ஆட்டோக்காரராக மாறிய ரோபோ சங்கர் மனைவி.. கணவனுக்கு போட்டியாக இப்படி ஒரு முயற்சியா?
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மனைவியான பிரியங்கா சங்கர் விஜய் டிவியில் புதியதாக ஒளிபரப்பான 'தனம்' சீரியலில் ஆட்டோ டிரைவர் கேரக்டரில் நடிக்க இருக்கிறார். அவருடைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரோபோ சங்கர் சினிமாவில் கதாநாயகனாக மாறி இருக்கும் நிலையில் அவருடைய மனைவி இப்போது சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
ரோபோ சங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உட்பட ஒரு சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். ரோபோ வேஷம் போட்டு பிரபலம் அடைந்த ரோபோ சங்கர் வெள்ளித்திரையிலும் நடிகர் தனுஷ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சோசியல் மீடியா பிரபலம்
அதுபோல சமீபத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படத்திற்கான சூட்டிங் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரோபோ சங்கர் குடும்ப செய்திகள் அடிக்கடி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சோசியல் மீடியா பக்கங்களிலும் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் பயங்கர பிசியாக இருக்கிறார்கள்.
ரோபோ சங்கர் மனைவி
ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா youtube சேனலில் வெளியாகும் ஷார்ட் பிலிம்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல விஜய் டிவியில் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். ரோபோ சங்கர் மற்றும் பிரியங்கா தம்பதிக்கு இந்திரஜா என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்திரஜா பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா கேரக்டரில் நடித்திருந்தார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு தன்னுடைய மகன் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
ப்ளூசட்டை மாறன் பதிவு
சமீபத்தில் கூட ப்ளூசட்டை மாரன் ரோபோ சங்கர் மற்றும் அவருடைய குடும்பத்தை கலாய்ப்பது போன்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தார். அதில் ரோபோ சங்கர் நான் காமெடி நடிகராக சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரையில் நடிக்க தொடங்கி இருந்தார். ஆனால் இவருக்கு காமெடி வரவில்லை என்பதால் இவரை சிவகார்த்திகேயன் கழட்டி விட்டுவிட்டார். இப்போது சோசியல் மீடியாவில் இருந்து பணம் வருகிறது என்பதற்கு இவருடைய குடும்பத்தினர் சோசியல் மீடியாவிலேயே உட்கார்ந்து இருக்கிறார்கள்.
ப்ளூசட்டை மாறன் அட்வைஸ்
கல்யாணம், காது குத்து, ஷாப்பிங் என்று இவர்கள் போடும் வீடியோ பார்ப்பதற்கு கடுப்பாக இருக்கிறது என்றெல்லாம் வசைப்பாடி இருந்தார். அதோடு தாத்தா ஆன பிறகு ரோபோ சங்கர் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும், அவருடைய பேரனை இந்த போலி வெளிச்சத்தில் காட்டாமல் இருக்க வேண்டும் என்றெல்லாம் அட்வைஸ் கொடுத்திருந்தார்.
விமர்சனங்கள்
இது ஒரு பக்கம் இருந்தாலும் தங்களைப் பற்றி வரும் விமர்சனங்களை ரோபோ சங்கர் குடும்பத்தினர் எந்த இடத்திலும் கண்டுகொண்டதில்லை. அதை அசால்டாக கடந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தனம் சீரியலில் ஆட்டோ டிரைவராக அறிமுகமாகி இருக்கிறார்.
தனம் சீரியல் கதை
பெண்கள் ஓட்டும் ஆட்டோ சங்கத் தலைவராக அவர் அறிமுகமாகி இருக்கிறார். தனம் சீரியலில் கதாநாயகன் இறந்த பிறகு கதாநாயகி கதாநாயகனின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்கிறார் அவரை ஆண்கள் யாரும் தங்களுடைய ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதிக்காமல் இருப்பதால் பிங்க் ஆட்டோ ஓட்டும் பெண்கள் சங்கத்தில் தனம் இணைவதற்காக முயற்சி செய்கிறார். அந்த சங்கத்தில் தலைவராக பிரியங்கா இருக்கிறார். இனி இந்த சீரியலில் இவரால் பல திருப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications