For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தப்பான செயலியை டவுன்லோடு செய்துட்டேன்.. ஆபாச போட்டோ, மிரட்டல்.. சீரியல் நடிகை கண்ணீர் வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: தயவு செய்து புது எண்களில் இருந்து வரும் எந்த செயலியையும் டவுன்லோடு செய்யாதீர்கள் என சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன் கண்ணீர் மல்க ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன் பாரதி கண்ணம்மா, சுந்தரி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு தப்பான செயலியை டவுன்லோடு செய்ததால் சந்தித்த பிரச்சினை குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன் கண்ணீரூடன் வெளியிட்ட வீடியோவில், எல்லோருக்கும் வணக்கம். என்னுடைய வாட்ஸ் ஆப் கான்டாக்டில் இருக்கும் எல்லோருக்கும் இந்த மெசேஜ். என்னுடைய போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து வேறு ஒரு எண்ணிலிருந்து என் போன் கான்டாக்ட்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 6 மோசம்! என்னை கூப்பிட்டு ஏமாத்திட்டாங்க! பிக்பாஸ் ரகசியத்தை உடைத்த நடிகை அபிநயா ஸ்ரீபிக்பாஸ் சீசன் 6 மோசம்! என்னை கூப்பிட்டு ஏமாத்திட்டாங்க! பிக்பாஸ் ரகசியத்தை உடைத்த நடிகை அபிநயா ஸ்ரீ

மெசேஜ்

மெசேஜ்

இது எப்படி நடந்தது என்பது குறித்து நான் சொல்கிறேன். ஏனென்றால் என்னை போல் யாரும் இந்த தவறை செய்யக் கூடாது என்பதற்காக சொல்கிறேன். செப்டம்பர் 11ஆம் தேதி எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதாவது எனக்கு 5 லட்சம் ரூபாய் வந்ததாக ஒரு மெசேஜ் வந்தது. அதில் இருந்த லிங்கை கிளிக் செய்தேன். அந்த லிங்கை கிளிக் செய்தவுடனேயே ஒரு செயலி என் மொபைலில் டவுன்லோடு ஆனது. அதற்கு அடுத்த நிமிடமே என்னுடைய போன் ஹேக் ஆகிவிட்டது. இது எனக்கு தெரியவில்லை. பிறகு 3, 4 நாட்கள் கழித்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் நான் லோன் வாங்கியதாகவும் அந்த லோன் பணத்தை கட்டுமாறும் எனக்கு மெசேஜ் வந்தது.

லோன்

லோன்

அதுவும் 5000 ரூபாய்க்கு நான் லோன் வாங்கியதாக போன்கால்கள், மெசேஜ்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. நீங்கள் ரூ 5000 செலுத்தவில்லை என்றால் உங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டுவிடுவோம் என மிரட்டல்கள் வந்தன. அது போல் ஆடியோவிலும் ஆபாசமாக பேச ஆரம்பித்தார்கள். நான் சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளேன்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இதனிடையே என்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை என்னுடைய போன் கான்டாக்ட்ஸ்களுக்கு அனுப்பிவிட்டார்கள். என்னுடன் இருக்கும் நபர்களுக்கு நான் எப்படிப்பட்டவர் என்பது தெரியும். என்னுடைய பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் சென்றுவிட்டது. என்னை பற்றி அவர்களுக்கு தெரியும். நான் இனி நிரூபிக்க வேண்டியதில்லை.

சைபர் கிரைம்

சைபர் கிரைம்

ஆனால் எத்தனை தப்பான செயலியை நான் டவுன்லோடு செய்துவிட்டேன். நான் பொதுமக்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் தயவு செய்து தெரியாத எண்ணில் இருந்து வரும் போன் கால்களையும் எடுக்காதீர்கள். செயலிகளையும் டவுன்லோடு செய்யாதீர்கள். சைபர் கிரைம் போலீஸில் கேட்டுக் கொண்டது என்னவென்றால், இது போல் ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுங்கள், உங்களை போல் எத்தனையோ பெண்கள் இது போன்ற செயலிகளில் சிக்கியுள்ளார்கள். எத்தனையோ பேர் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என சைபர் கிரைம் கேட்டுக் கொண்டதால் இந்த வீடியோவை போட்டுள்ளேன். எனது கான்டாக்ட்களுக்கு ஏதாவது புகைப்படம் வந்தால் தயவு செய்து ரிப்போர்ட் என்ற பட்டனை அழுத்துங்கள். அதன்பிறகு அவர்களால் வேறு யாருக்கும் அனுப்ப முடியாது. இவை எல்லாம் இந்தியாவை சேர்ந்த எண்கள் கிடையாது. ஐபி அட்ரஸ் மாறிக் கொண்டே இருக்கிறது. எனக்கு 20, 25 எண்களில் இருந்து மெசேஜ்கள் வந்தன. எல்லாமே ஆஸ்திரேலியா, இலங்கை, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தது என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

English summary
Serial Actress Lakshmi Vasudevan releases emotional video about loan app scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X