ரூ.350 கோடி ஊத்தி மூடியாச்சு.. தூக்கத்தை தொலைத்த திரிஷா.. ரஜினிக்கு குஷி.. தட தட தக் லைஃப்: பிரபலம்
சென்னை: 350 கோடியில் தக் லைஃப் எடுத்துவிட்டு, தற்போது அந்த படம் நஷ்டமடைந்துள்ளது சற்று வேதனையையே தருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், ரஜினியின் ஜெயிலர் பட வசூலை, ரஜினியின் கூலி படமே முறியடிக்க போகிறதா? என்று தெரியவில்லை.. இதுமிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், தக் லைஃப் படத்தில் நடித்த திரிஷா, சிம்பு குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
தக் லைஃப் ரிசல்ட் காரணமாக கூலி படத்தின் வியாபாரம் பாதிக்கும் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.. இதனால் பக்கத்து மாநிலங்களில் படத்தின் தியேட்டர் உரிமையை எதிர்பார்த்த விலைக்கு விற்பனை செய்யப்பட முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளதாம்.

இதுதான் ரஜினிகாந்த்தை அப்செட்டுக்கு ஆளாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.. லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் கூலியில் நடித்து முடித்துள்ள நிலையில், ரஜினிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தக் லைஃப் தோல்வி
இந்நிலையில், AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "தக் லைஃப் டிக்கெட் காசை திருப்பி கொடுங்க" என்று எல்லாரும் கேட்க துவங்கிவிட்டார்கள்.. காரணம், கங்குவாவை பார்த்தோம், இந்தியன் 2 பார்த்தோம், விடாமுயற்சி பார்த்தோம், இப்போது தக் லைஃப் என பொறுமையாக ஒவ்வொரு படமாக பார்த்து வருகிறோம், மீண்டுமா இதுபோல படம் எடுப்பது? என்று அதிருப்தியில் உள்ளனர்.
இப்படியே படம் எடுத்து கொண்டிருந்தால், மக்கள் கடுப்பாகத்தான் செய்வார்கள்.. ரஜினி தரப்பில் தற்போது ஒரு கலக்கம் இருப்பதாக சொல்கிறார்கள்.. ரஜினிக்கு இந்த பயம் வந்திருக்க காரணமே தக் லைஃப் படம்தான்.. அதேபோல தமிழ் சினிமாவின் வரலாற்றில், அதிக வசூல் செய்த படமாக ஜெயிலர் அமைந்தது. இந்த வசூலை தக் லைஃப் முறியடிக்காதது ரஜினிக்கு குஷியாகவும் உள்ளது...
ஜெயம் ரவி கிரேட் எஸ்கேப்
ஆனால், ஜெயம் ரவி, துல்கர் சல்மான் இவர்கள் எல்லாரும், நல்லவேளை நாம இந்த படத்தில் நடிக்காமல் தப்பித்தோம் என்று நிம்மதியில் உள்ளார்கள்.. ஜெயம் ரவிக்கு ஏற்கனவே பல பிரச்சனைகள் ஓடிட்டு இருக்கு.. இதில் சிக்கியிருந்தால், அவரால் மீண்டு வருவது கடினமாகியிருக்கும்..
தக் லைஃப் புரமோஷனை பார்த்து, 700 கோடிக்கு மேல் வசூலாகிவிடுமோ என்று கலக்கம் ரஜினி தரப்பில் இருந்தது.. ஆனால், முதல் நாள் ஷோவிலேயே, தன்னுடைய ஜெயிலர் பட கலெக்ஷனை தக் லைஃப் முறியடிக்காது என்பதை ரஜினி தரப்பு உறுதிப்படுத்திக் கொண்டது.. முதல் 3 நாள் தக் லைஃப் கலெக்ஷன் 45 கோடிதான் வந்திருக்கும்.. உலக அளவில் ரூ.100 கோடியை தாண்டுவதே சிரமம்தான்..
50 கோடி நஷ்டம்
சொத்து விவரங்களை கமல் சார் வெளியிட்டிருந்தபோது, தனக்கு 50 கோடி கடன் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.. எனினும் கமல் தரப்பில் இந்த படம் மூலம் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை.. காரணம் இந்த படத்தில் டேபிள் பிராஃபிட் செய்தாகிவிட்டது.. படத்தை வாங்கியவர்களுக்குதான் நஷ்டம்..
இந்த கேரக்டரில் திரிஷாவை ஏன் நடிக்க வைத்தார்கள்? திரிஷாவை இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் கமெண்ட்கள் பதிவாகிவருகின்றன.. எனவே, ஏன்தான் இந்த கேரக்டரில் நடித்தோம் என்று திரிஷாவும் புலம்பி தவிப்பதாக செய்திகள் வருகின்றன.. தக் லைஃப் படம் ரிலீஸ் ஆனதில் இருந்தே, தூக்கத்தை தொலைத்துவிட்டாராம் திரிஷா..
செவனேன்னு இருந்த சிம்பு
செவனேன்னு இருந்த சிம்புவை கூட்டிட்டு போய் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்க வைத்தார் மணிரத்னம்.. இப்போது மீண்டும், உங்களுக்காக கதையை டெவலப் பண்ணியிருக்கேன் என்று சொல்லி நடிக்க வைத்துள்ளார்.. இத்தனைக்கும் நிறைய முயற்சிகளை இந்த படத்தில் தந்திருந்தார் சிம்பு.. முதல் நாள் இந்த படத்தை பார்த்துவிட்டு, அப்போதே துபாய்க்கு கிளம்பிவிட்டார்..
350 கோடியில் எடுத்து, நஷ்டமடைந்த படம் என்பதால், சற்று வேதனையையே தருகிறது.. மொத்தத்தில் ரஜினியின் ஜெயிலர் பட வசூலை, ரஜினியின் கூலி படமே முறியடிக்க போகிறதா? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications