ரித்திகாவுக்காக பாக்கியலட்சுமி சீரியலில் மாற்றப்பட்ட கதை!?ஆனால் கடைசியில் சீரியலில் இருந்து விலகலா!?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் இதுவரை நடித்து வந்த ரித்திகா விலகப் போவதாக செய்திகள் பரவி வருகிறது.
அமிர்தா மற்றும் ஏழில் திருமண ட்ராக் தொடங்கிய ஒரு சில நாட்களிலே நிஜத்தில் ரித்திகாவின் திருமணம் நடைபெற்றதால் இந்த சீரியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

சமீபத்தில் திருமணம்
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் நகர்புறத்திலும், கிராமப்புறத்திலும் இருக்கின்றனர். பல வருடமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் அமிர்தா கேரக்டரில் ரித்திகா நடித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் இவர் இந்த சீரியலை விட்டு விலக இருப்பதாக பலர் தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஆனால் அதைக் குறித்து அவர் எந்த தகவலையும் உறுதியாக கூறாவிட்டாலும் நடப்பது அப்படித்தான் இருக்கிறது என்பதால் நம்பத் தோன்றுகிறது.

பிரச்சனைக்கு காரணம்
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் மற்றும் அமிர்தாவின் காதலுக்கு அமிர்தாவின் வீட்டில் சம்மதம் கிடைத்துவிட்ட நிலையில் எழிலின் வீட்டில் பாக்கியா மட்டுமே சம்மதித்து இருந்தார். ஆனால் இவர்களுடைய காதலுக்கு பிரச்சனையாக எழிலின் ப்ரொடியூசர் மகள் இருந்து வருகிறார். அவர் பாக்கியலட்சுமி வீட்டில் அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்துக் கொண்டு அமிர்தாவின் வீட்டில் எழிலை தான் காதலிக்க இருப்பதாகவும் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறியதால் தான் அமிர்தாவின் வீட்டில் பிரச்சனை தொடங்கியது.

சில வாரங்களாக காணவில்லையே
கோபியின் திருமணம் முடிந்ததும் எழில் திருமணம் நடைபெறுவதாகத் தான் கதை ட்ராக் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அமிர்தாவாக நடிக்கும் ரித்திகாவுக்கு திடீர் திருமணம் நடைபெற்றதால் அவர் அந்த சீரியலில் பல நாட்களாக வராமல் இருந்து வருகிறார். அமிர்தா அவருடைய அப்பா அம்மாவோடு ஊருக்கு சென்று விட்டதாக அமிர்தாவின் குடும்பத்தினர் எழிலிடம் கூறியிருந்தனர். தற்போது கூட எழில் அமிர்தாவை நினைத்து வருத்தமாக இருக்கும் போது நான் அமிர்தாவிடம் பேசுகிறேன் என பாக்கியா கூறி இருந்தார். ஆனால் அதற்கான கதை இன்னும் வரவில்லை. அதே நேரத்தில் திடீரென புதிய செக்ரட்டரி தேர்தல் நடைபெற்று பாக்கியா மற்றும் ராதிகாவை மையப்படுத்தியே கதை மீண்டும் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் அமிர்தாவாக நடிக்கும் ரித்திகா தான் என்று சொல்லப்படுகிறது.

எந்தப் பேச்சும் இல்லையே
திருமணத்திற்கு பிறகு ரித்திகா பிசியாக ஹனிமூன் ட்ரிப்பில் இருப்பதால் அவர் சீரியலில் நடிக்க வரவில்லை என்பதாலும் இனி அவர் தொடர்ந்து நடிப்பாரா? இல்லையா? என்பது சந்தேகம்தான். ஏனென்றால் ஏற்கனவே ரித்திகாவிற்கு நடிப்பை விடவும் தொகுப்பாளராக வேலை செய்வது தான் மிகவும் பிடித்தது. அதனால் இனி இந்த சீரியலில் தொடர்வாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ரித்திகா இதைக் குறித்து எந்த ஒரு பதிலும் கூறாமல் இருந்து வருகிறார். ஒரு சில வாரங்களாகவே ரித்திகா சீரியலில் இல்லை அவருக்கு பதிலாக தேவையில்லாத பல கதைகள் தொடங்கப்படுவதாக சீரியலின் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். ஆரம்பத்தில் அமிர்தாவை காணவில்லையே என்று கவலையோடு இருந்த எழில் கூட இப்போது தேர்தல் வேலைகளில் சகஜமாக மாறிவிட்டார். அமிர்தாவை பற்றி எந்த ஒரு பேச்சும் இல்லாமல் கதை நகர்ந்து வருகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications