மகள் டாக்டர், மகன் வெளிநாட்டில் படிப்பு.. அது மட்டுமல்ல, 35 வருட உதவியாளருக்கு சரத்குமார் செய்த உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமார் தன்னிடம் உதவியாளராக இருக்கும் முத்து என்பவருக்கு செய்த உதவிகள் குறித்து அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் சரத்குமார் தமிழ் சினிமாவில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் தான் இருந்து வருகிறார். இவருக்கு மட்டும் வயதே ஆகாதா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. 70 வயதை கடந்த பிறகும் அதே இளமையோடு அவர் இருக்கிறார். அதோடு பிட்னஸிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வரும் சரத்குமார் சமீப காலமாக தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

Sarathkumar vijay tv

சரத்குமார் சமீபத்தில் நடித்த 3 பிஹெச் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு தேவயானி தான் ஜோடியாக நடித்திருக்கிறார். அதோடு இவர்களுடைய மகனாக சித்தார்த் நடித்திருக்கிறார். சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் நடுத்தர குடும்பத்தை பற்றி தான் இந்த படம் இருந்து வருகிறது.

இந்த திரைப்படம் தியேட்டரில் வரவேற்பு பெற்று வரும் நிலையில் பிரமோஷனில் சரத்குமாரோடு சேர்ந்து அவருடைய பட குழுவினரும் ப்ரோமோஷனில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஒளிபரப்பாகும் தியேட்டர்களுக்கு திடீர் விசிட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் பிஹைன் உட்ஸ் சேனலில் இந்த திரைப்படம் குறித்து பல விஷயங்களை சரத்குமார் பகிர்ந்து இருந்தனர்.

அப்போது கே எஸ் ரவிக்குமாரிடம் தன்னுடைய திரை அனுபவங்களை சரத்குமார் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது சரத்குமார் உடன் 35 வருடங்களாக உதவியாளராக இருக்கும் முத்து என்பவர் குறித்து கே எஸ் ரவிக்குமார் பேசி இருந்தார். தன்னிடம் உதவியாளராக இருக்கும் சரத்குமார் அவருடைய குழந்தைகளின் கல்வி செலவை பார்த்து கொள்கிறாராம். இப்போது உதவியாளரின் மகள் பல் மருத்துவராக இருக்கிறாராம். அதேபோல மகன் பிரான்ஸில் பேஷன் டிசைனிங் படித்துக் கொண்டிருக்கிறாராம்.

உதவியாளரின் பிள்ளைகள் இவ்வளவு படிப்பதற்கு முக்கிய காரணம் நடிகர் சரத்குமார் தான். அவர் என்னையும் அவருடைய வீட்டில் ஒருவராகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் அவரால் தான் என்னுடைய குழந்தைகளின் படிப்பை கவனிக்க முடிகிறது என்று அந்த பேட்டியில் முத்து பேசியிருந்தார். பொதுவாக யாரேனும் ஒரு நிறுவனத்திலோ அல்லது தனி நபரிடமோ வேலை பார்க்கிறார்கள் என்றால் அந்த நிறுவனம் அல்லது தனி நபரிடம் தங்களுக்கு பாதுகாப்பு மற்றும் மரியாதை கிடைப்பதால் தான் பல வருடங்களாக தொடர்ந்து வேலை பார்க்க முடியும்.

சரத்குமாரிடம் ஒரு உதவியாளர் 35 வருடங்களாக வேலை பார்க்கிறார் என்றால் அவருக்கு மரியாதையையும், அவருக்கான அடையாளத்தையும் கொடுப்பதால்தான் ஒரு இடத்தில் இத்தனை வருடங்களாக அவர் வேலை பார்த்திருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+