குக் வித் கோமாளி புகழுக்கு கறி விருந்து அளித்த பிரபல கிரிக்கெட் வீரர்.. டிரென்டாகும் படம்
சென்னை: குக் வித் கோமாளி புகழை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர்.
குக் வித் கோமாளி சீசன் தற்போது 3ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கெனவே நடந்த இரு சீசன்களிலும் பாலா, புகழ், சிவாங்கி உள்ளிட்டோரின் காமெடிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதற்கு போட்டியாக மற்ற சேனல்களில் தொடங்கப்பட்ட சமையல் நிகழ்ச்சியை விட குக் வித் கோமாளி பிரபலம் ஆனதற்கு காரணம் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதற்காக அடிக்கும் லூட்டிகளே ஆகும்.

கடலூர் புகழ்
அந்த வகையில் கடலூரை சேர்ந்த புகழ் நடிகராக வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் டிவியில் சிரிப்புடா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் கலக்க போவது யாரு உள்ளிட்டவைகளிலும் கலக்கு கலக்கியுள்ளார். அதில் பல நேரங்களில் பெண் வேடமிட்டு தன் குரலையும் பெண் குரலில் பேசுவார்.

குக் வித் கோமாளி
இதையடுத்து குக் வித் கோமாளி முதல் சீசனில் கலந்து கொண்டு தனது நகைச்சுவையால் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து விஜய் டிவியில் காமெடி ராஜா, கலக்கல் ராணியிலும் கலந்து கொண்டார். இவர் அண்மையில் வெளிவந்த வலிமை படத்தில் நடித்துள்ளார். அது போல் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்
அண்மையில் தனது காதலியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் புகழ். இவர் அண்மையில் பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்துள்ளார். சேலத்தில் உள்ள நடராஜன் வீட்டில் புகழுக்கு கறி விருந்தும் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படங்களை நடராஜன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அண்ணன் புகழ்
அதில் அண்ணன் புகழ் பக்கத்தில் இருக்கும் போது மன கவலையே இருக்காது. நான் அழைத்ததன் பேரில் என்னுடைய வீட்டிற்கு வந்ததற்கு நன்றி என நடராஜன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நடராஜன், நடிகர் யோகி பாபுவை சந்தித்து அவருடன் நேரத்தை செலவிட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது யோகி பாபுவின் மண்டேலா படத்தை பாராட்டியிருந்தார் நடராஜன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications