அப்போ மகாலட்சுமி, இப்போ திவ்யா ஸ்ரீதர் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுத்தும் அதே "சீரியல் நடிகர்”

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது சின்னத்திரையில் பரபரப்பாக பேசி கொண்டிருக்கும் செய்தியாக திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னாவ் இடையே இருக்கும் பிரச்சனை இருந்து வருகிறது.

சாதாரணமாக வீட்டில் நடக்கும் குடும்ப சண்டையை தற்போது மீடியா முன்பு பலரும் பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டதற்கு காரணம் சீரியல் நடிகர் தான் என்று அர்னாவ் கூறியிருக்கிறார்.

தன்னுடைய நண்பனாக இருந்து வந்த சீரியல் நடிகர் ஈஸ்வர்தான் தன்னுடைய மனைவி இவ்வளவு பிரச்சனை செய்வதற்கு காரணம் என்று ஈஸ்வரர் மீது குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

குவியும் குற்றசாட்டுகள்

குவியும் குற்றசாட்டுகள்

கேளடி கண்மணி சீரியலில் மூலமாக தமிழ் சீரியலில் அறிமுகமான திவ்யா ஸ்ரீதர் மற்றும் தற்போது செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்துவரும் அர்னாவ் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் தற்போது அவர்களுடைய வீட்டில் புயல் அடித்துக் கொண்டிருக்கிறது. சின்னத்திரை ரசிகர்கள் வட்டாரத்தையே குழப்பமடைய செய்யும் வகையில் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். இதில் யார் செய்வது சரி என்று யோசிக்க முடியாமல் தான் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

சண்டைக்கான காரணம்

சண்டைக்கான காரணம்

திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னாவ் இருவரும் கேளடி கண்மணி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே காதலித்து வந்ததாகவும், அதற்கு பிறகு ஒரே வீட்டில் ஐந்து வருடமாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆனால் தற்போது சமீபத்தில் தான் இவர்கள் திருமணத்தை முடித்து இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தான் இவர்கள் வீட்டில் பிரச்சனை பஞ்சாயத்து கிளம்பி இருக்கிறது. அர்னாவ் தன்னோடு சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகையுடன் நெருங்கி பழகி வருவதாக திவ்யாவிற்கு செய்திகள் சென்று இருக்கிறது. இதனால் இதை பற்றி அர்னாவ்விடம் திவ்யா கேட்ட பிறகு தான் இவர்களுக்குள் சண்டை தோன்றியிருக்கிறதாம்.

நண்பனால் ஏற்பட்ட பிரச்சனை

நண்பனால் ஏற்பட்ட பிரச்சனை

வீட்டிற்குள் நடந்து வந்த சண்டை இப்போது சமூக வலைத்தளத்திலும் மீடியா முன்பும் பயங்கரமாக வெடித்திருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய மனைவி இப்படி எல்லாம் செய்கிற ஆளே கிடையாது. தன் மீது அதிகமான பாசம் வைத்திருப்பவர். ஆனால் நான் நண்பராக நினைத்த ஈஸ்வர் தான் திவ்யாவிற்கு பின்னால் இருந்து இப்படி எல்லாம் செய்ய சொல்லி கொண்டிருக்கிறார் என்று அர்னாவ் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். திவ்யாவிற்கு ஈஸ்வரரை ஆரம்பத்தில் தெரியாதாம். அர்னாவ்வின் நண்பர் தான். அதனால்தான் தன்னுடைய நண்பர் என்று ஈஸ்வரரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதற்கு பிறகு தான் இவர்கள் வீட்டில் பிரச்சனை என்று அர்னாவ் கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் நல்ல நண்பனாக இருந்தார். னால் இப்பொழுது என்னையே மிரட்டிக்கொண்டு இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

சீரியல் நடிகைகளுக்கு இவரால் பிரச்சனையா

சீரியல் நடிகைகளுக்கு இவரால் பிரச்சனையா

ஏற்கனவே சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியின் வாழ்க்கையிலும் இதே ஈஸ்வரனால் தான் பிரச்சனை ஏற்பட்டது. ஈஸ்வர ரோடு சீரியலில் ஒன்றாக நடிக்கும் போது மகாலட்சுமிக்கும் இவருக்கும் தப்பான உறவு இருப்பதாக ஈஸ்வரரின் மனைவி போலீசில் மகாலட்சுமியையும் சேர்த்து போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார் அப்போது ஈஸ்வரர் கூட ஜெயிலுக்கு சென்று விட்டு தான் வந்திருந்தார். அதற்கு பிறகு மகாலட்சுமி எங்கள் இருவருக்கும் அப்படி ஒரு தப்பான உறவு இல்லை என்று விளக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்து இப்போது ரவீந்திரரை திருமணம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் சின்னத்திரை நடிகையின் வாழ்க்கையில் இவரே பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்து வருகிறார் என்று நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+