நடிகை சமந்தா பாலிவுட் இயக்குனர் உடன் காதல் திருமணம்? உண்மைகளை உடைத்த மேனேஜர்
சென்னை: நடிகை சமந்தா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். நாக சைதன்யாவோடு விவாகரத்திற்கு பிறகு சமந்தா பாலிவுட் இயக்குனர் ராஜ் நிதிமோர்ரை காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொல்லப் போவதாகவும் தகவல்கள் பரவி வந்த நிலையில் இது குறித்து சமந்தாவின் மேனேஜர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களிலேயே அவரைப் பிரிந்துவிட்டார். அதற்கு பிறகு நான் இனி என்னுடைய வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறியிருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சமந்தா இனி திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொன்னபோது வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார்.

சமந்தா காதலிக்கும் நபர்
அதோடு பாலிவுட் இயக்குனர் ஒருவருடன் அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் பாலிவுட் இயக்குனரை சமந்தா காதலிக்கிறாரா? இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்விகள் இணையத்தில் எழுந்து வருகின்றன. அதே சமயத்தில் சமந்தா பற்றி பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம்
சமந்தாவிற்கு விரைவில் திருமணம் நடக்கப்போகிறது, அதுவும் அவருடைய இரண்டாவது கணவர் பாலிவுட் இயக்குனர் தான், அவருக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்திருக்கிறது இப்போது சமந்தா பாலிவுட் இயக்குனரை காதலிப்பதால் அவருடைய மனைவியை அந்த இயக்குனரும் விவாகரத்து செய்யப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரவி வருகிறது. இதற்கு மேலும் வலு கொடுக்கும் வகையில் இயக்குனர் ராஜ் நிதி மோர்வின் தோளில் சாய்ந்த படி எடுத்த புகைப்படங்களையும் சமந்தா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருந்தார்.
இயக்குனர் மனைவி பதிவு
இது குறித்து செய்திகள் பரவி வருவதை தொடர்ந்து இயக்குனர் ராஜ் ராஜ் மனைவி சியாமளி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் என்னை பற்றி நினைப்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், பேசுபவர்களுக்கும், எழுதுபவர்களுக்கும், சந்திப்பவர்களையும் அன்புடன் வாழ்த்துகிறேன் என்று அதில் கூறியிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலானது.
சமந்தா மேனேஜர் விளக்கம்
அதுபோல சமந்தா சுபம் என்கிற திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஒன்பதாம் தேதி திரைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து சமந்தாவும் ராஜ் நிதிமோர்ரும் மும்பையில் வீடு ஒன்றில் தனியாக வசித்து வருவதாகவும் விரைவில் இருவரும் ஜோடியாக மும்பையில் குடியேற இருப்பதாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால் இந்த செய்திகள் அனைத்தையும் சமந்தாவின் மேனேஜர் மறுத்திருக்கிறார்.
வதந்தி
சமந்தா காதல் வதந்திகள் பற்றி அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். சமந்தா பற்றி பரவி வரும் எந்த செய்திகளும் உண்மை இல்லை என்றும், அதோடு சமந்தா விரைவில் இதற்கெல்லாம் பதில் கொடுப்பார் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் சமந்தா செய்து கொண்டிருக்கும் செயலுக்கும் அவருடைய மேனேஜரின் விளக்கத்திற்கும் சம்பந்தமே இல்லையே என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே சமந்தா குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது. சமீபத்தில் அவர் கதாநாயகியாக எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை என்றாலும் இப்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications