிரி தான் இருந்து வருகிறேன். நான் என்ன பிக் பாஸ் ஜூலியா...!! முதலில் உள்ளே சென்று கெட்ட பெயர் வாங்கி விட்டு வந்த பிறகும், இரண்டாவது முறை சென்று அதை மாற்றி நல்ல பெயராக வாங்குவதற்கு என்று நக்கலாக பேசியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இப்ப எதற்கு சும்மா இருக்கிற ஜூலியை வம்பு இழுக்கிறார் என்று குழம்பி வருகிறார்களாம்.

குவியும் வாழ்த்துக்கள்
ரவீந்தர் இதற்கு முன்பு எத்தனையோ பேரை வம்பு இழுத்து இருந்தாலும் அவர்கள் கூட தனக்கு திருமண வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு உங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் பரவாயில்லை இனி உள்ள நேரங்களில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களும் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். எப்போதுமே ரவீந்தர் மற்றும் அவருடைய மனைவியான மகாலட்சுமியும் மகிழ்ச்சியோடு வாழ தற்போது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் கொடி கட்டி பறந்து வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications