ஒரே சைசில் மாமியாரும் மருமகளும்.. செம குத்தாட்டம்.. விழுந்து விழுந்து ரசிக்கும் ஃபேன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : வயசு வித்தியாசம் இல்லாமல் மாமியாரும் மருமகளும் ஒரே சைஸில் ஆட்டம் போட்டு பார்பவர்களுக்கு ஷாக் கொடுத்துட்டாங்க என ரசிகர்கள் புலம்புகிறார்கள். எல்லாம் இந்த ரோஜா சீரியல் பிரியங்காவும், காயத்ரியும்தான்.

எப்படித்தான் இந்த வயசுலயும் இந்த குத்து குத்துறாரோ என மாமியாரை பார்த்து பொறாமை படுறவங்களும் மாமியாருக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம ஆட்டம் போடுறாருனு மருமகளைப் பார்த்து புலம்புறவங்களும் கமெண்ட்ஸ்களில் தெறிக்க விடுகிறார்கள்.

ஆனாலும் ரோஜாவுக்கு சளைத்தவரில்லை என்று "சரோஜா"வும் நிரூபித்துட்டாங்க என்று நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு கொளுத்திப் போட்டு இருக்காங்க. ஆக மொத்தம் மாமியாருக்கும், மருமகளுக்கும் ஓட்டுக்கள் சரமாரியாகத்தான் விழுகின்றன.

ஒரே சைஸில் இருக்காங்களே

ஒரே சைஸில் இருக்காங்களே

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் டிஆர்பி யில் முதல் இடத்தில் வந்து கொண்டிருப்பதற்கு ரசிகர்களின் பேராதரவு தான் காரணம். அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த சீரியல் நடிகைகள் இப்போ குத்தாட்டம் போட்டு குதூகலப்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் மாமியாரும் மருமகளும் என்ன ஆட்டம் போடுறாங்க என மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் மாதிரி வெறித்தனமான மூவ்மெண்ட் போட்டு இருக்கிறார்கள். வயசானாலும் அழகும் இளமையும் போகலையே என்று மீண்டும் காயத்ரி அதான் ரோஜா சீரியலின் கல்பனா நிரூபித்துவிட்டார். சீரியலில் மட்டுமல்ல உண்மையில் தானொரு அழகு தேவதை என்பதை ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்கரியும் நிரூபித்துவிட்டார்.

பாத்துக்கிட்டே இருக்கலாம் போல

பாத்துக்கிட்டே இருக்கலாம் போல

க்யூட்டான எக்ஸ்பிரஸனை காட்டி ஸ்வீட்டான சிரிப்பினால் ஷார்ட்டான கவுனில் கலகலக்க வைத்து விட்டாரே என்று அனுஅனுவாக ரசிக்கும் ரசிகர்கள் லைக் கமெண்ட்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள். இந்த நிலையில், ரோஜா சீரியலில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்கரியும் அவருடைய மாமியாராக நடிக்கும் காயத்திரி சாஸ்திரியும் ஒரு பங்ஷனில் ஒன்றாக சேர்ந்து ஆட்டம் போட்டு இருக்கின்றனர். இந்த வீடியோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது. சீரியலை போலவே இன்ஸ்டாகிராமில் பிரியங்கா நல்கரிக்கு அதிகமான ரசிகர்கள் பாலோவர்ஸ்களாக இருக்கின்றனர். அவர்கள் இந்த போஸ்ட்டை பார்த்ததும் கமெண்ட்களில் கவிதைகளை பொழிகின்றனர் .இப்படியெல்லாம் கூட ரசிப்பார்களா என சொல்கிற அளவிற்கு ஜொள்ளு ஆறாக ஓடுகிறது.

மாறாத அன்பு

மாறாத அன்பு

ரோஜா சீரியலில் ரசிகர்கள் அதிகமாக விரும்புவது ரோஜாவையும் அவருடைய மாமியாரையும் தான். ஏனென்றால் ரோஜாவும் அர்ஜுனும் ஒப்பந்த திருமணம் செய்து இந்த வீட்டிற்குள் வரும்போது ரோஜாவுக்கு ஆறுதல் கொடுத்து தன்னுடைய மாமியாரிடம் ரோஜாவுக்காக அதிகமுறை திட்டு வாங்கினாலும் தன்னுடைய மருமகளை விட்டுக் கொடுக்காத மாமியாராக இவர் நடித்திருக்கிறார். பொதுவாக சீரியல் என்றாலும் சரி சினிமா என்றாலும் சரி நடிகர்களின் கேரக்டரை வைத்து நடிகர்களை பாசமாகவும் பார்க்கின்றனர், எதிரியாகவும் பார்க்கின்றனர். அந்த மாதிரிதான் கல்பனாவாக நடிக்கும் காயத்திரியையும் ரசிகர்கள் அதிகமாக நேசிக்க தொடங்கி விட்டனர். மாமியார் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மருமகளும் உருகும் வகையில் இவர் தன்னுடைய பாசத்தை பொழிந்து கொண்டிருக்கிறார்.

மாஸ் காட்டும் ரோஜா

மாஸ் காட்டும் ரோஜா

தற்போது இந்த சீரியலை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் விதவிதமாக மீம்ஸ்களைப் போட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு இது திரைப்படத்தை மிஞ்சும் வகையில் கதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பயணிக்கிறது. அதுவும் இப்போ குடும்பமே ஜெயிலுக்குள் இருப்பதைப் பற்றி தான் அதிகமான மீம்ஸ்கள் பறக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ரோஜா ஜெயிலுக்குள் இருந்தாலும் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். இதை வைத்து ட்ரோல் மன்னர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு ட்ரோல்களை ஓட்டி வருகிறார்கள். இவர்களுடைய டிரோல்களாலும் இந்தச் சீரியலுக்கு அதிகமான வியூஸ் கிடைக்கிறது. எப்போதுதான் ரோஜா அர்ஜுனின் மாமன் மகள் தான் என்பதை அர்ஜுன் நிரூபிப்பார் என்று ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் புது திருப்பங்களுடன் ரோஜாவிற்கு வரும் பிரச்சனைகளை பார்த்து ரசிகர்களும் ஐயோ இந்த பொண்ணுக்கு மட்டும் இப்படி பிரச்சனையே வந்துகிட்டு இருக்கே என்று தங்களுடைய பிரச்சனையை மறந்து ரோஜாவின் பிரச்சினைக்காக கடவுளிடம் வேண்டி வருகிறார்களாம்.

அலைமோதும் ரசிகர்கள் கூட்டம்

அலைமோதும் ரசிகர்கள் கூட்டம்

ரோஜா சீரியலில் பிரியங்கா நல்கரி நடிக்க வருவதற்கு முன்பு கன்னட சீரியல்களிலும் படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். முதல்முறையாக இவருக்கு இந்த சீரியலில் வாய்ப்பு கிடைக்கும்போது ரொம்பவே தயங்கி இருக்கிறார். இவருக்கு தமிழ் பேச தெரியாததை பெரிய குறையாக இவர் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால் இப்போ இந்த சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கான ஒரு இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முதலில் பயந்த அதே தமிழைப் இப்போ தமிழ் நடிகைகளை விடவும் அழகாக பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் ரசிகர்களுக்கும் இவரை பிடித்துவிட்டதாம். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார். அடிக்கடி மாடலின் போட்டோக்களையும் எடுத்து வருகிறார். சீரியலை தாண்டியும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகமாக பின் தொடர்கின்றனர்.

பறக்கும் முத்தம்

பறக்கும் முத்தம்

சூட்டிங் இல்லாத நேரத்தில் பிரெண்ட்ஸ்களுடன் ஜாலியாக சுற்றிப் பார்க்க கிளம்பி விடுவாராம். அப்படி இவர் போகும் இடங்களில் எல்லாம் பல போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுக்க தவறவில்லை. அந்த போட்டோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் இவர் போஸ்ட் போட இவருடைய ரசிகர்கள் அதற்கு லைக் போட என பிஸியாகவே சமூக வலைத்தளத்தை வைத்திருக்கிறார். அந்த மாதிரிதான் இப்போ ஒரு ரோஸ் கலர் கவுனில் குட்டி தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஸ்லீவ்லெஸ் கவுனில் இவர் போடும் ஆட்டத்தைப் பார்த்து பலர் சொக்கிப் போய் கொண்டிருக்கும் போது அவருடைய பக்கத்தில் இருக்கும் மாமியாரையும் பார்த்து அடடா என்ன ஒரு பொருத்தம் என்று கூறிவருகின்றனர். அதுவும் இவர்கள் போட்ட ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு கடைசியாக பறக்கும் முத்தத்தை பறக்க விட்டிருக்கிறார்கள். இதனை பிடிப்பதற்காகவே பலர் பறந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+