Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சன்டிவியில் 'சித்தி'க்கு என்ட் கார்டு போட்ட ராதிகா.. அடுத்து கால் பதிக்கும் டிவி சேனல் எது தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியில் புதிய சீரியலை ஆரம்பிக்கப்போகிறார் ராதிகா.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி சீரியல்களின் ராணியாக வலம் வந்த ராதிகா புதிய பயணத்தை கலைஞர் தொலைக்காட்சியில் தொடங்கப்போகிறார். சித்தியில் பயணத்தை ஆரம்பித்து சித்தி 2 சீரியலுடன் சன்டிவிக்கு எண்ட் கார்ட் போடும் ராதிகா, கலைஞர் தொலைக்காட்சியில் பொன்னி C/o ராணி வாணியாக சீரியல் பயணத்தை தொடங்க உள்ளார்.

90 கிட்ஸ்களில் பேவரட் சீரியல்களில் ஒன்று சித்தி. நடிகை ராதிகா இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடித்த இந்த சீரியல் ரசிகர்களிடையே புகழ்பெற்ற சீரியலாக ஒளிப்பாகி வந்தது. சன்டிவியில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2001வரை ஒளிபரப்பான சித்தி தொடரின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் தமிழக மக்களின் மனதில் ஆழமாக பதிந்தது. இந்த சீரியலில் நடித்தஅனைவருக்குமே ரசிகர்கள் மனிதில் நீங்கா இடம் கிடைத்தது.

 ராதிகாவின் ராஜாங்கம்

ராதிகாவின் ராஜாங்கம்

ராடான் டிவி மூலம் ராதிகா பல சீரியல்களை தயாரித்தார். 11 ஆண்டுகளுக்கு முன் இரவு 9.30 மணிக்கு கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா... என்ற பாடல்தான் அனைவரின் வீட்டு டிவிகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கும். சித்தி.... என்று சின்னக்குரல் ரீங்காரமிடும். இதனைத் தொடர்ந்து, சன்டியில் ஒளிபரப்பான அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே போன்ற தொடர்களில் நடித்த நடிகை ராதிகா, 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை வாணி ராணி சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தினார்.

பாதியிலேயே நிறுத்திய ராதிகா

பாதியிலேயே நிறுத்திய ராதிகா

அடுத்த சந்திரகுமாரி என்ற சரித்திர தொடரில் நடித்த அவர், அந்த தொடர் போதிய வரவேற்பு கிடைக்காததால், ஒளிபரப்பும் டைம் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அந்த தொடரில் இருந்து ராதிகா விலகியதை தொடர்ந்து, ஒரு சில நாட்களில் சீரியலும் முடிவுக்கு வந்தது.

சித்தி 2 சீரியல்

சித்தி 2 சீரியல்

இதனால் ராதிகா அடுத்து எந்த சீரியலில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், 22 வருடங்களுக்கு பிறகு சித்தி தொடரின் 2ஆம் பாகமாக சித்தி 2 சீரியலை தயாரித்து நடிக்க தொடங்கினார். இந்த சீரியலையும் ராதிகாவே தயாரித்து நடித்தும் வந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். சினிமா, வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்தினார் ராதிகா.

சித்தி 2 முடிவு

சித்தி 2 முடிவு

ராதிகா நடிக்காவிட்டாலும் சித்தி 2 சீரியல் பல திருப்பங்களுடன் சென்றுக்கொண்டிருந்தது. இந்த சீரியலில் ப்ரீத்தி சர்மா, நந்தன் லோகநாதன், தர்ஷனா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதில் வெண்பா கதாபாத்திரமும், கவின் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அடிவாங்கவே இரவு நேரத்தில் இருந்து பகல் நேரத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி க்ளைமேக்ஸ் காட்சிகளின் எபிசோடும் படமாக்கப்பட உள்ளது. சித்தி 2 நிறைவுபெற போவதாக வந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கலைஞர் டிவியில் ராதிகா

கலைஞர் டிவியில் ராதிகா

தற்போது ராதிகா சீரியல்கள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. வாணி ராணி சீரியலுக்கு கலைஞர் தொலைக்காட்சியில் கிடைத்த வரவேற்பை பார்த்து புதிய சீரியலை தயாரித்து நடிக்கப்போகிறார் ராதிகா. கலைஞர் தொலைக்காட்சியில் 'பொன்னி C/o ராணி வாணி என்ற சீரியலை தயாரித்து இரட்டை வேடத்தில் நடிகை ராதிகா நடிக்கிறார். அதற்கான ப்ரோமோவும் வெளியாகி உள்ளது.

பொன்னி C/o ராணி வாணி

பொன்னி C/o ராணி வாணி

ஜூன் மாதத்தில் இருந்து பொன்னி C/o ராணி வாணி சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக கலைஞர் தொலைக்காட்சி சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளது. இந்த தொடர் 'வாணி ராணி' சீரியலின் மறுஒளிபரப்பா அல்லது அதே கதையின் இரண்டாம் பாகமா என்பது சீரியல் ஒளிபரப்பான பின்னரே தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+