Roja serial: அது ஜெயிக்கற கூட்டணி இல்லை அதான் அணி தாவிட்டேன்.. கலக்கல்!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல், காட்சி அமைப்பு, வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் பிடித்து இருக்கிறார்கள். அடிக்கடி அவுட்டோர் காட்சிகளும் கிடையாது.
வீட்டுக்குள் எடுத்தாலும், ஒரு சீன் என்றாலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வசனங்கள், க்ளோசப் காட்சிகள் என்று இயக்குநர் அசத்தி இருக்கார். சமையலறை காட்சி என்றால், அதற்குள் ஒரு எபிசோடையே சுவைபட முடிக்கும் திறமைசாலி.
இரவு நேரத்தில் ரோஜா சீரியல் ஒளிபரப்பான போது ரோஜாவை விரும்பிப் பார்த்த பலரும், இப்போது நேரம் மாற்றியதில் பார்க்க முடியாமல் தவிக்கின்றனர். ரொம்ப வன்முறை இல்லாமல் கதை நன்றாக போகிறது.

அஸ்வின் பூஜா
அப்பாவின் நண்பர் பெண் பூஜாவை, அவர் பொண்ணுதான்னு தெரியாமலே காதலிக்கிறான் அஸ்வின். ஆனால்,அதற்குள் அணு அஸ்வின் மாமாவை கல்யாணம் செய்துகிட்டு, இந்த வீட்டு மருமகளாகி பையா கணேஷ் கொலை வழக்கில் இருந்து தப்பிச்சுக்கலாம்னு கணக்குப்போடறா. ஜோதிடரைப் பார்த்து, அஸ்வின் ஜாதகத்தில் கண்டம் இருக்கு. அணுவை கல்யாணம் செய்தால்தான் அவன் உயிர் பிழைப்பான்னு பொய் சொல்ல சொல்றா,

குடும்பமே கொண்டாடுகிறது
ஜோதிடர் அஸ்வின் அணுவை கல்யாணம் செய்தால்தான் உயிரோட இருப்பான்.இல்லேன்னா அவனுக்கு கண்டம் இருக்குன்னு சொல்லிட, குடும்பமே அணுவை தூக்கி வச்சு கொண்டாடுது. ரோஜாவும், அர்ஜுனும் சேர்ந்து இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி,அஸ்வின் காதலிக்கும் பூஜாவையே அவனுக்கு கல்யாணம் செய்து வைக்க போராடி வர்றாங்க .

கூட்டணிக்குள் அம்மாவை
சார் நம்ம கூட்டணி வீக்கா இருக்கு சார்னு ரோஜா, அர்ஜுன்கிட்டே சொல்றா. கவலைப்படாதே ரோஜா கூட்டணிக்கு ஆள் சேர்க்கலாம்னு கோயிலுக்கு போயிருக்கும் அம்மாவிடம் அனைத்து உண்மைகள், அதற்கான ஆதாரமாக ஜோதிடரையும் காமிச்சுடறாங்க. உடனடியா இனிமே நன் உங்க கூட்டணிதான்னு சொல்லிட்டு, அர்ஜுன் நாம கூட்டணி சேர்ந்த விஷயம் வீட்டில் யாருக்கும் தெரிய வேணாம். முக்கியமா அத்தைக்குன்னு சொல்றாங்க கல்பனா.

மீட்டிங் மாடியில்
மாடியில், அர்ஜுன், ரோஜா,அஸ்வின் மூவரும் மீட்டிங் போட்டு பேசிகிட்டு இருக்காங்க. அப்போ கல்பனா வர,அண்ணா..அம்மா வர்றாங்கன்னு எச்சரிக்கிறான் அஸ்வின். அஸ்வின் என்ன பேசறே நீ..அத்தையும் இப்போ நம்மகூட்டணிதான்னு ரோஜா சொல்ல, ஆமாம்டா அஸ்வின்..அது தோக்கற கூட்டணின்னு தெரிஞ்சு போச்சு. அதனால, ஜெயிக்கற கூட்டணிக்குத் தாவிட்டேன்னு கல்பனா சொல்ல நால்வரும் சிரிக்கிறார்கள்.
இப்படி சுவை பட போகிறது கதை.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications