ரூ.100 கோடியில் நயன்தாரா வீடு.. 7000 சதுர அடியில் ஹைலைட்டே இதுதான்.. சென்னை போயஸ் கார்டனில் அசத்தல்
சென்னை: நயன்தாரா தன்னுடைய வீட்டின் போட்டோக்களை சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, வாயை பிளந்து ரசித்து வருகிறார்கள்.. சென்னையில் போயஸ் கார்டனின் கவனத்தை ஈர்க்கும் நயன்தாரா வீட்டின் ஸ்பெஷாலிட்டி என்னென்ன தெரியுமா?
சென்னை போயஸ் கார்டன் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வீடுகள்தான்.. கடந்த வருடம் இந்த போயஸ் கார்டனில் "ஜெயலலிதா இல்லம்" என்ற பெயரில் சசிகலாவும் புதிதாக வீடு ஒன்றை கட்டி குடியேறினார். இதற்கு பிறகு, தனுஷூம் இங்கே வீடு கட்டியிருக்கிறார்.

கவனத்தை ஈர்க்கும் போயஸ் கார்டன்
பிரபலங்களின் கவனத்தை போயஸ் கார்டன் ஈர்க்க காரணம், சென்னை மாநகரத்தின் மத்தியில் இருப்பதுடன், அதிகமான போக்குவரத்து நெரிசல், இரைச்சல்கள் இல்லாமல் இருக்கிறது.. இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் போயஸ் கார்டனிலேயே, தன்னுடைய கனவு இல்லத்தை கட்டிவிட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த வீடு பற்றின தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது.. இந்த பிரம்மாண்ட வீடு, விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா திருமண பரிசாக வழங்கியிருக்கிறாராம்.. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு பின்பக்கத்திலேயே நயன்தாரா வீடு இருக்கிறதாம்.. திருமணத்துக்கு பிறகு நயன்தாரா, விக்னேஷ் சிவன், குழந்தைகளுடன் இந்த பங்களாவில் தான் வசித்து வருகிறார்..
மொட்டை மாடி ஆபீஸ்
அதேபோல, விக்னேஷ் சிவனுக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து, போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் மொட்டை மாடியிலேயே அலுவலகம் ஒன்றையும் நயன்தாரா கட்டிவருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.
காரணம், அடிக்கடி படங்களின் கதை கேட்பதற்காக கணவர் வெளியே செல்வதாலும், குழந்தைகளை பிரிந்து செல்வதாலும், அவர் தனது வீட்டில் புதிய அலுவலகம் கட்டிவருவதாக கூறி, அந்த போட்டோக்களையும் அப்போது நயன்தாரா இணையத்தில் வெளியிட்டிருந்தார்.
ரூ.100 கோடி கனவு இல்லம்
இந்நிலையில், நயன்தாரா போயஸ் கார்டனில் 7,000 சதுர அடியில் சுமார் ரூ.100 கோடியில், தன்னுடைய வீட்டை கட்டி முடித்துவிட்டார்.. ஸ்டுடியோ வடிவிலேயே கட்டியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட இந்த வீட்டை பெரிய தொகை தந்து விலைக்கு வாங்கி, இடித்து தனது கனவுபடி கட்டியுள்ளார். 3 தளங்களில் கட்டியிருக்கிறார்.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவருக்குமே பழங்கால பொருட்கள், மற்றும் கலைநயம் மிகுந்த பொருட்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் அவர்களின் ஸ்டுடியோவில் ஏகப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, பெரும்பாலும் மரங்களால் ஆன பொருள்களையே வீடு முழுவதும் வைத்திருக்கிறார்கள்.
சினிமாவை மிஞ்சும் வகையில் தோட்டம், அருங்காட்சியகம் போன்று பழங்கால தாழி, காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி ஊடுருவும் வகையில் கட்டமைப்புடன் காட்சி தருகிறதாம் நயன் வீடு. 3 தள வீட்டில், முதல் தளத்தில் கணவர், மகன்களுடன் நயன்தாரா வசிக்கிறார். 2வது தளத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு தனி அறை என கண்களை கவரும் கனவு இல்லமாக கட்டியிருக்கிறாராம்.. இப்போது இந்த வீட்டின் போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications