Coolie Collection: 4 நாட்களில் ரூ.404 கோடி வசூல்.. தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை படைத்த ‘கூலி’
சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், வெறும் 4 நாட்களிலேயே 404 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் அள்ளியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் முதல் 4 நாட்களிலேயே ரூ.404 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி தமிழ் சினிமா வரலாற்றிலேயே வெறும் 4 நாளில் இவ்வளவு பெரிய கலெக்ஷனை பெற்ற முதல் திரைப்படம் எனும் பெருமையை 'கூலி' பெற்றுள்ளதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது ரஜினிகாந்த்தின் 'கூலி' திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர் கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது 'கூலி'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
கூலி படத்துக்கு கடும் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இதனைத் தாண்டி அனைத்து மாநிலங்களிலும் இப்படம் பயங்கர வசூல் செய்து வருகிறது. இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். முதல் நாளிலேயே கூலி திரைப்படம் ரூ.151 கோடி வசூல் ஈட்டியது.
இரண்டாம் நாளில் இப்படம் இந்திய அளவில் 50 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் இந்தியாவில் அதிவேகமாக நூறு கோடி வசூலை கடந்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை கூலி பெற்றது. கூலி திரைப்படம் மூன்றாம் நாளில் இந்திய அளவில் 38 கோடி வசூலித்துள்ளது. தமிழ் படங்களிலேயே மிக குறுகிய நாட்களில் 300 கோடி வசூல் செய்த படம் என்ற பெருமையை கூலி திரைப்படம் பெற்றுள்ளது.
இந்நிலையில், 4 நாட்களில் ரூபாய் 404 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது கூலி திரைப்படம். உலக அளவில் 4 நாட்களில் ரூபாய் 404 கோடி வசூல் செய்து, தமிழ் சினிமா வரலாற்றிலேயே வெறும் 4 நாளில் இவ்வளவு பெரிய கலெக்ஷனை பெற்ற முதல் திரைப்படம் எனும் பெருமையை 'கூலி' பெற்றுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications