Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜில் கிளைமேட்டில்... ஜில்லரிக்க வைத்த சாக்ஷி அகர்வால்

Subscribe to Oneindia Tamil

சென்னை : அந்தரத்தில் தொங்கியபடி ஆகாசத்தில் வட்டமிட்ட சாக்ஷி அகர்வாலை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தின் உச்சியில் இருக்கிறார்களாம்.

குளுகுளுவென வெண்பனி சூழ்ந்து சில்லென்று இருக்கும் இடத்தில் இவரைப் பார்த்த ரசிகர்கள் இவரை ரசிக்கவா அல்லது அந்த அழகை ரசிக்க வா என்று குழம்பி போய்விட்டார்களாம்.

மலை உச்சியில் சுற்றிக் கொண்டிருக்கும் இவருடைய வீடியோவை பார்த்து சிலர் இவரும் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறாரோ என்று சந்தேகங்களை கிளப்பி இருக்கிறார்கள்.

ஹெவியான பர்பாமன்ஸ்

ஹெவியான பர்பாமன்ஸ்

சும்மா ஹாட் போட்டோவா போட்டு தன்னுடைய ரசிகர்களை கனவுலகில் மிதக்க வைத்த சாக்ஷி ., இன்று அவரே ஆகாயத்தில் மிதந்து கொண்டு.. ஜில் கிளைமேட்டில், போட்டுள்ள வீடியோவை பார்க்கும் பொழுது..சாக்ஷி சாதா ரகம் இல்ல, கொஞ்சம் ஸ்ட்ராங்கான பொண்ணுதான் போல! என்று அவரது ரசிகர்களை மட்டுமின்றி வீடியோவை பார்க்கும் அனைவரையும் நினைக்க வைக்கிறது.அந்த அளவுக்கு கொஞ்சம் ஹெவி...யான பெர்பாமன்ஸ் தான் கொடுத்திருக்காங்க.

வெயிட்டான காட்சிகள்

வெயிட்டான காட்சிகள்

சாக்ஷி போட்டோ அப்லோட் பண்ணாலே, 'ரைட்டு... 'இன்னைக்கு பொழுது சாக்ஸி போட்டோ உடன் தான்'. என்று அவரது ரசிகர்களே நினைக்க தோன்றும் வண்ணம் எந்தவித வஞ்சகமும் இல்லாமல், போட்டோ மூலம் தன் ரசிகர்களுக்கு ஒரு மினி விருந்து வைத்து விடுவார். இன்ஸ்டாகிராமே சூடாகும் அளவிற்கு இவர் போடும் போட்டோக்களுக்கு இவரது ரசிகர்கள் போடும் லைக்கு களையும், கமெண்டுகளையும் வைத்தே சாக்ஸியின் சப்போர்ட் டர்கள் லெவலை தெரிந்துகொள்ளலாம். நானும் எவ்வளவு நாள்தான் ஹாட்டாக மட்டும் காட்ட.. கொஞ்சம் வெயிட்டாவும் காட்டுவோம்.. என்று கிளம்பி விட்டார் போல.

 எனர்ஜி குறையலையே

எனர்ஜி குறையலையே

ஏற்கனவே உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் உள்ள சாக்ஷி, ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களுக்கு சென்றால் சும்மா இருப்பாரா?எவ்வளவு நேரம் தான் தரையிலிருந்து ஊட்டிய சுத்தி பார்க்க...கொஞ்சம் மேலிருந்தும் சுத்தி பார்ப்போமே..!என்று நினைத்து ஜிப்லைனில் (ஸ்கை ரோப் ரவுண்டு) ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம் என்று முடிவெடுத்து,எந்தவித பயமும் இல்லாம சிறப்பாக செய்தும் முடித்து இருக்காரு. அவர் ஆகாயத்தில அந்த ரோப்ல போயிட்டு வந்த ஸ்டைலா பார்த்தா, இது ஏதோ முதல் ரவுண்டு மாதிரி தெரியல..!அந்த அளவுக்கு ஒரு சின்ன பதட்டம் கூட இல்லாம, சும்மா ஜம்முன்னு ..'டேக் ஆப் ஆகி' அதே எனர்ஜியுடன்.. 'லேண்ட் ஆகி' இருக்காரு.

சூப்பர் பட்டம்

சூப்பர் பட்டம்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி கடற்கரை காத்துல கடல் மேல பாராசூட்டில் பறந்து பட்டைய கிளப்புன சாக்ஷி, இன்னைக்கு மலைகளுக்கு நடுவுல அசால்டா பறந்து இருக்காரு. என்னதான் ஆட்கள் துணையும்,சேப்டி கெட்டப்பு, எல்லாம் இருந்தாலும் இப்படி பறப்பதற்கு எல்லாம் ஒரு தனி கட்ஸ் வேண்டுமென்று,இவரது ரசிகர்கள் இப்பொழுது இவருக்கு 'தைரிய தலைவி' என்று பட்டம் கொடுக்க தயாராகி வருகின்றனர்.பறந்தது எல்லாம் ...ஓகே ..தான்.பட்டம்தான் கொஞ்சம் ஓவரா இருக்கோ..!

நெட்டிசன்கள் தொல்லை தாங்கல

நெட்டிசன்கள் தொல்லை தாங்கல

சாக்ஸி அவ்வளவு கஷ்டப்பட்டு பெர்பாமன்ஸ் பண்ணிட்டு இருக்காங்க அதுல ஒரு ஆந்தை கண்ணு நெட்டிசன் 'என்னம்மா.. அவ்வளவு பேர் இருக்காங்க தொப்புளை காட்டிகிட்டு இருக்க'.. என்று அக்கறையாக அண்ணன் ரேஞ்சுக்கு கேட்டுள்ளார். ஆனால் வழக்கமாக சாக்ஷி போட்டோ காக வெயிட் பண்னும் ரசிகர்கள் இந்த வீடியோவை ரசித்தாலும், அவர்களுக்கு என்னமோ கொஞ்சம் ஏமாற்றம் தான். பார்த்தாலே சாக்கடிக்கும் சாக்ஷி போஸ்ட்களை பார்த்து பழகியவர்களுக்கு, 'டா..டா.. நான் போயிட்டு வரேன்'.. என்று சொல்லிவிட்டு ராட்டினத்தில் ஒரு ரவுண்டு போய்ட்டு வந்த மாதிரி இருப்பதாக கொஞ்சம் வருத்தத்துடன் பீல் செய்கின்றனர்.ஆனால் சாக்ஷியோ பெண்களுக்குத் தேவை அழகு மட்டுமல்ல, கொஞ்சம் தைரியமும் தான். என்று இந்த வீடியோ மூலம் சொல்லாமல் சொல்லிச் செல்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+