பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகும் கதாநாயகி!! மீண்டும் முதலில் இருந்தா? காரணம் இதுதானா!?
சென்னை: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து நடிகை சாய் காயத்ரி விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ஒரு சில நாட்களுக்கு முன்பு சாய் காயத்ரி வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் அதுதான் காரணமா? என்று கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் இந்த தகவல்களுக்கு சாய் காயத்ரி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்காமல் தான் இருந்து வருகிறார்.

அடிக்கடி நடக்கும் நிகழ்வு தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களின் மத்தியில் பல வருடங்களாகவே நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்ட இந்த சீரியலில் பல நடிகர்கள் ஆரம்பத்தில் இருந்தவர்கள் இப்போது இல்லை. ஒரு சில நடிகர்கள் சீரியலில் இருந்து விலகி இருக்கின்றனர் .அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது புதியது அல்ல. ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் ஐஸ்வர்யாவாக சாய் காயத்ரி அறிமுகமானார் .ஏற்கனவே இவருக்கு முன்பு விஜே தீபிகா இந்த கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது சாய் காயத்ரி மீண்டும் சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஈரமான ரோஜாவே
சாய் காயத்ரி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் மூலமாக ரசிகர்களின் மனதை மொத்தமாக கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய கியூட்டான நடிப்பு துருதுருவென சேட்டைகள் இவருக்கும் அவர் அந்த சீரியலின் கதாநாயகனுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. அதனால் பலருடைய ஸ்டேட்டஸ் சாங்குகளில் இவர்களுடைய போட்டோக்கள் இடம் பிடித்து வீடியோக்களாக பரவி வந்தது. ஈரமான ரோஜாவே சீரியல் முதல் பாகம் முடிவடையும்போது இவருடைய ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி இருந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது பாகத்தில் இல்லையே
நாம் இருவர் நமக்கு ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் மீண்டும் சாய் காயத்ரி வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. இவரை போலவே இன்னொரு கதாநாயகியாக இருந்த பவித்ரா மீண்டும் அந்த சீரியலில் இணைந்திருக்கும் நேரத்தில் இவர் அந்த சீரியலை விட்டு வந்து விட்டார். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் ஏற்கனவே இரண்டு நடிகைகள் மாறிய நிலையில் மூன்றாவதாக தான் சாய் காயத்ரி வந்திருந்தார். சாய் காயத்ரி இந்த கேரக்டரில் நடிக்க வந்தபோது முதலில் ரசிகர்கள் பலர் இவர் இந்த கேரக்டருக்கு செட் ஆகவில்லை குறிப்பாக கண்ணனுக்கு அக்கா மாதிரி இருக்கிறார் என்று கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது கேரக்டரோடு நன்றாகவே செட்டாகி விட்டார். இந்த நிலையில் இப்போது இவரும் விலக இருக்கிறார் என்ற செய்திகள் பலருக்கும் அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கிறது.

திரைப்படத்தில் அறிமுகம்
ஒரு சில நாட்களுக்கு முன்பு சாய் காயத்ரி தான் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகி டப்பிங் வேலை முடிந்திருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த பிறகு தான் இந்த செய்தியை பலரும் பரப்பி வருகின்றனர் .வெள்ளி திரையில் சாய் காயத்ரி அறிமுகம் ஆகி இருப்பதால் இனி சீரியலில் நடிப்பதற்கு அவருக்கு டைம் இருக்காது அதனால் இந்த சீரியலை விட்டு அவர் விலக வாய்ப்பு இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தாலும் இந்த சீரியலில் ஐஸ்வர்யாவாக இப்போது இவர் ரசிகர்களின் மனதில் இடத்தைப் பிடித்து இருக்கிறார் இந்த நிலையில் இந்த இடத்தை விட்டு இவர் சென்ற பிறகு மீண்டும் யார் வர போகிறார்களோ? என்று சிலர் புலம்பி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
டேய் நம்ம பாண்டியன் படம்ப்பா! தியேட்டரில் ஒன்ஸ்மோர் கேட்டு அலறிய கூட்டம்! அந்த 1 சீன் சரித்திர சாதனை -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications