ரோஜா விட்ட குத்து.. ஐயோ என்று அலறிய அனு.. குபுக்குன்னு பொளந்த மூக்கு.. ஒரு பரபர காட்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் சக்கை போடு போடுகிறது. ரோஜாவாக நடித்திருக்கும் பிரியங்கா, பிரைம் டைம் சீரியலில் ஒரு ரவுண்டு வரப்போவது நிச்சயம்.

வடிவுக்கரசி மகன் வயிற்று பேத்தி அர்ஜுன். மகள் வயிற்று பேத்திதான் அனு. இவள் அர்ஜுனை கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்பட எதிர்பாராமல் ரோஜாவை திருமணம் செய்துக்கிட்டதா வக்கீலான அர்ஜுன் பொய் சொல்ல நேரிடுகிறது.

Roja attacks Anu in Roaja serial

இவர்கள் இருவரும் புருஷன் பொண்டாட்டி இல்லை நடிக்கறாங்கன்னு அவ்வப்போது பாட்டி வடிவுக்கரசியை குழப்பும் அனுவிடம் நேரடியாகவே சவால் விடுகிறாள் ரோஜா. உன்னால் முடிஞ்சா வீட்டுல சொல்லி நம்ப வை.

அது சரி, சில பேர் தப்பு செய்துட்டு வெளியில சுதந்திரமா சுத்தறாங்க .. அவங்களை கண்டு பிடிச்சுட்டோம், கூடிய சீக்கிரம் உள்ள தள்ளிருவோம் நானும் அர்ஜுன் சாரும் சேர்ந்து என்று பீதியையும் கிளப்பி விடுகிறாள் ரோஜா.

Roja attacks Anu in Roaja serial

ஆமா, உன் மாமாவுக்கு மூக்குல எப்படி அடிபட்டுதுன்னு கேட்டே இல்ல.. சொல்லட்டுமா என்று ரோஜா கதவை சாத்த, இல்லை நான் போறேன் என்று அனு கிளம்ப, இரும்மா எப்படி அடிபட்டதுன்னு சொல்றேன்னு சொல்லி ஆரம்பிக்கறா.

இப்படித்தான் கை விரலை மடக்கி, கையை நீட்டி விட்டேன் ஒரு குத்து மூக்கைப் பார்த்து அனுவின் மூக்கில் குத்த, ஐயோ என்று அலறி விழுகிறாள் அனு.. இப்போ திமிரா ரோஜா சொல்றா, முடிஞ்சா நிரூபிடி நானும், அர்ஜுனும் புருஷன் பொண்டாட்டி இல்லேன்னு என்று.

செம ஷோக்காதாய்யா போகுது சீரியல்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+