Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்சமான அழகில் ரித்திகா...பின்னாடியே அலையும் ரசிகர்கள் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பச்சை வண்ண உடையில் பளபளக்கும் அழகில் ஜொலிக்கும் ரித்திகாவை பார்த்ததும் ரசிகர்கள் மெய்மறந்து போய் விட்டார்களாம்.

மூக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் நீளமா இருந்தால்...! அப்படியே கிளிதான்... என்று சொல்லத் தோன்றும் அளவிற்கு பச்சை சுடிதாரில் பள..பள..வென்று பட்டைய கிளப்புகிறார் ரித்திகா.

மூக்கும்.. முழியும்..அம்சமா இருந்தா... எந்த டிரஸ் போட்டாலும் மங்களகரமாதான் இருக்கும் போல..? ஃபேமிலி பிகர் ரித்திகாவின் இந்த போட்டோக்களை பார்த்து நிறைய மணமகன்கள் மேட்ரிமோனி வெப்சைட்டை விட்டுவிட்டு ரித்திகாவின் இன்ஸ்டாகிராம் ஐடி க்கு ரெஸ்யூம் அனுப்பி வருகின்றனர்...

மேக்கப் கொஞ்சம் தூக்கலா இருக்கு

மேக்கப் கொஞ்சம் தூக்கலா இருக்கு

என்னதான் பொங்கலுக்கு வெள்ளை அடிச்சமாதிரி ஆக்டர்ஸ் இருந்தாலும்... தமிழ் பொண்ணுங்களுக்குன்னு இருக்கிறத கிரேஸ்... என்னவோ குறையாம இருக்கிறதுக்கு ரித்திகா மாதிரி பொண்ணுங்களும் இருக்கிறதுதான் ஒரு காரணம்.கல்யாணம் பண்ணனும்னா... இந்த மாதிரி பொண்ணு பாருங்க... என்று அடையாளம் காட்டக் கூடிய அளவிற்கு அக்மார்க் தமிழ்ப் பெண்ணான ரித்திகா வின் ஒரிஜினல் பெயர் தமிழ்ச்செல்வி. தன் இன்ஸ்டாகிராம் ஐடியில் ரித்திகா என்ற பெயருக்கு முன்னால் தமிழ் என்று சேர்க்கும் அளவிற்கு தமிழ் மீது பற்று கொண்ட ரித்திகா தமிழ் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

குடும்ப பாங்கான முக அமைப்பு

குடும்ப பாங்கான முக அமைப்பு

ஆரம்பத்தில் சின்னத்திரை, பெரிய திரை,என்ற எந்த கனவுமே இல்லாமல் இருந்த ரித்திகா, தனது குடும்பத்திற்கு ஒரு சப்போர்ட்டாக இருக்க வேண்டுமென்ற ஆசையில் லோக்கல் கேபிள் சேனலில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் part-time தொகுப்பாளராக தன் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார். இவரது தமிழ் புலமையுடன் சேர்ந்த இவரது அழகும் இவரை லோக்கல் சேனலில் இருந்து படிப்படியாக உயர்த்திக் கொண்டே போனது.விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் முகத்தை காட்டியவர், அதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே சேனலில் பாக்கியலட்சுமி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சன் டிவியின் திருமகள் சீரியலில் லீட் ரோலில் நடித்த ரித்திகா அதைத்தொடர்ந்து சாக்லேட் என்ற சீரியலிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மாற்றம் கொடுத்த குக் வித் கோமாளி

மாற்றம் கொடுத்த குக் வித் கோமாளி

எவ்வளவுதான் சீரியல் மேல் சீரியலில் நடித்தாலும் குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான செலிபிரிட்டி ஆகிவிட்டார்.அதற்குக் காரணம் இவரது அழகிய எளிமையான தோற்றமும், வசீகரிக்கும் சிரிப்பும் தான்.சின்னத்திரை சினேகா என்று இவரது புன்னகையை பார்த்து இவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். சீரியல், ரியாலிட்டி ஷோ ,என்று பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் தனக்கென இருக்கும் ஃபாலோயர்ஸ்களுக்காக சில போஸ்டர்களை அவ்வப்போது போஸ்ட் செய்து வருகிறார்.

 அட்டைப்பட மகாலட்சுமி

அட்டைப்பட மகாலட்சுமி

பார்த்தவுடன் கையெடுத்து கும்பிடத் தோன்றும் அளவிற்கு மகாலட்சுமி போல் இருக்கும் ரித்திகா அனைத்து தரப்பினராலும் யு'சர்டிபிகேட் தரக் கூடிய அளவிற்கு தனது இமேஜை மெயின்டெயின் செய்து வருகிறார். எந்த கவர்ச்சி நெடியும் இல்லாமல் போஸ்ட் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ரித்திகாவின் பச்சை சுடிதார் படங்களையும் பகிர்ந்து டிரென்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+