இருட்டறையில் ஈரம் சொட்ட சொட்ட.. ரம்யா பாண்டியன் ஜிலீர்.. ஓடி வந்த ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிளாக் அண்ட் வொயிட் வீடியோவில் கலர்ஃபுல்லாக ரம்யா பாண்டியன் போடும் ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்களுக்கு வேர்த்து விறுவிறுத்து போய்விட்டதாம்.

ராத்திரி வேளையில் ஈரம் சொட்ட சொட்ட இந்த மாதிரி ஒரு வீடியோவை வெளியிட்டால் ரசிகர்களின் நிலைமை என்னாகும் என்று யோசிக்காமல் இப்படி எல்லாம் பண்ணலாமா என சிலர் செல்லமாக கோபப்பட்டிருக்கிறார்கள்.

ஸ்லோமோஷனில் இவருடைய வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை என்று ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள்.

வேற லெவல் ரீல்ஸ்

வேற லெவல் ரீல்ஸ்

செலிபிரிட்டிகளே சில்லறையை சிதற விடுமளவிற்கு ரீல்ஸ்ல வீடியோவில் சிறப்பான சம்பவம் செய்துள்ளார் ரம்யா பாண்டியன். இருட்டு பேக்ரவுண்டில் ஒயிட் கலர் கவுனில் தலையில் தண்ணீர் தெறிக்க இவர் போட்டுள்ள வீடியோ ரசிகர்களின் மனங்களை தெறிக்கவிட்டு வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் தூக்கத்தை தொலைத்து நள்ளிரவிலும் இன்ஸ்டாகிராமில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

வீக்னஸ் எல்லாம் தெரிஞ்சி போச்சி

வீக்னஸ் எல்லாம் தெரிஞ்சி போச்சி

கேமராவால் ரசிகர்களின் மனங்களை கோமாவிற்கு கூட கொண்டு செல்ல முடியும் என்பதை தனது போட்டோசூட் மூலம் நிரூபித்தவர் ரம்யா பாண்டியன். எங்க அடிச்சா..எங்க வலிக்கும்.. என்று தெரிந்து,கரெக்ட்டாக தமிழ் ரசிகர்களின் வீக்னஸ் புரிந்து அடிப்பவர் ரம்யா பாண்டியன்.அப்படி கரெக்டா அடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.ஒரிஜினல் தமிழ்நாட்டு பெண்ணான ரம்யா பாண்டியன் பார்ப்பதற்கு சுண்ணாம்பு அடித்தார் போல் பிற மாநிலத்து கதாநாயகிகள் போல் இல்லாமல், தங்கள் எதிர் வீட்டிலோ, பக்கத்து வீட்டிலோ இருக்கும் பெண்ணை போல் இருப்பதால் இவர் என்ன செய்தாலும் தமிழ் ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கி விட்டனர்.

கண்ணாடிக்கும் காதல் வந்திரப் போகுது

கண்ணாடிக்கும் காதல் வந்திரப் போகுது

மங்கலாக தெரியும் கண்ணாடியில் நீர்த்துளிகளை துடைத்து தன் அழகு முகத்தை காட்டி, இருட்டு அறையில் ஒயிட் லைட் பேக்ரவுண்டில் கால் முளைத்த பட்டாம்பூச்சியை போல் அங்கும் இங்கும் தாவியும், படுத்தும், ஒரு மார்க்கமாக உட்கார்ந்து கொண்டு, பார்த்ததும் சொக்கவைக்கும் பார்வையில் ஸ்லோமோஷனில் போட்டுள்ள இந்த வீடியோவிற்கு செம ரெஸ்பான்ஸ் பா!!

மாற்றம் கொடுத்த பிக் பாஸ்

மாற்றம் கொடுத்த பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் செல்வதற்கு முன்பு இவர் மீது இருந்த கிளாமர் இமேஜ்,பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு சில சதவீதங்கள் குறையத்தான் செய்தன. ஓரளவு இவரால் முடிந்த அளவிற்கு சிறப்பான பெர்பாமன்ஸ் கொடுத்தாலும் இவரால் ஆரிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால் பிக் பாஸ் கன்டஸ்டன்ட் என்ற அளவிலே தனது கேரியரில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போன்று ஒரே வீட்டில் கூடி கும்மியடித்த இவரது பிக் பாஸ் ஹவுஸ் மெட்கள் தங்கள் சக போட்டியாளர் போட்ட வீடியோவை வரவேற்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாழ்த்துக்கள் குவியுது

வாழ்த்துக்கள் குவியுது

இவரது பிக்பாஸ் ஹவுஸ் மேட் ஆஜித் 'பிரிட்டி அக்கா' என்று தன் பிரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். சின்னத்திரை நட்சத்திரங்கள் வாணி போஜன் மற்றும் சாந்தி சிம்பிளாக ஹார்ட் சிம்பிளோடு முடித்துக்கொண்டனர். என்னோட மைண்ட் வாய்ஸ் உனக்கு கேட்டுச்சா?? என்று விஜே அர்ச்சனா கமெண்ட் செய்துள்ளது தான் சற்று யோசிக்க வைக்கிறது!..இவரது ரசிகர்கள் ஒருவேளை அர்ச்சனாவும் இந்த பிஜிஎம்(BGM) க்கு ஏதேனும் வீடியோ போட நினைத்திருப்பாரோ!! நல்ல வேலை ரம்யா பாண்டியன் முந்திக்கொண்டு வீடியோ போட்டு ரசிகர்களை காப்பாற்றிவிட்டார் என்று உள்ளுக்குள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

வீடியோ வைரல் ஆகிடுச்சி

வீடியோ வைரல் ஆகிடுச்சி

கமெண்ட் பண்ணால் ஏதேனும் கிசுகிசுக்களுக்கு உள்ளாகி விடுவோம் என நினைத்தாரோ!! என்னவோ? ....சோம் லைக்கோடு மட்டும் நிறுத்திக் கொண்டார்.

வீடியோவை ஆஹா!! ஓஹோ!! என்று புகழ்ந்து தள்ளுவது பெரும்பாலும் ரம்யா பாண்டியன் ஃபேன்ஸ் பேஜ்ஜாகவே தான் இருக்கிறது. இருந்தாலும் லைட்டிங் அமைப்பு, கேமராமேனின் திறமை, கான்சப்ட்டிற்கு ஏற்ற இவரது காஸ்ட்யூம், மற்றும் பிஜிஎம் இவையெல்லாம் சேர்ந்து இந்த ரீல்ஸ் வீடியோ வேற லெவலில் தான் இருக்கிறது!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+